Tag Archive: புத்தக வாசிப்பு

அழியா அழல்

  பொன்நிற தாழை மடல்களுக்குள் புகுந்துகொண்ட தன் சகோதரர்களை போல் அதுவும் அன்னை என்றெண்ணி காட்டு தீயில் புகுந்தழிகிறது. மறுபிறப்பில் சந்திர வம்சத்து அரசனாக பிறக்கும் வரம் பெற்ற உசகன் மண்ணில் சந்தனுவாக பிறக்கிறான். அவன் அன்னைக்காக அவளின் அரவணைப்பிற்காக ஏங்கிக்கொண்டே இருக்கிறான். அவன் கங்கா தேவியிடமும் சத்தியவதியிடமும் கூட முட்டி முட்டி அதைத்தான் தேடி திரிந்தானோ? அழியா அழல் – முதற்கனல் பற்றி சுனீல் கிருஷ்ணன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/55887

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், கடந்த பல வருடங்களாகவே கேட்கப்பட்டு வந்த கேள்விதான். புத்தக வாசிப்பு குறைந்து கொண்டே வருகிறதே. நல்ல வாசகர்கள் கூட நேரமின்மையாலும் பிற ஊடகங்களினாலும் வாசிக்கும் அளவு மிகவும் குறைந்து விட்டது. இங்கிருந்து எழுத்து எங்கு செல்லும்? எப்போதாவது தெரிந்தவர் வீட்டிற்கு வந்தால் அவர் கேட்கும் கேள்வி, ‘ஓ இதற்கெல்லாம் உனக்கு நேரம் இருக்கிறதா?’ அது ஒரு எரிச்சலூட்டும் கேள்வி. சென்ற புத்தக கண்காட்சியின் போது (சென்னை) கையில் 1000 ரூபாய் வைத்திருந்தேன். உள்ளே நிழைந்தவுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8357