Tag Archive: புத்தக மதிப்புரைகள்

அழியா அழல்

  பொன்நிற தாழை மடல்களுக்குள் புகுந்துகொண்ட தன் சகோதரர்களை போல் அதுவும் அன்னை என்றெண்ணி காட்டு தீயில் புகுந்தழிகிறது. மறுபிறப்பில் சந்திர வம்சத்து அரசனாக பிறக்கும் வரம் பெற்ற உசகன் மண்ணில் சந்தனுவாக பிறக்கிறான். அவன் அன்னைக்காக அவளின் அரவணைப்பிற்காக ஏங்கிக்கொண்டே இருக்கிறான். அவன் கங்கா தேவியிடமும் சத்தியவதியிடமும் கூட முட்டி முட்டி அதைத்தான் தேடி திரிந்தானோ? அழியா அழல் – முதற்கனல் பற்றி சுனீல் கிருஷ்ணன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/55887

மதிப்புரைக்கு ஓர் இணையதளம்

தமிழ் புத்தக மதிப்புரைகளை எல்லாம் ஓர் இடத்தில் திரட்டுவதற்காக ஒரு  வலைப்பூவை  பாஸ்கி கண்ணன் என்ற வாசகர் அமைத்திருப்பதாக மின்னஞ்சலில் தெரிவித்தார். அதில் விஷ்ணுபுரம் பற்றிய மதிப்புரை முதலில் அளிக்கப்பட்டிருந்தது. அந்நாவலை இன்னமும் வாசிக்காத வாசகர்களுக்கு எளிதில் அதை அறிமுகம் செய்வதாக இருந்தது அந்த மதிப்புரை.   http://baski-reviews.blogspot.com/ அதற்கு கரிகாலன் -ராஜா என்பவர் இட்டிருந்த எதிர்வைனையும் சிறப்பானவை. என்னிடம் ஒரு பின்னூட்டம் இட கோரினார்கள். இட்டேன் இங்கே ஒரு சின்ன விஷயம். பல இணையதளங்களில், வலைப்பூக்களில் என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6306