Tag Archive: புதுமைப்பித்தன்

ஊட்டி முகாம் 2012 – பகுதி 2

காலையமர்வில் ஜடாயுவின் கம்பராமாயண உரை. ஜடாயு கம்பராமாயணப்பாடல்களை மரபான முறையில் பாடிக்காட்டவும் செய்தார். கம்பராமாயணம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலியவற்றின் இயல்பான நீட்சியாக அமைந்திருப்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டியபடியே இருந்தார். ஜடாயு அதன்பின் கடலூர் சீனு அழகிரிசாமி பற்றி பேசினார். தான் நேரடியாக அறிந்த இரு வாழ்க்கையனுபவங்களைச் சொல்லி அழகிரிசாமியின் கதைகளுக்கு வந்த கடலூர்சீனு அழகிரிசாமியின் உலகம் பெரும்பாலும் குழந்தைகளினாலானது என்றார். அழகிரிசாமி நேரடியாக வாழ்க்கையில் இருந்து பெற்ற அனுபவங்களை எந்தவகையான கொள்கைகளும் கோட்பாடுகளும் கலக்காமல் சொல்ல முயல்கிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27608/

பிறழ்வெழுத்து

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். பாரதி, கல்கி போன்றவர்களின் படைப்புகளைப் படித்தே வளர்ந்ததாலோ என்னமோ, என்னைப் பொறுத்தவரையில் எழுத்து மனிதர்களிடையே நேர்மறையான மாற்றங்களைத் தோற்றுவிப்பதற்கே என்ற எண்ணம் ஆழ வேரூன்றி இருக்கிறது. சமீபத்தில் “டிரான்ஸ்க்ரேசிவ் பிக்சன்” என்ற சொற்றொடரைப் படிக்க நேர்ந்தது. தமிழில் இத்தகைய படைப்புகள் வந்துள்ளனவா? இத்தகைய படைப்புகள் ஏதேனும் சமூக நன்மையை    அளிக்கவல்லனவா? அல்லது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு உத்தியாகவே இத்தகைய நாவல்கள் எழுதப்படுகின்றனவா? உங்களின் கருத்தைக் கூறுங்களேன்? நன்றி கணேஷ் நியூ டெல்லி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21260/

ராமாயணம்-கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு மகாபாரதத்தைத் தழுவி வந்த பல கதைகளை நாவல்களாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்து வந்துள்ளேன். ஆனால், ராமாயணத்தைத் தழுவிய புத்தகங்களை இதுவரை நான் அறிந்ததில்லை. இருந்தால் சொல்லவும். அனுமனின் தரப்பில் இருந்து கதை சொல்வது போலவோ, ராவணனின் தரப்பில் இருந்து கதை சொல்வது போலவோ, அந்த மாதிரிப் புத்தகங்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ இருந்தால் சொல்லுங்கள். Regards Suresh Kumar http://crackedpots.co.in/ எனக்குத்தெரிந்து ராஜாஜியின் சக்ரவர்த்தித் திருமகன் மட்டுமே ராமாயணம் சார்ந்து தமிழில் எழுதப்பட்டுள்ளது. அகலிகை கதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21745/

பாரதி விவாதம் -6 – இறை,உரைநடை

ஜெ, ’பாரதியின் இறையணுக்கம் மிக முக்கியமான கூறு.வெறும் தோத்திரம் செய்யுள் என்று புறந்தள்ள முடியாத தீவிரத்தன்மை கொண்டவை அவரது ஆன்மீகப் பாடல்கள்’என்னும் முத்தையாவின் கருத்தை நானும் உடன்படுகிறேன்.விநாயகர் நான்மணிமாலை அதற்கு ஏற்றதொரு உதாரணம்.இலக்கிய,தத்துவ தளங்களில் பல ஆழமான அர்த்தப் பரிமாணங்களைக் கண்டடைவதற்கான வாயிலைத் தனது விநாயகர் நான்மணிமாலையின் வழி திறந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான் பாரதி. இயற்கை சார்ந்த..ஆன்மீகம் சார்ந்த கருத்துக்களை மையப்படுத்துகையில் பாரதியின் உரைநடையும் கூடக் கவித்துவம் பெற்றுவிடுவதைக் காண முடிகிறது.சிட்டுக் குருவியைப் போல ‘விட்டு விடுதலை’யாகி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21550/

புதுமைப்பித்தன் இன்று…

புபி இப்போதும் இருட்டிலேதான் இருக்கிறார் என்கிறீர்களா? எனக்கென்னவோ அப்படி தோன்றவில்லை.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7812/

» Newer posts