Tag Archive: புதுமைப்பித்தன்

எழுத்தாளர் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், நலமா? புதுமைப்பித்தன் மீ.ப.சோமுவிற்கு எழுதிய கடிதங்கள் நூல்வடிவில் வந்துள்ளனவா என்பது எனக்குத் தெரியாது. சில கடிதங்களின் பகுதிகள் இருக்கும் இரு கட்டுரைகளை இங்குக் காணலாம்: இவற்றைப் படிக்கும்போது எனக்குத் தோன்றிய சில கேள்விகள்: கடிதங்களை எழுதியவர்கள் அவை ஒருநாள் நூலாகும்/ அல்லது கட்டுரைகளில் வரும் என்று தெரிந்தால் அவற்றை எழுதியிருப்பார்களா? அல்லது அதே முறையில் எழுதியிருப்பார்களா? ஐயம்தான். ( அப்படி எழுதினவர்கள் யாரேனும் உண்டா?) எழுதியவர் உயிருடன் இருக்கும்போது, அவருடைய அனுமதி பெற்று வெளிவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57381

துன்பக்கேணியின் பின்புலம்

தமிழகத்தில் இருந்து பல்லாயிரம்பேர் புலம்பெயரக் காரணமாக இருந்த பெரும் பஞ்சங்களைப்பற்றிய இலக்கியப்பதிவுகள் மிகமிகக் குறைவு. சொந்த அனுபவம் என்னும் கோழிமுட்டை வட்டத்தை விட்டு வெளியே வரமுடியாத ‘பதிவு’ எழுத்தாளர்களின் இயலாமையே அதற்குக் காரணம். மிகக்குறைந்த வருடங்களே எழுதிய புதுமைப்பித்தன் அனைத்து வகையிலும் அவ்வெல்லைகளை உடைத்துத் திறந்து வெளிப்பட்ட மேதை. அவர் எழுதிய துன்பக்கேணிதான் அவ்வகையில் சொல்லப்படவேண்டிய முதல் படைப்பு. அக்கதையின் பின்புலம் பற்றிய ஓர் அரிய ஆய்வு

Permanent link to this article: https://www.jeyamohan.in/55682

அழியாக் கதைகள்

பால்ஸாக் என்ற பேரை நான் கேள்விப்படுவது கல்லூரி முதலாண்டு படிக்கும்போது என் வணிகவியல் பேராசிரியரான பேரா மனோகரன் அவர்களிடமிருந்து. நான் கையில் வைத்திருந்த அலக்ஸாண்டர் டூமாவின் பிளாக் ட்யூலிப் நாவலைப் பார்த்துவிட்டு ‘இந்த மயித்த எல்லாம் எதுக்குடே படிக்கே? எளவு ஒரு மாப்பசானையும் பாள்ஸாக்கையும் படிச்சால்லா எலக்கியம் பிடிகெடைக்கும்?’ என்றார். அன்று வாசித்த மாப்பஸானும் பால்ஸாக்கும் இன்றும் என் நினைவில் நிற்கும் எழுத்தாளர்கள். பலகதைகளை திரும்ப என்னால் வாசிக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவை நினைவில் நீடித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/49018

நாஞ்சில்நாடனின் ஆசிரியன்குரல்

இனிய ஜெயம், முதிர்மரத்தின் இன்கனி வாசித்தேன். சென்றவாரம் ஓர் இலக்கியத் தோழமை வசம், நாஞ்சிலின் சமீபத்திய கதைகளின் கொண்டாட்ட அனுபவம் அளிக்கும் வாசிப்பு இன்பம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். கதைகளின் உள்ளும் புறமும் ஆசிரியனின் குரல் ஓங்கி ஒலிப்பது, ஒரு பலவீனம் இல்லையா? நுட்பம், குறிப்புஉணர்த்தல் மற்றும் கலை அமைதி என்பவைதானே இது நல்ல கதை என்பதன் அளவுகோலாகக் கொள்கிறோம்? ஜெயகாந்தன் கதைகளில் அறத்தின் குரலாக ஆசிரியர் குரல் ஒலித்தாலும், வடிவம் மற்றும் கலை அமைதி இவற்றை அக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48709

வலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்

கு.ப.ராஜகோபாலனின் ஒரு பழைய கதையில் [கனகாம்பரம்- தொகுப்பு] ஒருவன் கும்பகோணத்தில் தன் நண்பனை தேடிச்செல்கிறான். நண்பனுக்கு அப்போதுதான் திருமணமாகியிருக்கிறது. இவன் அங்கே செல்லும்போது நண்பன் இல்லை. அவனுடைய இளம் மனைவி மட்டும் தனியாக இருக்கிறாள். பெரிய அழகி அவள். அவள் இவனை வரவேற்று காபி போட்டுக் கொடுக்கிறாள். கணவன் நாளைதான் வருவான் என்கிறாள். இவனுக்கு கும்பகோணத்தில் செல்வதற்கு ஓர் இடமில்லை. என்னசெய்வதென்று தெரியாமல் இருக்கையில் அவளே மாடியில் தங்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறாள். அவள் சமைத்துப்போட்டதைச் சாப்பிட்டுவிட்டு இவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47508

ஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…

இப்போது எனக்கு வரக்கூடிய கடிதங்களில் பத்துக்கு ஒன்பதும் எழுத்தாளர்கள் எப்படியெப்படியெல்லாம் அடக்கமாக இருக்கவேண்டும் என்றும், பணிவே எழுத்தாளனுக்கு உயர்வுதரும் என்றும் அறிவுரை சொல்லக்கூடியவை. எவருக்கும் இலக்கியம், எழுத்து என எந்த அறிமுகமும் இருப்பதாகத் தெரியவில்லை. என்னையே இப்போதுதான் கேள்விப்படுகிறார்கள் என்று தோன்றியது. இருந்தும் ஏன் அறிவுரை சொல்கிறார்கள்? ஒரு அரசியல்வாதிக்கோ தொழிலதிபருக்கோ ஆலோசனை சொல்வார்களா? மாட்டார்கள்.ஏனென்றால் அவர்களை இவர்கள் அண்ணாந்து பார்க்கிறார்கள். எழுத்தாளர்களை குனிந்து பார்க்கிறார்கள். ‘எழுத்தாளர்கள் தன்னைப்பற்றி உயர்வாகச் சொல்லக்கூடாது’ என்றார் ஒருவர். ‘தன்னைப்பற்றி உயர்வாகச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41758

மு.வ-வும் புதுமைப்பித்தனும்

அன்புள்ள ஜெயமோகன், முவவின் எக்ஸ்ரே என்ற பதிவினைப் பார்வையிட்டேன். நீங்கள்தான் தப்பாகச் சொல்லிவிட்டீர்கள். மாலனின் இணையதளத்திலே முழுக்கதையும் அப்படியே இருக்கிறது. அந்தக்கதை மாலன் எழுதிய ’புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே’ தான். அது புதுமைப்பித்தன் எழுதிய கடவுளைச் சந்தித்த கந்தசாமிப்பிள்ளை என்ற கதையின் இரண்டாம்பாகமாக எழுதப்பட்டது. அதைப்பற்றி அந்தகதையிலேயே குறிப்பு உள்ளது. இந்த மாதிரி தவறு கண்டுபிடிக்கும்போது அவசியமான பரிசோதனைகளை நீங்கள்தான் செய்யவேண்டும். தகவல்களை பார்க்கவேண்டும். மனதில்தோன்றுவது போல எழுதக்கூடாது இரா.பிரபு அன்புள்ள பிரபு, மிக்க நன்றி. நான் தவறாகச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41174

நான் பைத்தியக்காரனா?-மாப்பசான்

நான் பைத்தியக்காரனா? அல்லது பொறாமை பிடித்தவனா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கொடும் துன்பத்திலிருக்கிறேன். நான் செய்தது குற்றம்தான். ஆனால், நான் அனுபவிக்கும் கிறுக்குத்தனமான பொறாமை, காதலில் ஏமாற்றம், தாங்க முடியாத வலி இதெல்லாம் யாரையும் குற்றம் செய்யத் தூண்டாதா? இந்தப் பெண்ணை நான் கிறுக்கன் போல் காதலித்தேன். அப்படித்தானா? உண்மையில் அவளை நான் விரும்பினேனா? இல்லவே இல்லை. என் உள்ளமும் உடலும் அவள் வசமிருந்தன. அவளுக்கு நான் ஒரு பொம்மை. தன் புன்னகையால், தன் புனித …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37387

வாழும் கரிசல் – லட்சுமணப்பெருமாளின் புனைவுலகம்

கிராமங்களை நினைக்கும்போதெல்லாம் எனக்கு குளத்துக்கரை மரம் நினைவுக்கு வரும். கிராம வாழ்க்கை எப்போதுமே நிஜமும் நிழலுமானது. வாழ்க்கை ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருக்க கூடவே வாழ்க்கையைப்பற்றிய கதைகளும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. என்ன ஆச்சரியமென்றால் நிஜம் விரைவிலேயே மறைந்துபோகிறது. கதைகள் மட்டும் அழியாமல் எஞ்சுகின்றன. சொல்லப்போனால் கிராமம் என நாம் சொல்வது அந்த கிராமத்தின் நில அளவை விட, மக்கள் எண்ணிக்கையை விட பிரம்மாண்டமான கதைகளின் குவியலைத்தான். கிராமம் முடிவிலாது பொருட்களை அளிக்கும் மந்திரவாதியின் தொப்பி. கிராமியக்கதைத் தொகுதியின் சிறியபகுதியே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27828

புதுமைப்பித்தனின் மரணங்கள் – ராஜகோபாலன்

நண்பர்களே! 1900க்குப் பின்னர் உருவாகி வந்த தமிழ் இலக்கிய ஆளுமைகளில் அதிகமும் பேசப்பட்ட இருவராக பாரதியையும், புதுமைப்பித்தனையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். குறிப்பாக தமிழின் சிறுபத்திரிகைக் குழுக்களின் சொல்லாடல்கள் மூலமாக மீண்டும் பிறந்து வந்தவர் புதுமைப்பித்தன். தமிழிலக்கியத்தின் புதுயுக எழுத்தாளர்களின் முன்னனோடிகளில் ஒருவரான அவரது எழுத்துக்கள் மீது விமர்சனங்களும், வாசிப்புகளும் உள்ளன. இந்தக் கலந்துரையாடல் புதுமைப்பித்தனின் படைப்புகளை திறனாய்வு நோக்கிலோ, விமரிசகனின் பார்வையிலோ முன்வைக்க முற்படவில்லை. ஒரு வாசகனாக புதுமைப்பித்தனின் படைப்புகள் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றி மட்டுமே பேச …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27656

Older posts «

» Newer posts