Tag Archive: புதியவாசகர் சந்திப்புகள்

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு- கடிதங்கள்-3

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020 ஈரோடு வாசகர் சந்திப்பு -கடிதம்   அன்புள்ள ஆசிரியர்க்கு, ஈரோடு புதிய வாசகர் சந்திப்பின் வெற்றி என்பது உங்களுடன் இரு நாட்கள் தங்கியிருந்தது தான். உங்களின் பதிவுகளை நூல்களை படிக்கும் போது பிறக்கும் உத்வேகத்தில் பலமுறை நான் நினைத்ததுண்டு நீங்கள் ஏதேனும் குருகுலம் ஆரம்பித்தால் முதல் ஆளாகப் போய்ச் சேரவேண்டும் என்று. அங்கேயே கிடந்து சேவை செய்து கற்றறிந்து புதிய ஆளாக வரவேண்டும் என்று. வாசகர் சந்திப்புக்கான இவ்விரு நாட்கள் அவ்வாசையை தீர்த்துக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130104/

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,கடிதம்-2

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020   அன்புள்ள ஜெ,   நான் எப்பொழுதும் என்னை குழப்பிக்கொள்வதில் தேர்ச்சிபெற்றவன். அந்த குழப்பங்களில் உழன்று அதனூடாக தன்னிரக்கம் அடைவதில் ஒருவித சுகம் பெற்றவன். அதனால்தான் ஒரு தெளிவை நோக்கியோ அல்லது என்னை கலைத்து போட செய்யும் ஓர் நிகழ்வை நோக்கியோ செல்வதில் பெரும் தயக்கத்தை கொண்டிருந்தேன். இச்சந்திப்பின் அறிவிப்பு வந்த நாள் முதல் அதில் கலந்துகொள்ளும் நாள் வரை என்னுள் தலைவிரித்தாடிய தயக்கத்தை உடைத்து, சந்திப்பில் கலந்துகொண்டதையே என்னுள் நிகழந்த பெரும் வெற்றியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130093/

ஈரோடு வாசகர் சந்திப்பு -கடிதம்

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020   அன்புள்ள ஜெ,   திங்கட்கிழமைகள் என்பது மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு ஒருவித கலக்கத்தை அளிக்கக்கூடியவை. ஆனால் இந்த திங்கட்கிழமை மிக உற்சாகமாக உணர்கிறேன் , அதற்கு முக்கிய காரணம் ஈரோடு வாசகர் சந்திப்பு 2020. கடந்த இரண்டு நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளை மனம் அசைப்போட்டபடி லயித்திருக்கிறது .உங்களுடனும் வாசகர் சந்திப்புக்கு வந்த நண்பர்களுடனும் கழித்த கடந்த 2 நாட்கள் என் வாழ்வில் மறக்கமுடியாதவை ஜெ.   அதிகாலை பேருந்து நிலையத்திற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130063/

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020

ஒரு செயலைத் தொடங்கும்போது அதை தொடர்ச்சியாக, ஓர் இயக்கமாக, நடத்தவேண்டும் என்ற திட்டம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. இருபத்தைந்தண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் குரு நித்யா இலக்கிய அரங்கு, பன்னிரண்டு ஆண்டுகளாக நடந்துவரும் இந்த இணைய தளம், பத்தாண்டுகளாக நடந்துவரும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் எல்லாமே ஓர் உற்சாகத்தில் தொடங்கியவை. எதிர்காலத்தை நெடுந்தொலைவுக்கு எண்ணும்போது ஒரு மலைப்பும், பெருஞ்சுமையோ என்னும் தயக்கமும் உருவாகிவிடும். அப்போதைய ஊக்கத்தைக் கொண்டே தொடங்குவதும், மேலும் மேலும் ஊக்கத்தை உருவாக்கியபடி தொடர்வதும் என் வழக்கம். வெண்முரசும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130057/

ஊட்டி புதியவர்களின் சந்திப்பு

சென்னையில் 11-2-2016 அன்று குமரகுருபரன் கவிதை வெளியீட்டு நிகழ்ச்சி முடிந்து மறுநாள் 12-2-2016 அன்று காலை கிளம்பி விமானத்தில் கோவைக்குச் சென்றேன். மதியம் பன்னிரண்டுமணிக்கு கோவையை அடைந்து அங்கிருந்து காரில் நண்பர்களுடன் ஊட்டிக்கு. ஊட்டியில் இரண்டாவது புதியவர்களின் சந்திப்பு. ஊட்டிகுருகுலத்திற்கு வருடம் ஒருமுறைமட்டும் இச்சந்திப்புக்காக வருவது என்று ஆகிவிட்டிருக்கிறது. முன்பெல்லாம் வருடம் நான்குமுறையாவது வந்துகொண்டிருந்தேன். குரு நித்யா இருந்தபோது மாதம் இருமுறை வந்து மூன்றுநாட்கள் வீதம் ஆறுநாட்கள் அங்கிருந்தேன். இந்த விலக்கம் இயல்பானதுதான், என்றாலும் வருத்தம் அளிப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84693/

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 2

ஜெவை சந்தித்ததால் இழந்தது ஒரு சோப்பு டப்பா, துண்டு மற்றும் அன்டர்வேர் (அதை அடக்கம் செய்தவர்களுக்கு நன்றி கூற கடைமைபட்டுள்ளேன்). பெற்றது சில திட்டுக்கள், வாழ்க்கையின் உன்னத நிமிடங்கள், நிறைய சந்தோசம், இலக்கியம், அரசியல், கேளிக்கை இன்னும் பல. ஒருவித பயம் காரணமாகவே இந்த இன்னும் பல என்ற வார்த்தையை பள்ளியிலிருந்து பயண்படுத்துகிறேன். நானும் எனது நன்பர்களும் அப்துல் கலாம் அவர்களை சந்திக்கலாம் என முடிவெடுத்து கடந்த வருடம் ஜுலை முப்பதாம் தேதி அவரது ஊருக்கு சென்றோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84656/

வாசகர் சந்திப்புகள்

புதியவாசகர்களின் சந்திப்புகள் ஊட்டியில் 13,14 ஆம் தேதியும் ஈரோட்டில் 6.7 ஆம் தேதிகளிலும் நிகழவிருக்கின்றன. இருசந்திப்புகளிலும் முழுமையாகவே பங்கேற்பாளர்களை நிறைத்துவிட்டோம். கொள்ளளவுக்கு அதிகமாகவே. எனவே இடமில்லை மேலும் வரவிரும்புபவர்களின் கடிதங்கள் உள்ளன. வழக்கம்போல மேமாதம் ஊட்டியில் இலக்கியமுகாம் நிகழும். இது அனைவருக்குமானது. அதற்கு மேல் இன்னொரு புதியவர்களின் சந்திப்பை வேறெங்காவது அமைக்கமுடியுமா என பார்க்கிறேன் அனைவருக்கும் நன்றி  

Permanent link to this article: https://www.jeyamohan.in/83565/

புதியவாசகர் சந்திப்புகள்,ஊட்டி,ஈரோடு -அறிவிப்பு

  அன்புள்ள நண்பர்களுக்கு புதியவாசகர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சிகளை முழுமைசெய்துவிட்டோம். இரு நிகழ்ச்சிகள். ஊட்டி, ஈரோடு ஊட்டி முதலில் கடிதம்போட்டவர்களுக்கான நிகழ்ச்சி ஊட்டியில் பிப்ரவரி 13, 14 [சனி ஞாயிறு] நாட்களில் நிகழும். சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும். மறுநாள் ஞாயிறு மதியம் ஒருமணியுடன் முடிவடையும். இடம் நாராயணகுருகுலம் ஃபெர்ன் ஹில் மஞ்சணகொரே கிராமம் ஊட்டி தொடர்புக்கு நிர்மால்யா, 09486928998 விஜய்சூரியன் 9965846999 [ஊட்டியில் குளிர் இருக்குமென்பதனால் ஸ்வெட்டர் மப்ளர் போன்றவை கொண்டுவரவும். போர்வை, மெத்தை, ஹீட்டர் நாங்கள் ஏற்பாடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83339/