Tag Archive: புதியவாசகர்களின் கடிதங்கள்

புதியவாசகர்களின் கடிதங்கள் 10

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் ஈரோடு சந்திப்புக்கு பதிவு செய்துகொண்ட சந்தோஷத்தில் இருக்கிறேன்..உங்கள் இணையதளத்தில் பழைய பதிவுகளில் எதையோ தேடப்போன போது..பி.கே பாலகிருஷ்ணனை நீங்கள் முதன் முதலில் சந்தித்ததை பற்றி எழுதியிருக்கிறீர்கள்..(பதிவு.டிச.2010)..அதை படித்த உத்வேகத்தில் இக்கடிதத்தை  எழுதுகிறேன். இலக்கியத்தின் மீது உக்கிரமான வேட்கையில் நீங்கள் அலைந்து திரிந்து ஒவ்வொரு எழுத்தாளரையும் சந்தித்திருக்கிறீர்கள் எங்களுக்கு இப்பொது ” புதியவர்கள் சந்திப்பு” அமைந்திருப்பதை மிக அற்புதமான தருணமாக நினைக்கிறோம்.. அதற்காக நேரம் ஒதுக்கியிருக்கிறீர்கள். வெண்முரசு மற்றும் மற்ற படைப்புகளை எவ்வளவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83562

புதியவாசகர்களின் கடிதங்கள்-7

அ அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு, உங்களுடனான எனது வாசிப்பு அனுபவங்களை தனி கடிதமாகவே எழுத எண்ணியிருந்தேன். இன்று சென்னையில் நடந்த வெண்முரசு விவாதத்தில் பங்கு பெற்று வந்த உடனேயே உங்களுக்கு கடிதம் எழுத முடிவு செய்தேன். நீங்கள் எனக்கு அறிமுகம் ஆனதே ஒரு தற்செயல் நிகழ்வு தான். s.ராமகிருஷ்ணன் அவர்களுடைய எழுத்துக்களை வாசித்துக் கொண்டிருந்த போது உங்கள் வலைத்தளத்திற்கு வர நேர்ந்தது. அது ஒரு மறக்க முடியாத தருணம். காந்தி பற்றிய கட்டுரை அது. நீங்கள் உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83491

புதியவாசகர்களின் கடிதங்கள் 6

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம் நலமறிய விழைவு. ஆசிரியர்களால் ஆன இந்த உலகில், நாம் மனதிற்கருகே அடிக்கடி கவனிக்கும் ஆசான்கள் ஒரு சிலர் இருக்கின்றனர். அவர்கள் அவ்வப்போது, அல்லது உற்ற சமயம் பார்த்து ஒவ்வொரு ஜன்னலாகத் திறந்து நம் உலகின் பரப்பை பெரிதாக்கிக் கொண்டே போகிறார்கள். அவர்கள் காண்பிக்கும் அறிவுகளில் உள்ள பன்முகத்தன்மையைக் கண்டு மனம் முதலில் மயங்கியும், நாளாக நாளாக அந்த பன்முகத்தன்மையில் மறைந்திருந்த ஒருமைத்தன்மை வெளித்தெரிகையில் மனம் உலகை விட்டு மெல்லப் பிரபஞ்சத்திற்கும் தாவுகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83337

புதியவாசகர்களின் கடிதங்கள் 5

  அன்பின் ஜெ   வணக்கம்,இதுவே உங்களுக்கு முதல் கடிதம். நானும் இங்கே கடிதம் எழுதும் பல பேரை போன்ற மன நிலையையே உடையவன்.உங்கள் அருகில் அமர்ந்திருந்த பொழுதும் உங்களிடம் பேசுவது இயலாத காரியமாகவே எனக்கு அமைந்தது.எனக்கு உங்களின் படைப்பில் மிகவும் பிடித்தது,நான் மிகவும் விரும்பி படித்தது, உங்களின் ஆஸ்திரேலியா பயண கட்டுரையான “புல்வெளி தேசம்”.எனது சாதனை என்னவென்றால் அந்த புத்தகத்தில் உங்கள் கையொப்பம் பெற்றது.இன்று காலையில் உங்கள் வலை பக்கத்தில் புதியவர்களுக்கு ஆன சந்திப்பு குறித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83335

புதியவாசகர்களின் கடிதங்கள் 4

அன்புள்ள ஜெ சில நாள்களுக்கு முன் தோல்வியால் சோர்ந்திருந்த ஒரு இரவில் கடந்த காலங்களை வீணடித்ததை நினைத்து வருந்திக் கொண்டிருந்த பொழுதில் உங்களை நினைத்துக்கொண்டேன். அது தந்த மன நிறைவையும் நம்பிக்கையும் வார்த்தைகளைக் கொண்டு என்னால் சொல்ல இயலவில்லை. பின்னிரவுக்குப் பின்னும் மனம் நெகிழ்ந்து கண்ணீருடன் நினைத்துக் கொண்டேன். உங்களை வாசித்ததற்குப் பின் நான் கண்டு கொண்ட எத்தனை எத்தனை உலகங்கள், சிந்தனைகள், மனிதர்கள்,எழுத்தாளர்கள், புத்தகங்கள், என நினைக்க நினைக்க முடிவற்று வந்து கொண்டே இருக்கின்றன. உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83332