Tag Archive: புதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு – உதகை

ஊட்டி புதியவர்களின் சந்திப்பு

சென்னையில் 11-2-2016 அன்று குமரகுருபரன் கவிதை வெளியீட்டு நிகழ்ச்சி முடிந்து மறுநாள் 12-2-2016 அன்று காலை கிளம்பி விமானத்தில் கோவைக்குச் சென்றேன். மதியம் பன்னிரண்டுமணிக்கு கோவையை அடைந்து அங்கிருந்து காரில் நண்பர்களுடன் ஊட்டிக்கு. ஊட்டியில் இரண்டாவது புதியவர்களின் சந்திப்பு. ஊட்டிகுருகுலத்திற்கு வருடம் ஒருமுறைமட்டும் இச்சந்திப்புக்காக வருவது என்று ஆகிவிட்டிருக்கிறது. முன்பெல்லாம் வருடம் நான்குமுறையாவது வந்துகொண்டிருந்தேன். குரு நித்யா இருந்தபோது மாதம் இருமுறை வந்து மூன்றுநாட்கள் வீதம் ஆறுநாட்கள் அங்கிருந்தேன். இந்த விலக்கம் இயல்பானதுதான், என்றாலும் வருத்தம் அளிப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84693

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 2

ஜெவை சந்தித்ததால் இழந்தது ஒரு சோப்பு டப்பா, துண்டு மற்றும் அன்டர்வேர் (அதை அடக்கம் செய்தவர்களுக்கு நன்றி கூற கடைமைபட்டுள்ளேன்). பெற்றது சில திட்டுக்கள், வாழ்க்கையின் உன்னத நிமிடங்கள், நிறைய சந்தோசம், இலக்கியம், அரசியல், கேளிக்கை இன்னும் பல. ஒருவித பயம் காரணமாகவே இந்த இன்னும் பல என்ற வார்த்தையை பள்ளியிலிருந்து பயண்படுத்துகிறேன். நானும் எனது நன்பர்களும் அப்துல் கலாம் அவர்களை சந்திக்கலாம் என முடிவெடுத்து கடந்த வருடம் ஜுலை முப்பதாம் தேதி அவரது ஊருக்கு சென்றோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84656

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 1

மதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு ஈரோடு புதியவர் சந்திப்புக்கு அனுமதித்தமைக்கு நன்றி. கலைத்துப் போடப்படுதலை அனுபவித்தேன். தயாரிப்புகளும் இலக்கிய வாசிப்பனுபவமும்   இல்லாததால், ஒருவித சுய வெறுப்பு வளர்ந்தது. உங்களுக்கு வாசகவிரிவின் புதிய ஊற்றுகளை நேரடியாகக் கண்டுகொள்ள சந்திப்பு உதவியிருக்கலாம். சிந்திக்க, வாசிக்க, கவனிக்க வேண்டிய முறைகளே தெரியாமல் ஒரு கல்விமுறையைக் கடந்து வந்திருக்கிறோம் என உணரும் போது, மூளை கசக்கிறது. இருப்பினும் எதுவும் வீணாவதில்லை; காலம் உட்பட என ஆழ்மனது சொல்கிறது உண்மையில் உங்களின் தத்துவ, ஆன்மிக ஊற்றுகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84522

புதியவர்களின் சந்திப்பு ஈரோடு

  ஈரோட்டில் என் நண்பர் வழக்கறிஞர் செந்தில் புதியதாக வாங்கியிருக்கும் பண்ணை வீட்டில் புதியவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். உண்மையில் ஊட்டியில் ஒரு சிறிய சந்திப்புதான் என் மனதிலிருந்தது. அதற்கு அறுபது பேருக்குமேல் வர விரும்பினர். அங்கே நாற்பத்தைந்துபேர் அதிகபட்சமாக தங்கலாம். ஆகவே ஈரோட்டில் முன்னதாகவே ஒரு நிகழ்ச்சி ஏற்பாடுசெய்தோம். இப்போது மேலும் முப்பது பேர் வர விரும்பியிருக்கிறார்கள். அவர்களுக்காக இன்னொரு புதியவர்களின் நிகழ்ச்சியை நடத்தவேண்டும், நேரமில்லை. ஈரோட்டில் காலை ஐந்து மணிக்கு ரயிலிறங்கினேன். நண்பர்கள் கிருஷ்ணன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84451

புதியவர்களின் சந்திப்பு -2

நண்பர்களுக்கு ஊட்டி புதியவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை அறிவித்த நாற்பது நிமிடங்களுக்குள்ளாகவே இருபத்தெட்டுபேர் பதிவுசெய்துவிட்டனர். அதற்குமேல் என்றால் பெரிய ஏற்பாடுகள் தேவையாகும். . சற்று விரிவாக்கம் செய்து முப்பதாக்கியிருக்கிறோம். அதற்குமேல் போனால் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருக்கவே அவகாசமிருக்காது. அத்தனைபேரும் மிக இளையவர்கள். ஆகவே முந்தைய வாரம் அதாவது வரும்  பெப்ருவரி   5,6  ஆம் தேதிகளில் இன்னொரு சந்திப்பை ஈரோட்டில் என் நண்பர் சென்னை செந்திலின் பண்ணைவீட்டில் வைத்துக்கொள்ளலாமா என நினைக்கிறேன். ஊட்டிக்கு வராதவர்களுக்காக. இருபதுபேர் அங்கே தங்கலாம். விருப்பமிருப்பவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83264

புதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு – உதகை

  அன்புள்ள நண்பர்களுக்கு, தொடர்ச்சியாக புதியவாசகர்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். வழக்கமான சந்திப்பு நிகழ்ச்சிகளில் தெரிந்த நண்பர்கள் சூழ இருப்பதனாலும் முன்கூட்டியே ஒரு விவாதம் நடந்துகொண்டிருப்பதனாலும் புதியவாசகர்கள் என்னை வந்து இயல்பாகச் சந்திப்பது கடினமாக இருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே முற்றிலும் புதியவாசகர்களுக்காக ஒரு சந்திப்பு ஏற்பாடுசெய்தாலென்ன என்னும் எண்ணம் வந்தது. இதில் என் நண்பர்களான பழைய வாசகர்கள் கலந்துகொள்ளக்கூடாது. நிகழ்ச்சி அமைப்பாளர்களைத்தவிர. அவர்களும் சந்திப்புகளில் ஏதும் பேசக்கூடாது. அதிகபட்சம் ஓரிரு முறை வந்து முழுமையாக அறிமுகமாகாத வாசகர்களும் புதியவாசகர்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83049