Tag Archive: புதியவர்களின் கதைகள்

கிறிஸ்டோபர்

என்னைக்குறித்து கிறிஸ்டோபர் ஆன்றணி, கணிதத்தில் முதுகலை. பிறந்ததும் வளர்ந்ததும் வள்ளவிளை என்னும் கேரளாவை ஒட்டிய அரபிக்கடல் சார்ந்த தமிழக கடற்கரை கிராமம். கடந்த 16 வருடங்களாக கணினி மென்பொருள் துறையில் வேலை. திருமணமாகி நான்கு குழந்தைகள். பெரியவன் ஐந்தாம் வகுப்பு படிக்கின்றான். இலக்கிய வாசிப்பில் நுழைந்தது ஜெமோ வழியாக. அது போல் எழுத பழகிக்கொண்டிருப்பதும் நமது குழுமத்தில் மட்டுமே.

Permanent link to this article: https://www.jeyamohan.in/40471/

புதிய வாசல்

இந்த தளத்தில் வெளிவந்த புதியவர்களின் கதைகள் முதல் தொகுப்பு நற்றிணை பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழில் எழுதவரும் புதியவர்களின் கதைகளுக்குரிய வெவ்வேறு கதைக்களங்களும் வெவ்வேறு மொழிநடைகளும் ஒரே நூலில் பார்க்கக்கிடைப்பது இந்நூலின் சிறப்பாக இருக்குமென நினைக்கிறேன். சமகாலத் தமிழின் பொதுவான புனைவுத்தன்மைக்கான ஒரு துளிச்சான்றாக இது இருக்கலாம் நற்றிணை வெளியீடாக வந்துள்ளது இந்நூல் அன்புள்ள ஜெ புதியவர்களின் கதைகள் நூலாக வெளிவரும் என்று சொல்லியிருந்தீர்கள். அடுத்த வரிசை புதியவர்களின் கதைகள் வெளிவர வாய்ப்புண்டா? அன்பு அன்புள்ள அன்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42825/

புதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்

அன்புள்ள ஜெயமோகன், வனக்கம். ’மீண்டும் புதியவர்கள் கதைகள்’ வரிசையில் வெளிவந்த பதினோரு இளம் எழுத்தாளர்களின் படைப்புகளையும் படித்துவிட்டேன். வேலைச்சுமைகளின் காரணமாகவும் இடைவிடாத பயணங்களின் காரணமாகவும் விட்டுவிட்டுத்தான் படித்தேன். முதல் வரிசையைப்பற்றி எழுதியதைப்போலவே இவ்வரிசையைப்பற்றியும் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நினைத்தேனே தவிர, செயல்படுத்த ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தேன். நேற்று கிடைத்த சில மணி நேர ஓய்வில்தான் எழுதி முடித்தேன். எழுதும் முன்பு மீண்டுமொருமுறை எல்லாக் கதைகளையும் புத்தம்புதிதாகப் படிப்பதுபோல மறுபடியும் படித்துமுடித்தேன். படிக்கப்படிக்க பல புதிய அழகுகள் புலப்பட்டபடியே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42021/

கடலாழம் -கடிதம்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு, என் பெயர் டார்வின், நான் அரபிக்கடலோரம் உள்ள கடற்கரை கிராமத்தை சேர்ந்தவன். நான் உங்கள் வலைத்தளத்தை கடந்த ஒரு வருடமாகப் படித்து வருகிறேன். உங்களுடைய ஊமைச்செந்நாய், மத்தகம் மற்றும் அறம் சிறுகதைகள் என்னை வெகுவாக கவர்ந்துள்ளன. தங்கள் வலைத்தளத்தில் வந்துள்ள புதியவர்களின் கதைகளைப் படித்தேன். எல்லாமே நன்றாக வந்துள்ளது சரியான தேர்வு. குறிப்பாக Christopher இன் கடல் ஆழம் சிறுகதை எங்கள் மீன்பிடி வாழ்கையை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. கதை மிகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41526/

புரியாதகதைகள் பற்றி….

அண்ணா லூசிஃபரின் கதை எனக்குப் புரியவில்லை, மன்னிக்கவும், அது என்ன வகைக் கதை, எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், ப்ளீஸ் விளக்கிச்சொல்லுங்கள். கார்த்திக் ஓசூர் அன்புள்ள கார்த்திக், நவீன இலக்கியம் பற்றி தமிழில் பேச ஆரம்பித்து நூறாண்டுகளாகின்றன. அன்று முதல் இன்றுவரை ‘புரியாமை’ என்ற விஷயத்தை விளக்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ‘இந்தப்படைப்பு புரியவில்லை’ என்ற வரியை படைப்புமீதான குற்றச்சாட்டாக முன்வைப்பதே தமிழின் பொதுவாசகர்களின் வழக்கம். அதையொட்டிய எரிச்சல்கள், நக்கல்கள், வசைகள் வெளிப்படுகின்றன. வணிக எழுத்தில் ஊறியவர்களின் பொது எதிர்வினையே அதுதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41185/

நோயும் சீர்மையும்-கடிதம்

அன்புள்ள ஜெ, Grace and Grit நான் மிகமிக விரும்பிப்படித்த ஒரு புத்தகம். என்னுடைய வாழ்க்கையில் நான் திருப்புமுனையாக நினைக்கக்கூடிய ஒரு புத்தகம் என்று சொல்லுவேன். என்னுடைய அம்மா கான்சரில் இறந்துபோனாள். அந்த அனுபவங்கள் மிகவும் கொடியவை. என்னை spiritually demoralize செய்த அனுபவங்கள் அவையெல்லாம். என்னால் மாதக்கணக்கிலே சரியாகத் தூங்கமுடிந்ததே கிடையாது. ரொம்பநாட்களுக்குப்பிறகு கூட அடிக்கடி கனவுகள் கண்டு முழித்துக்கொள்ளுவேன். நான் ஒரு சரியான cynic ஆக மாறிவிட்டேன். எதிலுமே ஒரு skeptic பார்வை வந்துவிட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41305/

சிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்

அன்புள்ள ஜெ, சீர்மை குறுநாவலை இரண்டுமுறை வாசித்தேன். மீண்டும் Grace and Grit ஐ வாசித்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று A theory of everything வாசித்தேன். கடந்த நான்குநாட்களாக இந்தக்குறுநாவலிலேயேதான் உட்கார்ந்திருக்கிறேன். எல்லாவகையிலும் ஒரு மாஸ்டர்பீஸ். அரவிந்த் இரண்டு உலகங்களை பக்கம்பக்கமாக வைத்துப்பார்க்கிறார். ஒன்று உணர்ச்சிகளின் உலகம். அது அப்படியே நேரடியாக வாழ்க்கையின் அனுபவங்களுடன் இணைந்திருக்கிறது. அதிலே துக்கமும் அலைக்கழிப்புகளும் மட்டும்தான் காணப்படுகின்றன. இன்னும் சரியாகச் சொல்வோமென்றால் அதில் உள்ளது ஒரு குறையுணர்ச்சி மட்டும்தான்.நோய், மரணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41314/

சீர்மை- யின் யாங்-கடிதம்

ஜெ, சீர்மை குறுநாவலை வாசித்து முடித்ததும் இதை எழுதுகிறேன். ஆசிரியரே சொல்வதுபோல இது யின் – யாங் கின் கதை . சிந்தனைகள் X உணர்ச்சிகள் நோய் X ஆரோக்கியம் என்று அவர் அந்த கறுப்புவெள்ளைக் கட்டங்களை போட்டுக்கொண்டே செல்கிறார். அதில் முக்கியமானது ஆண் X பெண் என்ற யின் – யாங் தான். கென்னும் த்ரேயாவும் ஒரேசமயம் முழுமையை நோக்கிச் செல்லுவதாக கதை சொல்கிறது நான் இரண்டுமூன்று புள்ளிகளை வைத்து இந்தக் குறுநாவலைத் தொகுத்துக்குக்கொண்டேன். த்ரேயா நோயின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41319/

கதைத்தேர்வின் அளவுகோல்

கதைகள் பற்றிய என் அளவுகோல் என்ன என்பது இக்கதைகளை வாசிப்பவர்களுக்கே எளிதில் தெரியும். துரதிருஷ்டவசமாக விமர்சனங்களை முன்வைப்பவர்கள் எதையுமே வாசிப்பதில்லை. இருந்தாலும் புதியவர்களுக்காக ஒரு விளக்கம். * தமிழில் இருவகைக் கதைகள் உள்ளன. என்னதான் வேறுபாடுகளைக் குழப்பி மழுப்பினாலும் அது அப்பட்டமான உண்மை. முதல்வகைக் கதைகள் பிரபல வணிக இதழ்களாலும் அவை முன்வைக்கும் கேளிக்கை எழுத்தாளர்களாலும் எழுதப்படுபவை. அதை வணிக எழுத்து அல்லது கேளிக்கை எழுத்து என்கிறோம். இன்னொன்று வாழ்க்கையை நோக்கி எழுதப்படும் இலக்கியம். இந்தக் கதைவரிசை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41143/

சீர்மை-கடிதங்கள்

அன்புள்ள ஜெ ‘சீர்மை’ இது எழுத வேண்டுமே என்று யோசித்து, வாசிப்பு அனுபவத்தை திரட்டி, உருவாக்கிய எழுத்தாக தெரியவில்லை.. உங்களை குறித்து சொல்வதை போல் , இது பீறிட்டு வந்த எழுத்து. எழுத்தாளனை மீறி நிகழ்ந்த ஒன்று… சீர்மையை குறித்து பேசும் இந்த நாவலை நாம் கச்சிதம் என்று பேசலாம்.. வடிவ நேர்த்தி, அளவு, கதை கூறல், சம்பவங்கள் அல்லது தகவல்கள் என அனைத்தும் கச்சிதம். நாவல் எவ்வளவோ சொல்கிறது, ஆனால் எல்லாமே கச்சிதமாய் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41241/

Older posts «