Tag Archive: புதியவர்களின் கடிதங்கள்

புதியவர்களின் கடிதங்கள் -15

மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, உங்கள் படைப்புகள் ஒவ்வொன்றாகப் படித்து வருகிறேன். “அறம்”,  “புறப்பாடு”  வாசித்தேன்.  பின்னது நாவல் இல்லை. இருப்பினும் bildungsroman வகை நாவலின் சாயலில் இருப்பது போல் தோன்றியது.  நம் சூழ்நிலையில்   பெண் எழுத்தாளர்களுக்கு இப்படி பயணங்களோ, அனுபவங்களோ சாத்தியமில்லை. பாவம்! தங்களது “உலோகம்” படித்தேன். துப்பாக்கியை வருணித்திருந்த விதம் அருமையாக இருந்தது. அது போன்ற sleek ஆன, கைக்கு அடக்கமாக, வாகாக  இருக்கும் பொருள்களைப் பார்க்கும் போது உண்டாகும் உணர்வை அருமையாக வார்த்தைகளில் கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84071/

புதியவர்களின் கடிதங்கள் 14

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக உங்கள் எழுத்துக்களை வாசித்து வருகிறேன். உங்களுடைய எழுத்தும் இளையராஜாவின் இசையும் எனக்கு காட்டிய உணர்ச்சிகரமான தரிசனம் வேறு எந்த கலையும் எனக்கு காட்டியது இல்லை. சென்னையில் நடக்கும் வெண்முரசு விவாதக் கூட்டங்களில் பங்கெடுத்து இருக்கிறேன். உங்களுக்கு நிறைய கடிதம் எழுத வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் ஏதோவொரு தயக்கம் என்னுள் இன்று வரை இருந்து வருகிறது. ஓரிரு முறை எழுதியும் உள்ளேன். நான் வருடம் தோறும் என்னுடைய பிறந்தநாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84019/

புதியவர்களின் கடிதங்கள் 13

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, அறம் என்னும் தலைப்பின் ஈர்ப்பின் காரணமாக தங்களின் “அறம்” நூலை வாசித்தேன். அதுதான் என்னுள் எரியும் பெரும் தீயின் முதற்கனல் அதை ஏற்படுத்தியது பிரம்மம் என உறுதியாக இருக்கிறேன்.அந்தக்கணம் அர்ஜுனன் துரோணரை கண்டடைந்தபொழுது அடைந்த பேர் உவகையை நானும் அடைந்தேன். அறம் என் மனதில் சொல்ல முடியா பாதிப்பை ஏற்படுத்தியது.உடலில் கட்டுண்டள்ள என் ஆத்மாவின் விழைவின் காரணமாக புறப்பாடு படித்தேன்.புறப்பாடு நாவலில் உங்கள் நினைவுகளில் நான் வாழ்ந்தேன்.புறப்பாடு முடிந்தபொழுது எனக்குள் ஒரு வெறுமையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83874/

புதியவர்களின் கடிதங்கள் 12

  அன்பார்ந்த ஜெயமோகன் , வணக்கம். கல்யாணம் கட்டி கொடுக்கிற வயதில் பிள்ளைகளை வைத்துக் கொண்டு (என் வயது 53) ஏதோ வாசகர் சந்திப்பாம், இவர் போறாராம், சரியான ஜெய மோகன் பித்து பிடித்து அலையுது! என்ற என் மனைவியின் முணுமுணுப்பிக்கிடையே இதை இரவு 11 மணிக்கு எழுதுகிறேன். அது ஏன் இந்த வயசுலே புதிய வாசகர் என உங்கள் புருவங்கள் சிவாஜி பாணியில் உயர்வது என்னால் உணர முடிகிறது. காரணம்… ஏதோ காரணம் இல்லாத காரணத்தால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83737/

புதியவர்களின் கடிதங்கள் -11

  அன்புள்ள ஜெ , “புதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு – உதகை” பதிவு படித்தேன். வாசித்தப்பின் மிகுந்த புத்துணர்ச்சி. ஏன் என்று தெரியவில்லை. இலக்கிய வாசிப்பின் தொடக்க நிலையில் நிற்கிறேன். இதுவரை உங்களின் படைப்புகளில் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்”, “புல்வெளி தேசம் “, “நலம் – சிலவிவாதங்கள்”, “சிலுவையின் பெயரால்”, “அறம் சிறுகதைகள் ” படித்துள்ளேன். இது உங்களுக்கு சாதரணமாக தெரியலாம் ஆனால் உங்கள் எழுத்துக்கள் என்னுள் ஒரு புதிய மன உலகை திறந்தது. போக வேண்டிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83734/

புதியவர்களின் கடிதங்கள் 3

  அன்பு ஜெமோ அவர்களுக்கு தங்களின் ஈரோடு சந்திப்பு குறித்த வலையேற்றம் கண்டேன்.  தங்களின் 3வருட வாசகன் யானை டாக்டர் முதல் அறிமுகம் குமட்டலுடன் படித்து நானே அந்த வைத்தியனாய் மாறிய அனுபவமும் டாப்ஸ்லிப் சுற்றுலா நினைவுகளும் என்னை அலைக்கழித்தன.  மீண்டும் மீண்டும் உங்கள் தளத்தை கண்களும் கைகளும் துழாவியது.  நல்வாசிப்பு என்னில் நானே கண்டேன்.  நான் கோவைவாசியாதலால் உங்களுடைய வியாசர் உரை, கீதை உரை, சங்கரர் உரை நேரில் கேட்கும் பேறு பெற்றேன்.  ஈரோட்டில் தங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83329/

புதியவர்களின் கடிதங்கள் 2

அன்புடன்  ஆசிரியருக்கு   சந்திப்பு  குறித்த  பதிமூன்றாம் தேதி பதிவினை  பார்த்ததும்  உடனே  “நான்  வருகிறேன்” என சொல்லத்  தோன்றியது.  ஆனால்  எப்போதும்  குறுக்கே  நிற்கும்  தயக்கம்  தடுத்துவிட்டது. உங்களிடம்  சொல்ல  என்னிடம்  ஒன்றுமில்லை.  கேட்க  நிறையவே  இருக்கிறது.  ஈரோடு சந்திப்பு  நடைபெறும்  நாட்களில்  அலுவலக தணிக்கை  நடைபெறலாம்.  நான்  வேலை  செய்யும்  துறையில்  நானே  முதற்பொறுப்பாளன் என்பதால்  அந்நாட்களில்  இல்லாமல்  போனால் சில  எளிமையான  சிக்கல்களுக்கு  கூட  என்னை  அழைத்துக்  கொண்டே  இருப்பார்கள். மேலும்  காடு  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83327/

புதியவர்களின் கடிதங்கள்-1

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நான் சென்னயில் பணிபுரிகிறேன் . சொந்த ஊர் கும்பகோணம். புதியவர்களுக்கான சந்திப்பின் அறிவிப்பை பார்த்தேன். நிச்சயம் இந்த முறை கலந்துகொள்ள வேண்டுமென ஆவல் கொண்டுள்ளேன். சென்னையில் சில கூட்டங்களில் கூட்டத்தோடு கூட்டமாக உங்களோடு உரையாடியுள்ளேன். தனிப்பட்ட அறிமுகம் நிகழ வாய்க்கவில்லை. ஒரு வகையான ஆன்மீக தேடலில் அலைந்துகொண்டிருந்த பொழுதே உங்களை வந்தடைந்தேன் . உங்கள் இணையத்தில் எதேச்சையாக நுழைந்து நான் அறியாத ஒரு அறிவு உலகத்தோடு அறிமுகம் கொண்டேன் . உங்கள் இணையத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83324/