Tag Archive: புதியவர்களின் ஆக்கங்கள்

பயணம் பற்றி

அன்புள்ள சிவேந்திரன், உணர்ச்சிக் கொந்தளிப்பான ஈழக்கதைகளை வாசித்துப்பழகிய மனதுக்கு இந்த கதையில் உள்ள எளிமையும் அடக்கமும் ஆச்சரியமளிக்கின்றன. நேரடியான ஒரு சித்தரிப்பு வழியாக ஒரு காலகட்ட மாற்றத்தையே சொல்லிவிட முடிந்திருக்கிறது உங்களால். பெரும் அரசியல் போராட்டம், துக்கங்கள், இடப்பெயர்தல்கள் ஆகியவை ஒட்டுமொத்தமாக சமூக ஆழ்மனதில் என்ன நகர்வை உருவாக்கியிருக்கின்றன என்று தேடிச்செல்லும் பார்வை முக்கியமானது. மிக மெல்லிய ஒரு திசைமாற்றம் மட்டும்தானா அது என்ற எண்ணத்தை உருவாக்கும் கதை மனிதவாழ்க்கையை, சமூகவாழ்க்கையைப்பற்றி பலகோணங்களில் சிந்திக்கச்செய்கிறது. இளைஞர்களின் உலகைப்பற்றிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38428

வாசுதேவன் பற்றி

அன்புள்ள சுனீல் இந்தக்கதையின் சிறப்பு என எனக்குப்படுவது வலியை, நோயை அதன் தீவிரத்துடனும் அர்த்தமின்மையுடனும் சொல்லமுடிந்திருப்பதுதான். ஒட்டுமொத்தமாக என்ன என்ற வினாவுடனும் ஒன்றுமில்லை என்ற பெருமூச்சுடனும் முடிகிறது. அதை குழந்தையின் வாயால் சொல்லவைத்திருப்பதில் இருக்கிறது கதையின் உச்சம். ஒரு தொடக்கக்கதை என்ற அளவில் முக்கியமானது. ஆனால் கதையின் உடலில் சொல்லப்படவேண்டிய எவ்வளவோ உள்ளது. மரணத்தின் முன்னிலையில் வாழ்க்கை கொள்ளும் பலவிதமான உருமாற்றங்கள், சகஜநிலைகள், சமாளிப்புகள். ஜெ கதைகள் 12. பயணம் . சிவேந்திரன் [email protected] 11. வாசுதேவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38426

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ, எனக்கும் உரையாடலுக்கும் வெகு தூரம். அதுவும் ஒரு கதாசிரியனோடு உரையாடுதல் இன்னும் கடினம். ஓரளவுக்கு படிக்கும் பழக்கம் உள்ளவன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர். அதற்கும் மேல், வாசகர்களுடன் நீங்கள் உரையாடுவது எனக்கு எந்த கடிதம் எழுத உந்துதலாக இருக்கிறது. என்னால் படித்த கதைகளைப் பற்றி விவாதிக்கவோ, கருத்து கூறவோ முடியாது. GoodReads போன்ற வலைத்தளங்களில் நான் படித்த, படிக்கும் புத்தகங்கள் பற்றி பகிர்ந்தாலும், அவற்றை மதிப்பீடு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38601

கதைகள்- உத்திகள்-கடிதங்கள்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களது தளத்தில் வெளியான பன்னிரெண்டு கதைகளையும் வாசித்தேன். இந்த கதைகளில் ஒரு முக்கியமான பொது அம்சத்தை கவனிக்க முடிகிறது. உங்களது விமர்சன கோட்பாடுகளோடும் வரையறைகளோடும் மிக கச்சிதமாக பொருந்திப்போகிற சிறுகதைகளாகவே இக்கதைகள் இருக்கின்றன. நீங்கள் “புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள்” கட்டுரையில் நவீனத்துவ கதைகளுக்கென்று என்னென்ன அளவுகோல்களை முன் வைத்திருந்தீர்களோ அவற்றிலிருந்து எந்த வகையிலும் விலகி போகாதிருக்கும் இக்கதைகளைக் கொண்டு தமிழ் சிறுகதையின் இன்றைய நிலையை கணிக்க முடியுமா என்பது எனக்கு சந்தேகமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38570

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ , புதியவர்களின் ஆக்கங்கள் மற்றும் அதைப் பற்றிய விமரிசனங்கள் குறித்த தங்கள் கடிதம் படித்தேன்.ஒரு கதைக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுவது என்பது என் தலைமுறையின் வாசகர்களுக்கு ஏனோ அவ்வளவு உவப்பானதாக இல்லை. ஒரு படைப்பு நம்மில் ஏற்படுத்தும் பாதிப்பை புரிந்து கொள்ளவும் அதை உள்வாங்கிக்கொள்ளவும் ஒரு குறைந்த பட்ச கால அவகாசம் தேவை என்றே என் போன்ற பலர் நினைக்கிறோம். ஒன்றிரண்டைத் தவிர மீதி அனைத்துமே இன்றைய சிறுபத்திரிகைகளில் பிரசுரமாகும் சிறுகதைகளின் தரத்தைவிட சர்வசாதரணமாக மேலிருக்கிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38410

இந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். பன்னிரண்டு சிறுகதைகளையும் படித்துவிட்டேன். பன்னிரண்டுமே பன்னிரண்டு முத்துகள். எல்லாமே ஏதோ ஒருவகையில் என்னைக் கவர்ந்தன. கதைகள் முன்வைக்கப்பட்டிருக்கும் கோணங்களும் களங்களில் உள்ள புதுமையும் நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கின. படித்து சில நாட்கள் உருண்டோடிவிட்டன என்றாலும் ஏழெட்டு சிறுகதைகள் மனத்துக்குள்ளேயே வளையவந்தபடி உள்ளன. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இவற்றில் சில மறந்துபோனாலும் மூன்று கதைகளாவது நினைவிலேயே தங்கியிருக்கும். வெளிவரும் காலத்திலேயே இவற்றை நான் வாசித்தவன் என்கிற மகிழ்ச்சி எனக்குள் எப்போதும் இருக்கும். ”உறவு” பலவகைகளிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38516

பிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’ – இன்னொரு கடிதம்

ஜெ பிரகாஷ் சங்கரனின் வேஷம் நீங்கள் எழுதிய லங்காதகனம் கதையின் இன்னொரு வடிவம். improvisation என்று இன்னும் சரியாகச் சொல்லலாம். அல்லது அதற்கான எதிர்வினை என்று. லங்காதகனம் கதையில் கதகளிஆசான் இழிவுபடுத்தப்பட்டு சுருங்கி உயிர்வாழக்கூடிய ஒரு கலைஞன். எலியின் அசைவுகள் அவரது உடலில் இருந்தன என்று அதில் கதை சொல்லக்கூடியவன் சொல்கிறான்.அவர் உக்கிரமான அனுமாராக ஆவது என்பது ஒரு பரிணாமம். தன்னைத் துறந்து கலையாக ஆகிவிடுவது. வேஷம் மூர்த்தி உடலில் கூடுவது. அதை முழுமைப்படுத்த வேஷக்குறையை அழித்துக்கொள்கிறார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38267

பிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்

ஜெ, பிரகாஷ் சங்கரனின் வேஷம் கதை வாசித்தேன். கதைகள் எப்போதுமே வாழ்க்கையனுபவங்களின் தூண்டுதலில் இருந்துதான் வரும் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையிலே அப்படிக்கிடையாது. கதைகள் வேறுகதைகளில் இருந்து உருவாவதும் அதே அளவுக்கு காணப்படுகிறது. போர்ஹெஸ் அப்படிச் சொல்லியிருக்கிறார். தன்னுடைய எல்லா கதைகளுமே வேறு கதைகளில் இருந்து வந்தவைதான் என்று சொன்னார். சரியாகச்சொன்னால் தனக்கு கதைகள் முக்கியம் இல்லை மெட்ட்ஃபர்கள்தான் முக்கியம் என்று போர்ஹெஸ் சொன்னார். மெட்டஃபர்களை பிற கிளாஸிக் படைப்புகளில் இருந்து எடுத்துக்கொண்டு அதைவைத்துத்தான் தன்னுடையகதைகளை எழுதுவதாகச்சொன்னார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38271

கதைககள் கடிதங்கள் [பின்னூட்டங்களுடன்]

அன்புள்ள ஜெ, புதியவர்களின் கதைகளைப் பற்றி. காலம் தாழ்ந்த எதிர்வினை.மன்னிக்கவும்.செவிட்டில் அடிக்கிற மாதிரி சொன்னால் தான் உறைக்கும் போல, என்ன செய்ய. இது கதைகளைப் படித்து என் மனதிற்கு தோன்றிய கருத்துக்கள் தான். என் புரிதலில் போதாமை இருக்கலாம். ஆனால் இப்போது என் மனதில் பட்டதை அப்பிடியே சொல்வதுதான் ஆசிரியருக்கு செய்யும் நியாயம் என நினைக்கிறேன். இதுவரை படித்த கதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது தனசேகரின் உறவு. சற்றும் பாசாங்கற்ற கதை. வாசகனை பின்னே மூச்சிரைக்க ஓடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38445

சுனீல் கிருஷ்ணனின் ‘வாசுதேவன்’ -கடிதங்கள்

அன்புள்ள ஜெ சுநீல் கிருஷ்ணனின் வாசுதேவன் மனதை நெகிழ்வித்த கதை. ஏன் இப்படி உயிர்வாழவேண்டும் என்று நோயுற்ற பலரையும் நோக்கி நோயில்லாதவர்கள் கேட்பதைக் கண்டிருக்கிறேன். அந்தக்கேள்வியை எவரைப்பற்றியும் கேட்கலாம். எவருடைய கேள்விக்கும் அர்த்தம் கிடையாது என்பதை அந்தக்கதை உணரச்செய்தது. கதையிலே என்ன இருக்கிறதோ இல்லையோ மனித வாழ்க்கையின் அர்த்தமில்லாத கடும் துக்கம் பதிவாகி இருக்கிறது. வைத்தியனும் வேசியும் காணக்கூடிய மனிதர்களே வேறு என்று ஒரு பேச்சுவழக்கு உண்டு. வேசி மனிதனின் இச்சையை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறாள். வைத்தியன் வலியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38318

Older posts «