Tag Archive: புதியபாணித் திருமணம்

தேவதேவன் மகள் திருமணம்

மூன்று நாட்கள் சென்னையில் இருந்தபின் ரயிலில் திருச்சிக்குச் சென்றிறங்கினேன். அருண் ஓட்டலில் அலெக்ஸ் அறைபோட்டிருந்தார். ஆனால் அவர் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றிருந்தார். ஓட்டல் அறையில் காலை எட்டு மணிவரைக்கும் நன்றாகத் தூங்கினேன். அலெக்ஸ் வந்துதான் என்னை எழுப்பினார். நானும் அலெக்ஸும் மட்டும் பேசிக்கொண்டிருந்தோம். பொதுவாக எனக்குத் தஞ்சை, திருச்சி வட்டாரத்தில் இருந்து வாசகர்கடிதங்களே வருவதில்லை. சென்னையை விட்டால் கொங்குவட்டாரம்தான். அதன்பின் தேனி,பெரியகுளம் வட்டாரம். ஆகவே பிற ஊர்களைப்போல என்னைப்பார்க்க எவரும் வரவில்லை என்பது ஆச்சரியமளிக்கவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22559