Tag Archive: பீமசேனர்

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 61

பகுதி 13 : பகடையின் எண்கள் – 2 புலரியின் இருளும் குளிரும் எஞ்சியிருக்கையிலேயே பூரிசிரவஸ் விழித்துக்கொண்டான். முதல் எண்ணம் அவன் ஒரு படுகளத்தில் கிடப்பதாகத்தான். அவனிடம் மெல்லிய குரலில் எவரோ “இளவரசே இளவரசே” என்று சொல்லிக்கொண்டிருந்தனர். துயரம் நிறைந்த பெண்குரல். ஆனால் அவளை பார்க்க முடியவில்லை. அவன் கால்கள் துண்டுபட்டு அப்பால் மழையில் நனைந்தபடி கிடந்தன. அவை பனிக்கட்டி என குளிர்ந்திருப்பதை உணரவும் முடிந்தது. எங்கோ அருவி விழும் ஓசை. பின்னர் அது காற்றின் ஓசை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73525