குறிச்சொற்கள் பீமகர்

குறிச்சொல்: பீமகர்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 93

92. பொற்புடம் கேசினி சிறிய கிண்ணத்தை எடுத்து தமயந்தியின் முன்னால் வைத்து “அடுமனையிலிருந்து எடுத்துவந்தேன், அரசி. இது பாகுகரால் சமைக்கப்பட்ட ஊனுணவு” என்றாள். தமயந்தி அதை எடுத்தபோதே முகம் மலர்ந்து “கனிச்சாறிட்டு சமைக்கப்பட்டது. இது...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91

90. அலைசூடிய மணி சுபாஷிணி அறைக்குள் நுழைந்தபோது வெளியே பந்தலில் விறலி பாடத்தொடங்கியிருந்தாள். அந்தியாவதற்குள்ளாகவே அனைவரும் உணவருந்தி முடித்திருந்தனர். வாய்மணமும் பாக்கும் நிறைத்த தாலங்கள் வைக்கப்பட்டிருந்த ஈச்சையோலைப் பந்தலில் தரையில் ஈச்சம்பாய்கள் பரப்பப்பட்டிருந்தன. சிலர்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82

81. முகம்பரிமாறல் சேடியர் இன்னீரும் வாய்மணமும் விளம்பியபடி குனிந்து சுற்றிவந்தனர். அரசி உத்தரையிடம் தலையை அசைத்து விரல்காட்டி ஏதோ சொன்னாள். உத்தரை தலைகுனிந்து விழிகளை கம்பளத்தில் நிறுத்தி அமர்ந்திருந்தாள். அரசி மேலும் கடுமைகொண்ட முகத்துடன்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81

80. உள்ளொலிகள் உத்தரை அவ்வேளையில் அங்கு வருவாள் என்று முக்தன் எதிர்பார்க்கவில்லை. பிருகந்நளையின் குடில் வாயிலில் மரநிழலில் இடைக்குக் குறுக்காக வேலை வைத்துக்கொண்டு கையை தலைக்குமேல் கட்டி வானை நோக்கியபடி விழியுளம் மயங்கிக்கொண்டிருந்தான். அவள்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 79

78. காட்டுக்குதிரை ரிதுபர்ணன் அரியணையில் அமர்ந்திருக்க அவை நடந்துகொண்டிருந்தது. தன் மீசையை நீவியபடி அவன் அவைநிகழ்வுகளை கேட்டுக்கொண்டிருந்தான். சற்றுநேரத்திலேயே அவன் உள்ளம் முழுமையாக அதிலிருந்து விலகிவிட்டது. அவை தொடங்கியபோது அவன் ஆர்வத்துடன் உளம்கொண்ட செய்திகள்தான்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15

14. அணிசூடுதல் “நெடுங்காலம் காத்திருந்து அடையப்பட்ட மணவுறவுகள் பெரும்பாலும் நிலைப்பதில்லை” என்று பிங்கலன் சொன்னான். “ஏனென்றால் மானுடர் அறியும் காலமென்பது இழப்புகளின் அறுபடா தொடர். உலகியலில் இழப்புகளைக் கொண்டுதான் பெறுபவை அளவிடப்படுகின்றன. இங்கு ஒருவன்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14

13. அவைநிற்றல் விதர்ப்பத்தின் அரண்மனை மிகச் சிறியதென்று முன்னரே உரையாடல்களில் இருந்து புஷ்கரன் அறிந்துகொண்டிருந்தான். விதர்ப்பத்திற்கு வரும் வழியில் சுனைக்கரையில் ஓய்வெடுக்கையில் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். “இத்தகைய பெருநிகழ்வை அங்கெல்லாம் எப்படி நிகழ்த்த இயலுமென்று...

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-10

 9. ஊசலின் தாளம் அரசவையில் புலவர்களுடன் அமர்ந்து நூலாய்கையில், அவைப்பணிகள் முடித்து நீராட்டறைக்குச் சென்று உடலை சேடியரிடம் அளித்துவிட்டு அமர்ந்திருக்கையில், அணிபுனைந்து மஞ்சத்தறைக்கு செல்லும்போது, அவ்வப்போது அவன் எண்ணமே வந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு கணத்தில்...

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-8

7. அலையன்னம் ஒவ்வொரு நாளும் ஒரு முகமேனும் நளனின் கண்முன் வந்துகொண்டிருந்தது. அறியாது வந்து விழிமுட்டி பதைத்து விலகிக்கொள்பவை. மறைவிலிருந்து மெல்லிய அசைவென வெளிப்பட்டு நோக்குரசி இமை தாழ்த்தி முகம் சிவக்க அகல்பவை. உரக்க...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 52

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 3 கார்காலத்து முதல் மழை வருவதை ருக்மிணி வரதாவில்தான் நோக்கினாள். தெற்கே வரதாவின்மேல் ஒளியுடன் எழுந்த வான்விளிம்பில் இளங்கன்னத்தில் ஒட்டிய மயிரிழை எனத்தெரிந்த கோடு...