Tag Archive: பீத்தோவனின் ஆவி

பீத்தோவனின் ஆவி பற்றி…

அன்புள்ள வேதா பீத்தோவனின் ஆவி நல்ல கதை. சரளமான நடை. நுட்பமாகவும் மிகையில்லாமலும் அந்தப்பெண்மணியின் ஆளுமையையும் தோற்றத்தையும் பழகுமுறையையும் சொல்லியிருக்கிறீர்கள். அது சிறுகதையில் முக்கியமானது. பெரும்பாலும் சிறுகதை என்பது ஒரு மனிதர்தான். ஒரு புகைப்படச்சிமிட்டல்தான் அந்தப்பெண்மணிக்கு இசை என்பது வாழ்க்கை. வாழ்க்கையின் ஏதோ ஒரு கணத்தில் யாரோ ஆன ஒருவர் நம் வாழ்க்கையை நமக்கு உறுதிப்படுத்தித் தரவேண்டியிருக்கிறது. எனக்கு இத்தகைய அனுபவங்கள் ஏராளமாக உண்டு. என்னிடம் தன் வாழ்க்கையைச் சொல்லும் அன்னியர்கள் அவ்வாறு சொல்லும்போதே தங்கள் பதிலையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36398

பீத்தோவனின் ஆவி- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், நீண்ட இடைவெளிக்கு பிறகு (தொடர்ச்சியாக உங்கள் வலைத்தளம் படித்து வந்தாலும்), புதியவர்களின் சிறுகதைகளை சாக்கிட்டு கடிதம் எழுத முடிந்தது மகிழ்வைத் தருகிறது. பீத்தோவனின் ஆவி என்னை மிகவும் கவர்ந்தது. கலை பண்பாட்டுப் பின்புலத்தில் இரு வேறு துருவங்களில் இருக்கும் இருவருக்கிடையே ஏற்படும் தாற்காலிக சந்திப்பின் கணங்கள்; பெரிதும் உரையாடல்கள். அவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகள் – இசை அறிவு, மனித நேயம் மற்றும் சக மனிதர்களின் நேரம் மற்றும் விருப்பங்கள் மீதான நாகரிகம். கதை ஆரம்பித்ததும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38519

பீத்தோவனின் ஆவி,சோபானம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், வேதாவின் “பீத்தோவனின் ஆவி” படித்தேன். சேராவின் துக்கம் சரியோ தவறோ தெரியவில்லை. ஆனால், ஒரு அடிப்படை இசையறிவு கூட இல்லாத நானும் அதே உணர்வை அனுபவித்திருக்கிறேன். சேராவுக்கு பெயர் தெரியாத இந்துஸ்தானி பாடகனின் ஆலாபனை, எனக்கு மதுரை சோமுவின் “என்ன கவி பாடினாலும்”. http://www.youtube.com/watch?v=ZiiDf-HmkCE சம்பிரதாயங்களை நினையாமல் அனிச்சையாக “ஆஹா” என்பதும் வயலினுக்கு “சபாஷ்” சொல்வதும் மிகவும் இயல்பாக, தன்னைக் கரைத்துக் கொண்ட இரு கலைஞர்களின் வித்தை கேட்பவர்களையும் கரைக்கிறது. வண்ணதாசன் அவர்கள் முகநூலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38193

வேதா ,பீத்தோவனின் ஆவி – கடிதங்கள்

ஜெ, வேதா எழுதிய கதை பீத்தோவனின் ஆவி கதை வாசித்தேன். இந்தவரிசையில் இதுவரை வெளிவந்த கதைகளிலே இதுதான் சிறந்த கதை என்று நினைக்கிறேன். பலவகையிலும் முக்கியமானது இந்தக்கதை. இசையைப்பற்றிப்பேசுகிறது என்றாலும் இசையின் வழியாக இரண்டு நாகரீகங்களைப்பற்றிப்பேசுகிறது என்றே எனக்குப்படுகிறது. இந்தக்கதைக்குப்பின்னணியாக உள்ள சில பண்பாட்டு அம்சங்களைக் கவனித்தாகவேண்டும். நவ ஐரோப்பா என்பது சொல்லப்போனால் மூன்று இசைமேதைகளால் உருவாக்கப்பட்ட்து என்று சொல்வார்கள். என் நினைவு சரியென்றால் எலியட் அப்படிச் சொல்லியிருக்கிறார். மொசாத், பீத்தோவன், ஃபாக். பீத்தோவனின் ஆவி என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38144

புதியவர்களின் கதைகள் 6, பீத்தோவனின் ஆவி-வேதா

மினியாப்பொளிஸ் உள்ளூர் விமான நிலையம். அங்கும் இங்குமாக ஆட்கள் சிதறிக் கிடந்த கூட்டமில்லாத காத்திருக்கும் அறை. தடித்த கண்ணாடிச் சுவரின் முன் இணைகோடு வரிசைகளாய் நீண்டிருக்கும் காலி இருக்கைகள். கண்ணாடிச் சுவரின் உயரத்துக்கு வெளியே மேகங்கள் கவிந்த மங்கலான சாம்பல் நிற வானம். கீழே மிகப்பெரிய திறந்த வெளி மைதானம். ஒரு சரக்கு விமானம் இரையை விழுங்கி விட்டு பழகிய வழியில் திரும்பும் கிழப்பாம்பு போல ஊர்ந்து கொண்டிருந்தது . கூடத்தின் ஆளற்ற இருக்கையின் வரிசையில் எதிர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36394