Tag Archive: பி.ஏ. கிருஷ்ணன்

கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1

பொத்தை என்ற நன்னீர் மீனைப்பற்றி கிராமங்களில் அடிக்கடி பேசப்படும். சப்பையான தாடைகொண்ட சிறிய வகை மீன். ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாக வாழக்கூடியது. அமைதியான தெளிநீரில் சிறிய கூட்டங்களாகப் புழுப்பிடிக்க வரும். பறவைகளாலோ மனிதர்களாலோ ஆபத்து அருகே வந்தது என உணர்ந்தால் மொத்த மீன்கூட்டமும் சிறு அம்புகள் போல சேற்றுப்பரப்பில் தைத்து வாலைச் சுழற்றி நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டுவிடும். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளுக்கு ‘பொத்தைக்கலக்கி’ என்ற செல்லப்பெயர் ஊரில் உண்டு. கலக்குவது ஒரு ராஜதந்திர உத்தி. கலங்கலிலேயே வாழும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25545/

மருதுபாண்டியர் பற்றி

“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர். என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ” http://kalachuvadu.com/issue-128/page52.asp பி.ஏ.கிருஷ்ணன் மருதுபாண்டியர் பற்றி எழுதியிருக்கும் இக்கட்டுரை சமீபத்தில் நான் வாசித்த முக்கியமான ஆக்கம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/8022/

புலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல்

[புலிநகக் கொன்றை என்ற நாவலின் ஆசிரியர் பி ஏ கிருஷ்ணன் அவர்களுடன் ஜெயமோகன் நடத்திய மின்னஞ்சல் கடிதங்களில் தொகுப்பு இது. THE TIGERCLAW TREE என்ற பெயரில் பெங்குவின் வெளியீடாக வந்து பரவலாக கவனிக்கப்பட்ட இந்நூல் இப்போது தமிழில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது] அன்புள்ள கிருஷ்ணன் அவர்களுக்கு , சுந்தர ராமசாமி வீட்டில் உங்கள் நாவலின் கைப்பிரதியைக் கண்ட நினைவு. பிறகு ஆங்கில நாவலை என் நண்பர் ஒருவரிடமிருந்து வாங்கி சில அத்தியாயங்கள் படித்தேன். என்னால் ஆங்கிலத்தமிழ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19/

» Newer posts