Tag Archive: பிழை

பிழை, குருதி-கடிதங்கள்

என் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய இனியன் ஜெயமோகனுக்கு, காலம் இதழில், உங்களின் “பிழை” கதை படித்தேன். அறம் தொகுதியில் இடம்பெற வேண்டிய படைப்பு, சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். தனி மனித வாழ்வின் அற்புதமான தருணங்களை அழகாகவும் கவிதையாகவும் சொல்லுகின்ற உங்களின் சாமர்த்தியத்தை வியந்து நிற்கிறேன். உங்களை நான் சந்தித்த வேளை நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று முகத்துக்கு நேரே சொன்னீர்கள். அறம் தொகுதியில் உள்ள கதைகளும் பிழை கதையின் ஒவ்வொரு வரியும் கடவுள் இருப்பதைத்தான் எனக்குக் காட்டுகிறது. ஒவ்வொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34808

பிழை -கடிதங்கள்

அன்புள்ள ஜெ பிழை படித்தேன். சமீபத்தில் நீங்கள் எழுதியவற்றில் முக்கியமான சிறுகதை அது. ஒரு கலைப்படைப்பின் சிருஷ்டியைப் பார்ப்பது என்பது கடவுள் இந்தப்பிரபஞ்சத்தை உருவாக்கியதைப் பார்ப்பதற்கு சமானமானது என்று ஒரு கூற்று உண்டு. அந்த உணர்ச்சியை அடைந்தேன். கலைப்படைப்பு உருவாவதைப் பார்த்தவன் கடவுளையே பார்த்தவன்.அவன் எவ்வளவு பெரிய ஒரு சிருஷ்டிகர upheaval நடுவே இருக்கிறான் என்பதை அவன் காணும் இடம் அது. அது அகங்காரத்தை அழித்துவிடுகிறது.அதைத்தான் ரானே சொல்கிறார் பெரிய விஷயத்தின் அருகே ஈயாகவேனும் பறந்துகொண்டிரு என்று. அந்த சிருஷ்டிகரம் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32492

பிழை [சிறுகதை] -2

” அதை எங்கே பதிவுசெய்தார்கள்? என்றேன் “அங்கேதான்…ஆனால் அது பதிவாக நான்குமாதமாகியது. படம் வெளிவருவதற்குள்ளேயே பாட்டு பிளேட்டாக வந்து ஆயிரக்கணக்கில் விற்றுவிட்டது. காலையில் அந்தப்பாட்டின் படப்பிடிப்புக்காக சைக்கிளில் போகும்போது சாலை முழுக்க அந்தப்பாட்டுதான் கேட்டுக்கொண்டிருக்கும். அந்தப்பாட்டு வழியாக நான் எங்கெங்கோ போய்விட்டேன். ஆகவே அந்தப்பாட்டின் உக்கிரத்தைக் காட்சிகள் தொடவே முடியாது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் எடிட்டிங் டேபிளுக்குப் படத்தின் நெகட்டிவ் வந்தபோது எனக்குப் பெரிய ஆச்சரியம். அந்தப்பாட்டு அப்படியே காட்சியாக இருந்தது…நீ,இன்றும்கூடக் கொஞ்சம் தேடினால் அந்தப்பாட்டைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29737

பிழை [சிறுகதை] 1

”சகோதரா, சின்ன விஷயங்களில் என்னதான் கிடைத்தாலும் பெரிய விஷயங்களுக்குப் பக்கத்திலே இருந்துகொண்டிரு. அதுதான் வாழ்க்கை” லட்சுமண் ரானே சொன்னார். காசியில் அவரும்தான் தாடி மீசையுடன் பிச்சை எடுத்து கஞ்சா இழுத்து படிக்கட்டில் தூங்கி வாழ்ந்தார். ஆனால் அவர் சுவாமி மகராஜ் கிடையாது. ஏனென்றால் அவருக்குக் காவி இல்லை. பிடிவாதமாக அதைக் கட்ட மறுத்துவிட்டார். கும்பிடுகள் விழுவதுடன் சில்லறையும் அதிகம் கிடைக்கும். அவ்வப்போது சகசாமியார்களிடமே கையேந்தவேண்டியிருக்காது. ஆனால் லட்சுமண் ரானே தன்னை எப்போதும் ” என் பெயர் லட்சுமன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29750