Tag Archive: பிருஷதி

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 44

பகுதி 10 : சொற்களம் – 2 மாலை இருளத்தொடங்கியபின்னர்தான் அரசவை கூடுவதற்கான முரசுகள் ஒலித்தன. அரண்மனையிலிருந்து அமைச்சர் கருணரும் சுமித்ரனும் வந்து கிருஷ்ணனை அவைமன்றுக்கு அழைத்துச்சென்றனர். அவர்கள் தங்கள் மாளிகையிலிருந்து அரண்மனைக்குச் செல்லும் பாதை முழுக்க மலர்த்தோரணங்களாலும் பட்டுப்பாவட்டாக்களாலும் வண்ணத்திரைச்சீலைகளாலும் அணிசெய்யப்பட்டிருந்தது. அகன்ற வழியின் இருபக்கமும் பாஞ்சாலத்தின் ஐங்குடியினரும் நின்று கிருஷ்ணனை வாழ்த்தி மலர்தூவி குரலெழுப்பினர். அவர்கள் வீசிய மலர்களில் பெரும்பகுதி சாத்யகியின் உடலில்தான் விழுந்தது. அரண்மனைமுகப்பை அடைந்தபோது அவன் உடலை மலர்ப்பொடி மூடியிருந்தது. அணிமுற்றத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72934

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 4 பாஞ்சாலத்தின் பேரமைச்சர் கருணர் கங்கையின் மறுகரையில் முந்தையநாள் இரவே தன் அகம்படியினருடன் சென்று தங்கியிருந்தார். காலையில் விடிவெள்ளி எழுந்ததுமே கிளம்பி ரிஷபவனம் என்று அழைக்கப்பட்ட சிறிய சோலைக்குள் அமைந்திருந்த துர்வாசரின் கானில்லத்தை அடைந்தார். மரப்பட்டைகளாலும் கங்கைக்கரைக் களிமண்ணாலும் கட்டப்பட்டு ஈச்சஓலையாலும் புல்லாலும் கூரையிடப்பட்ட பன்னிரண்டு சிறிய குடில்கள் பிறைவடிவில் அங்கே அமைந்திருந்தன. காலைக்காற்றில் அவற்றில் கட்டப்பட்டிருந்த கொடிகள் பறவைச்சிறகடிப்பு போல படபடத்தன. குடில்களின் நடுவே இருந்த முற்றத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69979

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 83

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 3 பாஞ்சால அரசி பிருஷதி இரவெல்லாம் துயிலவில்லை. ஐந்து அன்னையரின் ஆலயங்களிலும் வழிபட்டு மீண்டதுமே திரௌபதி தன் மஞ்சத்தறைக்குச் சென்று நீராடி ஆடைமாற்றி துயில்கொள்ளலானாள். பிருஷதியைக் காத்து யவனத்துப் பொலன்வணிகரும் பீதர்நாட்டு அணிவணிகரும் கலிங்கக் கூறைவணிகரும் காத்திருந்தனர். நாலைந்துமாதங்களாகவே அவள் பொன்னும் மணியும் துணியுமாக வாங்கிக்கொண்டிருந்தாலும் மணமங்கல நாள் நெருங்க நெருங்க அவை போதவில்லை என்ற பதற்றத்தையே அடைந்தாள். அவள் தவறவிட்ட சில எங்கோ உள்ளன என்று எண்ணினாள். மேலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69538

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 80

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 9 மீண்டும் தேரில் ஏறிக்கொண்டபோது திரௌபதி முற்றிலுமாக சொல்லடங்கி அமர்ந்திருந்தாள். ஆனால் மாயை பேச விரும்பினாள். ஓர் எண்ணம் முடிவதற்குள்ளாகவே அடுத்தது எழுந்தது. ஒவ்வொன்றும் முழுமையான கூரிய சொற்றொடர்களாகவே உருவம் கொண்டு வந்தன. “நீங்கள் ஆண்களில் தேடுவதென்ன இளவரசி?” என்றாள். “நீங்கள் நீர் நிறைந்து கரைகளை முட்டும் ஒரு பெருநீர்த்தேக்கம். இன்னமும் நிகழாத ஆற்றல். எடையாக மட்டுமே இருந்துகொண்டிருக்கும் விசை. நீங்கள் தேடுவது வெளிப்படும் வழிகளை மட்டுமே. இந்த ஆண்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69317

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 79

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 8 மாயை சாளரத்திரையை விலக்கி நோக்கி முன்பக்கம் தேரோட்டும் திரௌபதியையும் அப்பால் நுகத்தைச் சுமந்த பீமனையும் நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் கால்கள் கட்டுமீறி நடுங்கிக்கொண்டிருந்தமையால் தூண்மேல் பின்வளைவை சாய்த்து கைகளால் பற்றி கன்னத்தை அழுத்திக்கொண்டாள். அவள் நெஞ்சுக்குள் மூச்சும் இதயத்துடிப்பும் ஒன்று கலந்தன. நுகத்தை இழுத்துச்சென்ற பீமனின் புயங்களின் பின்பக்கமும் பின் தோள்களிலும் தசைகள் காற்றுபட்ட பாய்மரம்போல புடைத்து இறுகின. ஆணின் தோளின் பின்பக்கத் தசைகளை அவள் அதுவரை அத்தனை கூர்மையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69248

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 77

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 6 சரஸ்வதி ஆலயத்தின் முகப்பில் ரதம் நின்றபோது திரௌபதி திடமான கால்களுடன் இறங்கி வாழ்த்துக்குரல்களும் முரசொலியும் சங்குமுழக்கமும் சூழ சற்று நின்றாள். அவள் ஆடையில் குழலில் எங்கும் சிறு குலைவும் இருக்கவில்லை. வரையாட்டின் அடிபிறழாத நேர்நடை என ரதத்திரைச்சீலை விலக்கி வலப் பாதத்தை படியில் எடுத்துவைத்து இறங்கிய மாயை எண்ணிக்கொண்டாள். அவள் தொடைகள் வலுவிழந்து நடுங்கிக்கொண்டிருந்தன. இறங்கியபின் ஒருகையால் ரதத்தூணைப்பற்றிக்கொண்டு சமநிலையை மீட்டு சேவகர் நீட்டிய தாலத்தை பெற்றுக்கொண்டு திரௌபதிக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69201

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 76

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 5 லட்சுமிதேவியின் ஆலயத்தின் படிகளில் ஏறி உள்ளே நுழைகையில் திரௌபதி மெல்ல ஒரே ஒரு அடி எடுத்துவைத்தாள். அவள் அணிகள் அசைந்த ஒலியில் உருவான மாறுதலை உணர்ந்த அணுக்கச்சேடியான மாயை மெல்ல தன் விரைவைக் குறைத்து அவள் குரல் கேட்கும் அண்மைக்கு வந்து செவியை மட்டும் அவளை நோக்கி திருப்பினாள். திரௌபதி மெல்லியகுரலில் “உள்ளே வருகிறாரா?” என்றாள். மாயை கூந்தலை சரிசெய்தபடி தலைதிருப்பி விழியோட்டித் திரும்பி இதழ்களை மட்டும் அசைத்து “இல்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69171

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 73

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 2 கையிலிருந்த தாலத்தில் குருதிக்கவளத்துடன் விரைந்த நடையில் முதுகணியர் மயானங்களைக் கடந்து திட்டிவாயிலுக்குள் நுழைந்து மண்பாதையில் சென்று தெற்குரதவீதியை அடைந்தார். அவர் வருவதை தொலைவிலேயே அங்கு கூடி நின்றவர்கள் பார்த்துவிட்டனர். அவர் கோட்டைக்கதவைக் கடந்ததும் காவல்மேடை மேல் நின்ற வீரன் விளக்கசைக்க நகர் முழுக்க நூற்றுக்கணக்கான முரசுகளும் கொம்புகளும் மணிகளும் பேரொலி எழுப்பத்தொடங்கின. நகரத்தெருக்களில் கூடியிருந்த மக்கள் கைகளைத் தூக்கி “ஐந்து அன்னையர் புகழ் வாழ்க! பன்னிரு உடனுறை அன்னையர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68730

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 30

பகுதி ஆறு : கரும்புனல் கங்கை – 4 சூரியனுடன் பேசும் அர்க்கவேள்வியை அஸ்தினபுரியில் நிகழ்த்த தகுதியுள்ளவர் வசிட்டகுருமரபின் தலைவரே என்றனர் வைதிகர். ஆகவே சம்வரணன் நான்குதிசைகளிலும் தூதர்களை அனுப்பி விந்தியமலையின் உச்சியில் வசிட்டர் இருப்பதை அறிந்துகொண்டான். தூதர்களை அனுப்பாமல் அவனே நேரில் சென்று தகுந்த காணிக்கைகளை அவரது பாதங்களில் வைத்து வணங்கி தன்னுடன் வந்து அர்க்கவேள்வியை ஆற்றி அருளும்படி வேண்டினான். அவனுக்கு இரங்கிய வசிட்டர் தன் நூற்றெட்டு மாணவர்களுடன் அஸ்தினபுரிக்கு வந்து சேர்ந்தார். அஸ்தினபுரியின் ஆட்சிக்குட்பட்ட இடங்களில் சூரியதாபம் உச்சத்தில் இருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65916

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29

பகுதி ஆறு : கரும்புனல் கங்கை – 3 அந்தப்புரத்தை ஒட்டி அமைந்திருந்த சிறிய கூத்தரங்கில் சூதப்பெண்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் காத்திருந்தனர். முழவின் தோற்பரப்பின் மீது ஒரு விரல் மெல்ல மீட்ட அது ம்ம் என்றது. தட் தட் என்று கிணை ஒலித்தது. நாண் இறுக்கப்பட்ட மகரயாழை யாரோ தூக்கி வைக்க அத்தனை நரம்புகளும் சேர்ந்து தேனீக்கூட்டம் மலர்விட்டு எழுந்ததுபோல ஒலியெழுப்பின. பிருஷதி திரௌபதியின் கையைப்பற்றிக்கொண்டு மன எழுச்சியுடன் “எனக்கு இசையை விட இந்த ஓசைகள்தான் மேலும் உவப்பானவை கிருஷ்ணை… இவை அளிக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65899

Older posts «