Tag Archive: பிருகதர்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49

எட்டாம் காடு : மைத்ராயனியம் [ 1 ] சாந்தீபனி குருநிலையில் இளைய யாதவர் நான்குமாதங்கள் தங்கியிருந்தார். முதல்சிலநாட்களுக்குப்பின் அக்குருகுலத்தின் பெரும்பாலான மாணவர்கள் அவருக்கு அணுக்கமானார்கள். புலர்காலையிலேயே அவர்களை அழைத்துக்கொண்டு கால்நடைகளுடன் அவர் காட்டுக்குள் சென்றார். பசுக்களை அணிநிரைத்துக் கொண்டுசெல்லவும், தனிக்குழுக்களாகப் பிரித்து புற்பரப்புகளில் மேயவைக்கவும், மாலையில் மீண்டும் ஒருங்குதிரட்டவும் அவர்களுக்கு கற்பித்தார். பசுக்களின் கழுத்துமணி ஓசையிலிருந்தே அவை நன்கு மேய்கின்றனவா என்று அறியவும் அவை நின்றிருக்கும் தொலைவை கணிக்கவும் பயிற்றுவித்தார். அவருடன் பலநாள் பாண்டவர்களும் சென்றார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/90239

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43

[ 13 ] அவை முடிந்ததும் எழுந்த இளைய யாதவரை மாணவர்கள் சூழ்ந்துகொண்டார்கள். அவர்கள் அவரிடம் பேச ஒருவரை ஒருவர் கடந்து முண்டியடிப்பதைக் கண்டபின் தருமன் புன்னகையுடன் வெளியே நடந்தார். நகுலனும் சகதேவனும் அவரைத் தொடர்ந்து சென்றனர். அர்ஜுனன் இளைய யாதவர் அருகிலேயே நின்றுகொண்டான். “அவர் மேல் சினம் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அதை மறந்துவிட்டனர், மூத்தவரே” என்றான் நகுலன். “ஆம், பத்ரர் அவருக்கு நன்று செய்தார். அவர் அங்கு வந்து பேசிய சொற்களின் கீழ்மையே மாணவர்களை அவரிடமிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/90113

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42

[ 11 ] சாந்தீபனிக் கல்விநிலையின் முகப்பில் நின்றிருந்த சுஹஸ்தம் என்னும் அரசமரத்தின் அடியில் தருமன் இளைய யாதவரை எதிர்கொள்ளக் காத்திருந்த மாணவர்களுடன் நின்றிருந்தார். பீமனும் நகுலனும் சகதேவனும் அவருக்கு இருபக்கமும் நின்றிருந்தனர். மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் இருக்கலாகாது என்று சொல்லப்பட்டிருந்தமையால் ஒரு இளம் மாணவன் கையில் வைத்திருந்த பெரிய நீள்வட்ட மரத்தாலத்திலிருந்த எட்டுகான்மங்கலங்கள் அன்றி வேறு வரவேற்புமுறைமைகள் ஏதுமிருக்கவில்லை. தொலைவில் பறவைகள் எழுந்து ஓசையிடுவதைக் கேட்டதும் தருமன் அவர்கள் அணுகிவிட்டதை உணர்ந்தார். அதற்குள் அங்கிருந்த வீரன் ஒருவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/90094

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 37

[ 4 ] அந்திவேளை வேள்வியும் சொல்லாடலும் முடிந்தபின் முன்னிரவில் சாந்தீபனி குருநிலையின் முதன்மை ஆசிரியரின் தனியறைக்குள் தருமன் அவர் முன் அமர்ந்திருந்தார். அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் முறுகிச்சென்று முறிந்திருந்ததன் அமைதி அங்கே நிலவியது. “பிருகதர் எந்தையின் அணுக்கர். இனியவர். எளிய பற்றுக்களால் ஆனவர். அவருக்கு எந்தைமேல் உள்ள அன்பு இப்போது இளைய யாதவன் மீதான வஞ்சமாக மாறிவிட்டது” என்றார் சாந்தீபனி முனிவர். அவர் முகம் மெல்லிய சிரிப்பில் வளைந்தது. “அது எளியதென்பதனாலேயே கடினமானதும்கூட.” “அரசே, எளியமானுடர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89979

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 36

[ 3 ] தருமன் சாந்தீபனிக்காட்டின் நடுவே ஓடிய அஸ்வினி என்னும் சிற்றாற்றின் கரையில் நீராடுவதற்குச் சென்றபோது அங்கே நீராடிக்கொண்டிருந்த ஒரு முனிவரைக் கண்டு தலைவணங்கினார். பிறிதொரு இடம்தேடி அவர் விலக முயல அவர் “வணங்குகிறேன், அரசே. இங்குள்ள ஆறுகளும் ஓடைகளுமெல்லாம் சேறு மண்டியவை. சில இடங்களில் மட்டுமே நீராடமுடியும். தாங்கள் இங்கேயே நீராடலாம்” என்றார். “ஆம், நான் ஆற்றின் கரைவழியாக நோக்கியபடியே வருகிறேன்” என்றபடி தருமன் அந்தப் பாறைநீட்சியை அடைந்தார். “இந்தப் பாறை நீண்டு பெரும்பெருக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89967

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 69

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 4 அவை நிறைவுற்று ஜராசந்தர் அரண்மனைக்குத் திரும்பியபின் நெருப்பு எரியும் உடலுடன் மகளிர் மாளிகையில் அரசியின் மஞ்சத்தறைக்குச் சென்று அங்கே அணி களைந்துகொண்டிருந்த மிலிந்தையிடம் பிருஹத்சேனர் கூவினார் “இழிமகளே, நீ எண்ணியிருப்பதென்ன? ஜராசந்தன் நம் மகளுக்கு தந்தைக்கு நிகரான வயதுடையவன். இழிபண்பின் உறைவிடம் அவன். ஆசுரநாட்டு இழிமகள் ஜரையின் மைந்தன். அவன் அரண்மனையில் அவன் அரசியருக்கு தொழும்புப் பணி செய்ய அனுப்பவா நம் மகளை நேர்ந்து பெற்றோம்? மடியிலிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77626

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 53

பகுதி எட்டு : கதிரெழுநகர் [ 5 ] காலையில் கர்ணன் அதிரதனுடன் அமர்ந்து குதிரைகளை உருவிவிட்டுக்கொண்டிருக்கும்போது அரண்மனையிலிருந்து ரதசாலைக் காவலரான சத்ரபாகுவே நேரில் குதிரையில் வந்தார். அவருடன் எட்டு வீரர்களும் வந்தனர். அணுகி வரும் குதிரைகளின் குளம்படிச்சத்தம் கேட்ட அதிரதன் “குதிரைகளின் காலோசையிலேயே அவற்றை உணரத்தெரிந்தவனே அஸ்வசாஸ்திரம் தெரிந்தவன். இப்போது வரும் குதிரைகளை என் அகக்கண்ணாலேயே என்னால் காணமுடியும்” என்றார். “இடமுகமும் வலமுகமும் சற்றே வேறுபட்டிருக்கும் பிரமரம் ஓடும்போது பெருங்கழியும் சிறுகழியும் மாறிமாறி முட்டும் முரசென …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57755