Tag Archive: பிரியவிரதர்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 41

பகுதி ஐந்து : தேரோட்டி – 6 துவாரகையில் இருந்து பன்னிரெண்டு நாள் நடை செல்லும் தொலைவில் இருந்தது தொன்மையான ஜனபதமாகிய கஜ்ஜயந்தம். நூற்றியெட்டு மலைக் குடிகள் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ஊர்களின் பெருந்தொகை அது. அதன் நடுவே அமைந்த மலை ஒன்றன் மேல் ஒன்றென மூன்று பெருங்குன்றுகளும் இரு இணைப்புக்குன்றுகளும் கொண்டது. கேஜ்ரி மரங்கள் மட்டுமே நின்றமையால் அது கஜ்ஜயந்தம் என்று பெயர் கொண்டிருந்தது. அம்மக்கள் கஜ்ஜர்கள் எனப்பட்டனர். அக்குன்றுகளை ஒன்றிணைத்து வேதங்களின் சௌனகபாடங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80065

‘வெண்முரசு’- நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 33

பகுதி ஆறு : தீச்சாரல் [ 7 ] பிரம்மமுகூர்த்தத்தில் அரண்மனையின் முன்னால் இருந்த காஞ்சனம் முழங்குவது அத்தனை சூதர்குலப் பணியாளர்களும் எழுந்தாகவேண்டுமென்பதற்கான அறிவிப்பு. அதை மூலாதாரத்தின் முதல் விழிப்பு என்றும், பொன்னிறச் சூரியஒளியின் ஒலிவடிவம் என்றும், அஸ்தினபுரியின் அரண்மனையான சந்திரஹாசம் என்ற வண்டின் முரளல்நாதம் என்றும், புலரிதேவிக்கு முன் வைக்கப்பட்ட அஸ்தினபுரம் என்ற மலரின் தேன் என்றும் சூதப்பாடகர்கள் பாடினாலும் அத்தனை சூதர்குலப் பணியாளர்களுக்கும் அது கண்டிப்பான உரிமையாளரின் சாட்டைநுனியின் மெல்லிய தொடுகை மட்டு6ம்தான். விஷப்பாம்பின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44745