Tag Archive: பிராமணர்

ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்?

பத்ரி சேஷாத்ரி பிராமணர்கள் தமிழகத்தில் நடத்தப்படும் விதம் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் எழுதிய கட்டுரை இணையத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியது என்றார்கள். முக்கியமான சில எதிர்வினைகளை மட்டும் தேர்ந்து அளிக்கும்படி சொன்னேன். தொலைபேசியில் நான் சொன்ன கருத்துக்களை எழுதியே ஆகவேண்டும் என்று அரங்கசாமி சொன்னார்.அனேகமாக அனைவரும் எதிர்வினை ஆற்றிவிட்டமையால் என் கருத்தை எழுதலாமென்று தோன்றியது. பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை ஏற்கனவே வேறு சொற்களில் அசோகமித்திரனால் சொல்லப்பட்டதுதான். வெவ்வேறு பிராமணர்கள் அதை எழுதியிருக்கிறார்கள். பொதுவாக தமிழ்பிராமணர்களின் ஆதங்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67150

இந்துமதம் சம்ஸ்கிருதம் பிராமணர்-கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய திரு.ஜெமோ. அவர்களுக்கு, இன்று உங்கள் வலை தளத்தில் “ இந்து மதம்,சமஸ்கிருதம், பிராமணர்” என்ற தலைப்பில் நீங்கள் திரு.செல்வம் அவர்களுக்கு எழுதிய பதில் கட்டுரை,மிகுந்த ஆழமான,ஆராய்ச்சி பூர்வமான, அர்த்தமுள்ள கருத்துக்களுடன் அருமையாக இருந்தது. உண்மையில் இதைப் படித்தவுடன்,நானும் இந்து மதத்தை சார்ந்தவன் என்ற பெருமித உணர்வு ஏற்பட்டது.வைணவ பிராமணன் என்ற (உண்மையான பிராமணனா நான் என்று எனக்கு தெரியாது ) முறையில் என்னால் உறுதிபடக் கூறமுடியும் இன்றும் எங்கள் வைணவக் கோயில்களில் நாலாயிர திவ்யப் பிரபந்தப்பாடல்களுக்குத்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22674

சிங்காரவேலரின் பிராமண வெறுப்பு

அன்புள்ள ஜெ,  உங்கள் பார்வைக்கு: http://www.kalachuvadu.com/issue-140/page43.asp சிங்காரவேலு முதலியாரின் நடத்தைக்குக் காரணம்  அப்போது இங்கு வளர்ந்து வந்த திராவிட இயக்கக் கருத்தியலா அல்லது அவரது இயல்பான காழ்ப்புணர்வா தெரியவில்லை. தமிழக  பௌத்த இயக்கங்களுக்கும்  திராவிட இயக்கத்திற்கும் இடையே ஏதாவது ஊடுபாடுகள்  நடந்ததா என்றும் தெரியவில்லை. அன்புடன், ஜடாயு — http://www.tamilhindu.com/author/jatayu/       [சிங்காரவேலர்]  அன்புள்ள ஜடாயு வரலாற்றாசிரியர் டி. டி. கோசாம்பியின் அப்பா தாமோதர தர்மானந்த கோஸாம்பி அக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறார். அவர் எழுதிய ‘பகவான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19606