Tag Archive: பிரயாகை

பிரயாகை- கேசவமணி

கேசவமணி பிரயாகை பற்றி எழுதத்தொடங்கியிருக்கும் விமர்சனத்தொடர். அவரது இணையதளத்தில் வெண்முரசு விவாதங்கள் அனைத்தும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/75429/

‘பிரயாகை’- வெளியீடு

ஜெயமோகன் மகாபாரதத்தை நாவல் வடிவில் ‘வெண்முரசு’ என்ற தலைப்பில் எழுதிவருகிறார். இந்த மீளுருவாக்கம் பல நாவல் தொகுதிகளாக வெளிவரப்போகிறது. இந்த வரிசையில் அவர் எழுதிய முதல் நான்கு நாவல்கள் – முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் – நற்றிணை வாயிலாக வெளியாயின. இப்போது ஐந்தாவது நாவல் ‘பிரயாகை’ கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியாக உள்ளது. ஏற்கெனவே வெளியான நான்கு நாவல்களும்கூட இனி கிழக்கு பதிப்பகத்தின் மறுபதிப்புகளாக வெளியாகும் பத்ரி சேஷாத்ரி பதிவு http://www.badriseshadri.in/2015/04/blog-post_9.html பிரயாகை முன்பதிவுசெய்வதற்கான சுட்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73935/

பிரயாகை முடிவு

[திரௌபதி அம்மன்] வெண்முரசு வரிசையின் ஐந்தாவது நாவலாகிய ‘பிரயாகை’ நேற்றுடன் முடிந்தது. ஒவ்வொரு நாவலை எழுதும்போதும் அதற்கென எல்லைகள் தெளிவற்ற ஒரு வடிவத்தை நான் உருவகித்துக்கொள்வதுண்டு. அதன் மையமாக அமையும் ஒன்றை முதலில் கண்டுகொள்வேன். பெரும்பாலும் அது தற்செயலாக அமைவதாகத்தான் இருக்கும். முந்தைய நாவல்களில் எங்கோ அதற்கான தொடக்கமும் இருக்கும். எழுதத் தொடங்கியதுமே நாவல் அதன் விசையில் என்னை கொண்டுசெல்லும். ஒன்றுடன் ஒன்று நிரப்பிக்கொண்டு தன் வடிவத்தைத் தானே அடைந்துவிடும். அவ்வாறு வடிவம் திரண்டு வருவதுதான் எழுதுவதிலுள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70124/

பிரயாகை- ஒருமை

ஆசிரியருக்கு , ஒன்றை உயர்ந்த படைப்பாக்குவது அதன் பாத்திரங்கள் அல்ல. முதன்மையானது , அதில் இடம் பெரும் சம்பவங்களின் ஒழுக்கே என்பது எனது நம்பிக்கை. சம்பவங்கள் சாதாரணமாக நிகழாதவையாகவும் இருக்க வேண்டும் , அதே சமயம் நடக்க சாத்தியமான நம்பிக்கையையும் நமக்கு அளிக்க வேண்டும். சம்பவ வலுவுக்குப் பின் பாத்திரங்கள் தமக்குள்ளே வேறுபட்டு இருக்கவேண்டும், அது இயல்பாகவும் இருக்க வேண்டும் (Characteral distinction) அதே சமயம் அது எதிர்வரும் சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றுவதிலும் தனது போக்கிலும் ஒரு ஒருமை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66422/

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40

பகுதி எட்டு : மழைப்பறவை – 5 அந்திசாயும் நேரத்தில் அஸ்தினபுரியில் இருந்து எண்பது காதத்துக்கு அப்பால் இருந்த இருண்ட குறுங்காட்டுக்குள் முந்நூறு சிறிய நீள்படகுகள் ஒருங்கிக்கொண்டிருந்தன. பெரும்பாலானவை கங்கையில் விரைந்தோடும் காவல்படகுகள். எஞ்சியவை மீன்பிடிப்படகுகள். அவற்றின் அடிப்பக்கத்தில் தேன்மெழுகு உருக்கி பூசப்பட்டிருந்தது. படகுகள் மீதும் பாய்களிலும் கருமைகலந்த தேன்மெழுகு பூசப்பட்டிருந்தது. தச்சர்கள் அவற்றின் சிறிய கொடிமரங்களை விலக்கிவிட்டு பெரிய கழிகளை துளையில் அறைந்து நீளமான கொடிமரங்களை அறைந்து நிறுத்தினர். அரக்கையும் களிமண்ணையும் உருக்கி அவற்றை அழுத்தமாகப் பதித்தனர். நூறு தச்சர்களும் மீனவர்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66149/

அசுரர் இன்று

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, தி ஹிந்துவில் படிக்க நேர்ந்தது. அசுர குலத்தின் இன்றைய நிலை. பிரயாகையில் ஏகலைவ‌னைப் பற்றி படித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்த செய்தி. ஏகலைவன் மனநிலையை இவரிடமும் காண்கிறேன். வசிட்டர் குரு மரபுபோல் இதுவும் தொடர்கிறது போல‌. லூர்து சேவியர் http://www.thehindu.com/news/national/other-states/candidate-from-asur-wants-to-do-his-bit-for-his-tribe/article6631185.ece அன்புள்ள லூர்து இன்றைய ஜார்கண்ட் தான் அன்றைய ஆசுர நிலம் என அழைக்கப்பட்டது. வெண்முரசில் வருவது அதன் விரிவான சிலக்காட்சி [சர்மாவதி தான் இன்றைய சம்பல்] 1986ல் அப்பகுதியில் பயணம் செய்திருக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66375/

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29

பகுதி ஆறு : கரும்புனல் கங்கை – 3 அந்தப்புரத்தை ஒட்டி அமைந்திருந்த சிறிய கூத்தரங்கில் சூதப்பெண்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் காத்திருந்தனர். முழவின் தோற்பரப்பின் மீது ஒரு விரல் மெல்ல மீட்ட அது ம்ம் என்றது. தட் தட் என்று கிணை ஒலித்தது. நாண் இறுக்கப்பட்ட மகரயாழை யாரோ தூக்கி வைக்க அத்தனை நரம்புகளும் சேர்ந்து தேனீக்கூட்டம் மலர்விட்டு எழுந்ததுபோல ஒலியெழுப்பின. பிருஷதி திரௌபதியின் கையைப்பற்றிக்கொண்டு மன எழுச்சியுடன் “எனக்கு இசையை விட இந்த ஓசைகள்தான் மேலும் உவப்பானவை கிருஷ்ணை… இவை அளிக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65899/

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27

பகுதி ஆறு : கரும்புனல் கங்கை – 1 ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து படைக்கலப்பயிற்சி முடிந்ததும் குளித்து மெல்லுடையணிந்து மீண்டும் அந்தப்புரம் செல்வதை துருபதன் வழக்கமாக்கியிருந்தார். அமைச்சர்களும் ஒற்றர்களும் செய்திகளுடன் அவருக்காக காத்திருப்பார்கள். தன் தனியறைவிட்டு அவர் வெளியே வந்ததும் இடைநாழியில் காத்திருக்கும் அமைச்சர் அவரிடம் முதன்மைச்செய்திகளை சொல்லத் தொடங்குவார். மெல்ல நடந்தபடியே அவர் கேட்டுக்கொள்வார். ஒற்றர்களை அமைச்சர் அழைக்க அவர்களும் வந்து சேர்ந்துகொண்டு மெல்லிய குரலில் சொல்லத்தொடங்குவார்கள். துருபதன் எதையும் கேட்பதில்லை என்று அமைச்சர்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65835/

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 13

பகுதி மூன்று : இருகூர்வாள் – 3 பிற்பகல் முழுக்க அர்ஜுனன் நிலைகொள்ளாமலேயே இருந்தான். சேவகர்களிடம் பொருளின்றியே சினம்கொண்டு கூச்சலிட்டான். அறைக்குள் இருக்க முடியவில்லை. ஆனால் வெளியே சென்று முகங்களை நோக்கவும் தோன்றவில்லை. அறைகளுக்குள் சுற்றி நடந்துகொண்டிருந்தவன் ஏன் இப்படி நடக்கிறோம் என்று உணர்ந்ததும் அமர்ந்துகொண்டான். பின்னர் தலையை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு கண்களை மூடி கண்ணுக்குள் சுழன்றுகொண்டிருந்த ஒளிப்பொட்டுகளை நோக்கிக்கொண்டிருந்தான். தொடைகளை அடித்தபடி எழுந்து “சுடுகாட்டுக்குப்போகட்டும் அனைத்தும்” என்றான். என்ன சொல் அது என அவனே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64222/

புராவதியும் சுநீதியும்

அன்பான ஜெயமோகன் “ஆகவேதான் பீமதேவன் அவள்மேல் அதுவரை பொழிந்த காதலனைத்தையும் அவள்வயிற்றின்மேல் மாற்றிக்கொண்டதை அவள் ஏற்றுக்கொண்டாள். அவள் வயிறு சுமந்த குழந்தையை எண்ணி அவன் கொண்ட பரவசமும் கவலையும் கொந்தளிப்பும் மோனமும் அவளைஉவகையிலாழ்த்தின. ஒருநாள் புராவதி ஒரு கனவு கண்டாள். . தவழும் குழந்தையான அம்பை இடையில் கிண்கிணி மட்டுமே அணிந்தவளாக விரைந்து செல்லக்கண்டு அவள் கூவியழைத்தபடி பின்னால் சென்றாள்.படியிறங்கி உள்முற்றம் சென்ற குழந்தை அங்கே புகைவிட்டெரிந்த தூப யானத்தின் செங்கனலை அள்ளி அள்ளி வாயிலிட்டு உண்ணத்தொடங்கியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64294/

Older posts «