Tag Archive: பிரயாகை செம்பதிப்பு

அந்த முந்நூறு பேர்

ஹரன் பிரசன்னா நான் தங்கியிருந்த விடுதிக்கு பிரயாகையின் செம்பதிப்பின் முந்நூறு பிரதிகளைக் கொண்டுவந்தார்.முதல் பதினாறு அச்சுப்பக்கங்கள்மட்டும். அவற்றைப் பெறுபவர்களின் விலாசமும் பெயரும் அடங்கிய அச்சுக்குறிப்பு தனியாக இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பெயர் எழுதிக் கையெழுத்திட்டேன். முதற்கனலின் செம்பதிப்பு கேட்டவர்களுக்கு அச்சிடப்பட்டு அளிக்கப்படுகிறது. அதன் ஐம்பது பிரதிகளில் கையெழுத்திட்டேன் கையெழுத்திடும்போது பலருடைய பெயர்களைச் சுருக்கிக் கையெழுத்திட்டேன். உதவியாக வந்த கிழக்கு ஊழியர் ‘சார் பேரு வேற மாதிரி இருக்கே’ என்றார். ‘இல்லை, இதான் அவரை நான் கூப்பிடுற பேரு’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74930