Tag Archive: பிரம்மானந்தன்

பிரம்மானந்தன் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், நான் துபாயில் இருந்தபோது என்னுடன் வேலை பார்த்த நண்பர் பிரம்மானந்தனுக்கு நண்பராக இருந்தவர். பலமுறை தொடர்ந்து அவரைப் பற்றிப் பேசியிருக்கிறார். பிரம்மானந்தன் எப்படி குடியால் சீரழிந்தார் என்பதைப் பற்றி ஓயாமல் சொல்லிக்கொண்டே இருந்தார். என் நண்பரும் ஓயாமல் குடிக்கக்கூடியவர். அவரது குற்ற உணர்ச்சியை பிரம்மானந்தத்தைப் பற்றிப் பேசுவதன்மூலம் தீர்த்துக்கொள்கிறார் என நினைத்துக்கொள்வேன். பிரம்மானந்தன் தமிழில் பாடிய மறக்கமுடியாத பாட்டு – மெட்டி படத்தில் வரும் ‘சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே’ பாடல். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11536

பிரம்மானந்தன்

சில வருடங்களுக்கு முன்னர் ஓர் ஓட்டலில் ஷாஜியுடன் பேசிக்கொண்டிருந்தபோது எவரிடமோ அவர் தொலைபேசியில் பேசிவிட்டு என்னிடம் ‘ராகேஷ் பிரம்மானந்தன்.பாடகர் பிரம்மானந்தனின் மகன். இவரும் பாடுகிறார்’ என்றார். 2004, ஆகஸ்ட் பத்தாம்தேதியில் தன்னுடைய 58 ஆவது வயதில் பிரம்மானந்தன் மறைந் செய்தியை அப்போதுதான் நான் கேள்விப்பட்டேன். ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது. உண்மையில் நான் பிரம்மானந்தனை எப்போதும் மறந்ததில்லை. என் இளமை நினைவுகளில் அழியாது கலந்த ஒரு பெயர் அவர். அவர் குரலின் அசாதாரணமான நெகிழ்ச்சி என் எத்தனையோ இரவுகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11498