Tag Archive: பிரம்மபுத்திரா

சூரியதிசைப் பயணம் – 12

திமாப்பூரில் இருந்து கிளம்பி கோஹிமாவுக்கு மாலை ஏழுமணிக்கு வந்துசேர்ந்தோம். ஆனால் ஏழு மணி என்பது இப்பகுதியில் நள்ளிரவுபோல. குளிர். ஊரும் அடங்கத்தொடங்கிவிட்டிருந்தது. நாங்கள் கோஹிமாவிலிருந்து ஸுக்கு சமவெளிக்குச் செல்லவேண்டியிருந்தது. ஆனால் அதை பயணிகளுக்கு மூடிவிட்டார்கள் என்று அனுமதிகோருவதற்காகச் சொல்லி வைத்திருந்த நண்பர் சொல்லிவிட்டார். காரணம் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆகவே மறுநாள் கோஹிமாவையே பார்ப்பதற்கு முடிவெடுத்தோம். கோஹிமாவில் அரசினர் விடுதியை அரைமணிநேரம் தேடிக் கண்டடைந்தோம். கோஹிமா நாகாலாந்தின் தலைநகரம். மிக அதிகமாக பூகம்பங்கள் நிகழும் இடங்களில் ஒன்று இது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71839

சூரியதிசைப் பயணம் – 10

நாகர்கோயிலில் இருந்து கிளம்பும்போது எனக்கு சற்று முதுகுவலி இருந்தது. வெண்முரசு முப்பது அத்தியாயங்கள் எழுதி முடிக்கவேண்டியிருந்தது. திரும்பிவரும்வரை தொடர்ந்து பிரசுரமாகவேண்டும். பயணத்தில் வலி குறைந்துவிடும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அசாமில் நுழைந்ததுமே அந்த எண்ணம் மறைந்தது. அசாம் முதலிய கிழக்கு மாநிலங்களை நாம் மிகச்சிறியவை என மனதுக்குள் எண்ணியிருக்கிறோம். அவற்றின் மக்கள்தொகை குறைவு என்பதே காரணம். ஆனால் உண்மையில் இது பரந்து விரிந்த நிலம். ஒவ்வொரு ஊருக்கும் நடுவே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு. ஆகவே பயணத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71799

சூரியதிசைப் பயணம் – 6

நதி என நாம் நினைப்பதன் சித்திரம் மாறிக்கொண்டே இருக்கிறது. இளமையில் நானறிந்த நதி என் வீட்டின் கொல்லையில் ஓடிய வள்ளியாறுதான். வற்றாத நதி. அதன் படுகை அதிகம் போனால் அரைகிலோமீட்டர் அகலம். மழைக்காலத்தில் செந்நிறநீர் நிறைந்தோடும். எட்டாவது படிக்கையில் முதல்முறையாக தாமிரவருணியை பார்த்தேன். இருமடங்கு பெரிய நதி. என் மனம் அன்றுகொண்ட விம்மிதத்தை இப்போதும் நினைவுகூர்கிறேன். அதன்பின் காவேரியைப்பார்த்தபோது தாமிரவருணி சிறியதாகியது. அதன்பின் கிருஷ்ணையையும் கோதாவரியையும் பார்த்தபோது நதி என்ற கற்பனையையே மாற்றியமைத்தேன். கிருஷ்ணா நதி மீது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71715

சூரியதிசைப் பயணம் – 5

காசிரங்கா வனவிடுதியில் காலை ஆறுமணிக்கு எழுந்தோம். முந்தையநாளே குளித்திருந்தமையால் காலையில் குளிக்கவில்லை. கீழே ஒரு உணவகம் இருந்தது. ஆனால் காலையுணவை அவர் சமைக்க ஒன்றரை மணிநேரம் ஆகிவிடும் என்றார். ஆகவே டீ மட்டும் குடித்துவிட்டு கிளம்பினோம். நல்ல குளிர் இருந்தது. அஸ்ஸாம் சமநிலப்பகுதி என்றாலும் ஊட்டி அளவுக்கே காலையில் குளிர் இருந்தது. இமையமலையின் குளிர்ச்சாரல் காரணமாக இருக்கலாம். திறந்த ஜீப் வந்தது. இப்பகுதியில் மாருதி ஜிப்ஸி ஜீப்புகள் இன்னமும் பரவலாக புழக்கத்தில் உள்ளன. காட்டுக்குள் செல்ல அவைதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71611