Tag Archive: பிரம்மன்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23

பகுதி மூன்று : பொருள்கோள் பாதை [ 1 ] வளர்பிறைக்காலம் முடிவுவரை அர்ஜுனன் ஜாதவேதனுடன்அவன் குடியில் வாழ்ந்தான்.. மைந்தனுடன் விளையாடி தன் உள்ளுருகி எழுந்த அமுது அனைத்தையும் அவனுக்கு ஊட்டி அவ்வின்பத்தில் கணம் கணம் என நிறைந்து திளைத்தான். ஒன்றுபிறிதொன்றைக் கண்டடைந்து நிறைத்து தானழிவதே உயிர்களுக்கு விண்ணென்றானது வகுத்தளித்த பேரின்பம் என்று அறிந்தான். ஜாதவேதன் தன் மைந்தன் உயிர்மீண்ட செய்தியை தன் நூற்குலத்தையும் குடியையும் சேர்ந்த நூற்றெட்டு அந்தணர்களுக்கு நேரில் சென்று அறிவித்தான். அவனுக்கு அமிர்தன் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92105

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8

[ 3 ] முன்பு தேவரும் அசுரரும் வாசுகியை நாணாக்கி மந்தரமலையை மத்தாக்கி  பாலாழியைக்  கடைந்தபோது எழுந்தவர் இரு தேவியர்.  இருளோரும் ஒளியோரும் இருபுறமும் நின்றிழுக்க மந்தரமலை சுழன்று பாற்கடலில் நுரையெழுந்தபோது அதன் அடியாழத்தில் ஓவியங்களென்றும் எழுத்துக்களென்றும் பொறிக்கப்பட்டு காலமின்மையில் துயின்றிருந்த தெய்வங்கள் ஒவ்வொன்றாக கண்விழித்தெழுந்தன. பால்வண்ணப் பேரேட்டில் ஆமென்றும் அல்லவென்றும் குறிக்கும் ஓமென்ற எழுத்தால் எழுதப்பட்டிருந்த  பிரக்ஞாதேவி என்னும் அன்னை எட்டு கைகளுடன் விழித்தெழுந்தாள். அவள் முன்பக்கம் பொன்னிறமும் பின்பக்கம் கருநிறமும் என இருபுறமும் முகமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91728

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 3

[ 5 ] இமயப்பனிமலையின் அடியில் அமைந்திருந்த தேவதாருக்காடு சௌகந்திகம் என்று தேவர்களால் அழைக்கப்பட்டது. அங்கிருந்து எழுந்த நறுமணம் முகில்களில் பரவி அவற்றை வெண்மலரிதழ்கள் என ஆக்கியது. தொல்பழங்காலத்தில் நிலம்விட்டு மலைநாடி எழுந்து வந்த அத்ரி மாமுனிவர் அங்கே சுகந்தவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் தனிக்குடில் கட்டி வாழ்ந்தார். நாளும் தேவதாருச் சமிதையால் அவர் அனலோம்பினார். அப்புகையை ஒற்றி உறிஞ்சி வானில் விளங்கிய முகில்கொழுந்துகளை கந்தர்வர்களும் கின்னரர்களும் தேவர்களும் எடுத்துச்சென்று கிழித்துப் பங்கிட்டு தங்கள் முகம் விளக்குவதற்காக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91398

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52

[ 6 ] அடுமனை வாழ்க்கை சொல்லற்றதாக இருந்தது. அங்கே ஒற்றைச்சொல் ஆணைகள் இருந்தன. பின்னர் அவையும் மறைந்தன. நாள்முழுக்க சொற்களில்லாமலேயே சென்றது. கைகளும் கால்களும் விரைந்துகொண்டிருந்தபோது உள்ளம் சொற்களை கொப்பளித்துக்கொண்டிருந்தது. செயலும் சொல்லும் இரு தனி ஓட்டங்களாக சென்றன. எப்போதாவது சொற்பெருக்கு செயலை நிறுத்தச்செய்தது. மெல்ல சொற்கள் தயங்கலாயின. ஒரு சொல்லில் சித்தம் நின்று அதுவே குயிலோசை என மாறாது நெடுநேரம் ஒலித்துக்கொண்டிருப்பதை செயலின் நடுவே உணர்ந்து மீளமுடிந்தது. பின்னர் அதுவும் நின்றது. செயல் ஓய்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/90314

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 50

[ 4 ] தொல்புகழ்கொண்ட இக்‌ஷுவாகு குலத்தில் சுத்யும்னனுக்கு மைந்தனாகப் பிறந்தவன் யுவனாஸ்வன் என்னும் அரசன். குருதி ஓயாத கொடுவாள் கொண்டவன் என அவன் புகழ்பாடினர் சூதர். பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறுநாட்டு அரசரையும் அவன் அடிபணியச் செய்தான். அதன்பின்னரும் வெற்றிக்கான விடாய் ஓயாது மேலும் மேலுமென்று எழுந்தது அவன் உள்ளம். இரவுகள்தோறும் தன்னைப் பணியாத அரசர்களை வெல்வதைப்பற்றி கனவு கண்டான். அவர்களை வெல்லும் வழிதேடி போர்சூழ்கைகள் வகுத்தான். பகலில் தான் வென்ற நிலத்தின் மக்களுக்கு நீரும் அறமும் சீராகக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/90331

’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 4

[ 3 ] ஒவ்வொருநாளும் என மடிந்துகொண்டிருந்த ரம்பனையும் கரம்பனையும் கண்டு சபரர் ஆழ்துயரில் அமைந்தார்.  சூரர் “நாம் செய்வதற்கொன்றில்லை என்றே எண்ணுகிறேன் ஆசிரியரே. அவர்களின் உள்நிறைந்து மண்வந்த ஒன்று தன்னை விடுவித்துக்கொள்ள விழைந்தால் நாம் என்ன செய்ய முடியும்?” என்றார். சபரர் எண்ணச்சுமையுடன் தலையை அசைத்து “அவ்வாறல்ல, இது விழிப்புள்ளமும் கனவுள்ளமும் நுண்ணுள்ளமும் கொள்ளும் ஒத்திசைவின்மை மட்டுமே. ஒரு நோயே இது. இதற்கு மருத்துவமென ஒன்று இருந்தாகவேண்டும்” என்றார். “உள்ளம் என்பது இங்கு மண்ணுடன் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86065

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78

பகுதி பத்து   : நிழல்கவ்வும் ஒளி- 2 இந்திரப்பிரஸ்தத்தின் தெருக்களை புரவி நன்கறிந்திருந்தது. அவன் உள்ளத்தையும் கால்களினூடாக அது உணர்ந்து கொண்டிருந்தது. சீரான பெருநடையில் மையச்சாலையை அடைந்து சாலையோரங்களிலும் இல்லமுகப்புகளிலும் கடையின் ஓரங்களிலும் சதுக்கங்களிலும் நிரம்பி அலையடித்த மக்களின் தலைப்பெருக்குகளினூடாக வகுந்து சென்றது. எதிரே வந்த களிறுகளையும் மஞ்சல்களையும் தேர்களையும் பல்லக்குகளையும் இயல்பாக விலக்கி வளைந்தது. அந்நகரை நூல்முனை ஊசி என அது தைத்துக்கோப்பதாக தோன்றியது. நெடுநேரம் கழித்தே தான் எங்கிருக்கிறோம் என்பதை கர்ணன் உணர்ந்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85238

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை – 3 கவிஞன் செல்வதை நோக்கி நின்றபின் அரங்குசொல்லி அவையை நோக்கி திரும்பி “இப்போது என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்திருக்கும். நாடகம்… நன்றாகவே இருக்குமென நினைக்கிறேன். இல்லை என்றாலும் தாழ்வில்லை. மதுவுண்டு துயிலும் அரசர்கள் முன் நடிக்கப்படுவதனாலேயே பாரதவர்ஷத்தில் நாடகக்கலை வாழ்கிறது” என்றபின் திரும்பி நான்குபக்கம் பார்க்க அரங்கடியான் ஒருவன் ஓடிவந்து ஒரு இறகை அவனிடம் கொடுத்தான். அதை உதறி தன் தலைப்பாகையில் குத்திவிட்டு நிமிர்ந்து தோரணையாக “ஆகவே அவையோரே… …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84562

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 4 அஸ்தினபுரியின் அவையில் துரியோதனன் துணைவி பானுமதியுடன் கேட்டிருக்க கர்ணன் அமைதியிழந்து அமர்ந்திருக்க சூதன் தன் கதையை தொடர்ந்தான். அவன் அருகே அமர்ந்திருந்த இசைத்துணைவரின் கட்டைத்தாளம் அவன் கால்களை அசையச் செய்தது. உள்ளத்தை அடுக்கியது. சொற்களுக்கு குளம்புகளை அளித்தது. “அரசே, அரக்கர்குலத்தில் திறல்மிக்க வீரனின் கருவை பெண்கள் தேடி அடையும் குலமுறை முன்பே இருந்தது. ஆகவே அந்தணர் சொல் கேட்டு வாலி மகிழ்ந்து தன் மாளிகைக்கு மீண்டதுமே சுதேஷ்ணையையும் பிறரையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82691

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 2

பகுதி ஒன்று : செந்தழல் வளையம் – 2 நாளவன்மைந்தா கேள், இட்ட அடிவட்டம் கருக, தொட்ட இலை நுனிகள் பொசுங்கிச் சுருள, காட்டை வகுந்து சென்று கொண்டிருந்த வெய்யோனைச் சூழ்ந்து பறந்தது கருவண்டு ஒன்று. தன் விழிகளைக் கண்டால் மதகரிகள் வெருண்டு பின்னடி எடுத்து வைத்து மத்தகம் குலுக்கி பிளிறி மீள்வதையே அவன் கண்டிருந்தான். அவனை அணுகியவை அனைத்தும் பொசுங்கின. அச்சமற்ற விழிகளை அவன் கண்டதே இல்லை. அஞ்சாது தன்னைத் தொடர்ந்த அவ்வண்டைக் கண்டு ஐயமுற்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81963

Older posts «

» Newer posts