Tag Archive: பிரபஞ்சன்

கருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்

அக்கினிப்பிரவேசம் – ஜெயகாந்தன் கதை மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன் கதை ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். ஈரோடு வாசகர் சந்திப்பின் போது தாங்கள் பிரபஞ்சனின் மரி என்கிற ஆட்டுக்குட்டி கதையை பற்றிய தங்களின் விமர்சனப் பார்வையை  கூறுனீர்கள். கதை முழுவதும் செயற்கையான கட்டமைப்பு, கதாப்பாத்திரங்கள் தன்னியல்பில் செயல்படாமல் ஆசிரியரின் கைப்பாவையாக செயல்பட்டது, சட்டென்று திருந்தும் மரி, ‘நா.பார்த்தசாரதி’ தனமான லட்சிய நடத்தைக்கொண்ட கதாநாயகன் எனக் கூறினீர்கள். எனக்கும் அப்படியே தோன்றியது. ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் கதையிலும் ஆரம்பம், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118785/

பிரபஞ்சன் : கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், ஒரு மனிதனுக்காக எனது வாழ்நாளில் ஒருவரை நினைவுகூர்ந்து எழுதும் முதல் அஞ்சலி. எனது துறையில் ஒரு பெரிய ஆளுமையிடம் எனது அகங்காரத்தினாலும், அறியாமையினாலும், சல்லிதனத்தினாலும் அவரின் ஏசி அறையில் திட்டுவாங்கி துரத்தபட்டு வெளியேறுகிறேன். மனது முழுதும் வீராப்பும் கடுப்புமாக வியர்க்க வியர்க்க முதல் மாடியில் இருந்து படிகளில் இறங்கி வரும்போது திடீர் என வெள்ளை வேட்டியும் ஜிப்பாவுமாக ஒரு தேவதூதனை போல் ஒருவர் என்னை பார்த்து சிரிக்கிறார். இடது கையில் வேட்டியின் ஓரத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116598/

எழுத்தாளனாகவே வாழ்வது என்பது…

அஞ்சலி:பிரபஞ்சன் இனிய ஜெயம் ஞாயிறு அன்று இரவே, நண்பர்களுடன் இல்லாமல் ,  நான் கிளம்ப முடிவு செய்த காரணம் ,திங்கள் அன்று  காலை பிரபஞ்சனின் இறுதிப் பயணம் என நான் இறுதியாக கண்டிருந்த செய்தியே .பொதுவாக நான் யாருடைய மறைவுக்கும் செல்பவன் இல்லை .உயிர் கொண்டு ,மொழி கொண்டு அவர் என்னுடன் உறவாடிய இறுதிக் கணம் மட்டுமே ,என் நினைவின் இறுதிச் சுவடாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே காரணம் . மாறாக பிரபஞ்சனின் இறுதிப் பயணத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116569/

நாடகங்கள்

நண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த பெரும்பாலான நாடகங்கள் என்னை ஈர்க்கவில்லை. அவற்றிலிருந்த பயிற்சியின்மை என்னைப்படுத்தியது. சோ, எஸ்வி.சேகர், ஞாநி, ந.முத்துசாமி, பிரளயன் நாடகங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். என் பிரச்சினையாகவும் இருக்கலாம் ஆனால் வாசிப்பில் பல நாடகங்கள் எனக்கு முக்கியமானவை என்று பட்டன. இந்திராபார்த்தசாரதியின் மழை, போர்வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73750/

கருத்துரிமைப்போராட்டம், பிரபஞ்சன், தோப்பில்…

நேற்று 25-1-2015 அன்று சென்னையில் நடந்த கருத்துரிமைப்பாதுகாப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டேயாகவேண்டும் என்று முடிவெடுத்தாலும் மறுநாள் காலை பத்துமணிக்கு நாகர்கோயிலில் இருந்தாகவேண்டும் என்பது இன்னொரு கட்டாயம். வேறுவழியில்லை.ஒரேநாளில் சென்று மீண்டுவர முடிவெடுத்தேன். ஆனால் ரயில் முன்பதிவு கிடைக்கவில்லை. வரவர நாகர்கோயில் சென்னை ரயில் முன்பதிவை பலமாதங்கள் முன்னரே முடிவெடுத்துச் செய்யவேண்டிய நிலை வந்துவிட்டிருக்கிறது. ஆகவே பேருந்து அமர்ந்தே வேலைசெய்வதனால் இடுப்பு – முதுகுவலி இருந்துகொண்டே இருக்கிறது. வெண்முரசு ஆரம்பித்த பின்னர் இந்த உடல்நிலைச்சிக்கலும் தொடங்கியது. எதையாவது விலைகொடுத்துத்தானே ஆகவேண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70608/

சாரல் உரை -கடிதம்

அன்பு ஜெயமோகன், இயக்குனர்கள் ஜேடியும், ஜெர்ரியும் நல்ல இலக்கிய ஆர்வலர்கள். தமிழ் நவீன இலக்கியவாதிகளைத் தொடர்ந்து கொண்டாடுவதற்காக சாரல் விருதை உருவாக்கியவர்கள். ஒரு சடங்காகவோ சம்பிரதாயமாகவோ இல்லாமல் உயிர்ப்போடு அவ்விழாவைத் தொடர்ந்து நட்த்தி வருபவர்கள். திலீப்குமார், அசோகமித்திரன், வண்ணதாசன், வண்ணநிலவன், பிரபஞ்சன், விக்கிரமாதித்யன் என சாரல் விருது பெற்ற படைப்பாளுமைகளைக் கவனித்தாலே அவ்விருதின் நேர்மைத்தன்மை புலப்படும். சமீபமாய் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்ட ஞானக்கூத்தனை 2010லேயே கொண்டாடியவர்கள் ஜேடியும் ஜெர்ரியும். அச்சகோதரர்களை மனதார வாழ்த்துவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69192/

பிரபஞ்சனுக்குச் சாரல் விருது

இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி அவர்கள் பெற்றோர் நினைவாக அமைத்துள்ள ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பாக அளிக்கும் சாரல் விருது சென்ற 2009 முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. திலீப் குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன், வண்ணதாசன் – வண்ணநிலவன் ஆகியோருக்கு இது சென்ற வருடங்களில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் பிரபஞ்சனுக்கு வழங்கப்படவுள்ளது வரும் ஜனவரி 26 அன்று சென்னையில் உள்ள ஆர்கெ கன்வென்ஷன் செண்டர், 146, ஓம்ஸ் லக்சனா, [மேல்மாடி] shaws show room மேலே , லஸ் கார்னர் அருகில், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34041/

மானுடம் வெல்லும், வானம் வசப்படும்

ஜெமோ, பிரபஞ்சனுக்கு சாகித்ய அகாடமி விருது ‘வானம் வசப்படும்’ என்ற நாவலுக்குத்தான் கிடைத்தது. மானுடம் வெல்லும் நாவல்தான் பாண்டிச்சேரி ஆனந்தரங்கனார் டைரிக் குறிப்புக்களை ஒட்டி எழுதப்பட்டது. தகவல் சரிபார்த்துவிட்டு எழுதவும். இப்போது திடீரென்று மானுடம் வெல்லும் உசந்த நாவல் என்று சொல்கிறீர்கள். இதற்கு முன்னர் எங்காவது சொன்னதுண்டா? சாமி அன்புள்ள சாமி, பிழைதிருத்தத்துக்கு நன்றி. திருத்திவிடுகிறேன். மானுடம் வெல்லும் நாவலின் இரண்டாம் பகுதிதான் வானம் வசப்படும். அதுவும் ஆனந்தரங்கம்பிள்ளை குறிப்புகளை ஒட்டி எழுதப்பட்டதே. மானுடம் வெல்லும் பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25344/

பிரபஞ்சனும் சங்ககாலமும்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, உயிர்மையில் வெளிவரும் திரு.பிரபஞ்சனின் சங்க காலகட்டத்தின் தமிழர் வாழ்வு பற்றிய கட்டுரைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் அக் காலத்தில் ’பெண்கள் ஒன்றும் தமிழ்ச் சமூகத்தில் பெரிய நிலையில் இல்லை, கவிஞர்கள் பாட ஒரு பொருளாகவே இருந்தனர்’ போன்ற கருத்தினை முன் வைக்கிறார். இப்போதிருக்கும் காலகட்டத்தினைக் கொண்டு அக்கால வாழ்வினை ஆழ்ந்து விமரிசிப்பது சரியா? உலகில் எந்த ஒரு பண்டைய சமூகத்திலாவது பெண்கள் சம அந்தஸ்துடன் அனைத்து நிலையிலும் நடத்தப்பட்டிருக்கிறார்களா? அல்லது அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19461/