Tag Archive: பிரஜாபதி

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 11

பகுதி இரண்டு : அலையுலகு – 3 ஐராவதீகக் காட்டினுள்ளே யானைக் கூட்டங்களும் காட்டெருமை மந்தைகளும் நுழைவதில்லை. புதர் குலையாது பாயும் மான்கணங்களும் இலை அசையாது செல்லும் புலிகளும் அன்றி அங்கு விலங்குகள் இல்லை. எனவே கால் வழி என ஏதுமின்றி ஐந்து திசைகளையும் நிறைத்த பசுமை பெருகி விரிந்த அலைவெளியென கிடந்தது அது. தழைந்த பெருங்கிளைகளில் ஒன்றில் இருந்து பிறிதுக்கு கால் வைத்து அர்ஜுனன் அக்காட்டுக்குள் சென்றான். காமம் கொண்டு கண்ணயர்ந்த பெண்ணின் தோளிலிழியும் பட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78951

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32

பகுதி ஆறு : தீச்சாரல் [ 6 ] மஞ்சத்தறையின் வாயிலை மிகமெல்லத்திறந்து நீண்ட வெண்ணிற வாள் என உள்ளே விழுந்த ஒளியால் வெட்டப்பட்டவளாகக் கிடந்த அம்பிகையை அம்பாலிகை எட்டிப் பார்த்தாள். அம்பிகை அசைவில்லாமல் அங்கேயே கிடந்தாள். துயில் ஒலி இல்லை என்பதை அம்பாலிகை கவனித்தாள். அம்பாலிகை கதவை மெல்ல அசைத்தபோது அம்பிகையின் கண்ணிமைகள் அதிர்ந்தன. மெல்லத்திரும்பி “நீயா?” என்றாள். “உள்ளே வரலாமா அக்கா?” என்றாள் அம்பாலிகை. “வா” என்றாள் அம்பிகை. அம்பாலிகை ஓடிச்சென்று அம்பிகையின் மஞ்சத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44720

பிரஜாபதியும் கிறித்தவர்களும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, அதிகமான அன்போடும் வணக்கங்களோடும் எழுதுகின்றேன். தங்கள் படைப்புகளை (சில சிறுகதைகள் மற்றும் அறிவியல் புனைவுகள் நீங்கலாக) அதிகம் வாசித்ததில்லை. ஆயினும் இரண்டாயிரத்து ஒன்பது முதலே உங்கள் வலைப்பக்கத்தை தினமும் படிப்பவன் நான். குறிப்பாக காந்தி பற்றிய தங்கள் பதிவுகள் என் முன்முடிவுகளை சுக்குநூறாக நொறுக்கிப் போட்டுப் புதியதொரு கோணத்தை எனக்கு அளித்தவை. சரி விஷயத்திற்கு வருகின்றேன். சாது செல்லப்பா என்ற ஒரு மதப் பற்றாளர் இந்து மத வேதங்கள் பிரஜாபதி என்ற ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35680

பிரஜாபதி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, அதிகமான அன்போடும் வணக்கங்களோடும் எழுதுகின்றேன். தங்கள் படைப்புகளை (சில சிறுகதைகள் மற்றும் அறிவியல் புனைவுகள் நீங்கலாக) அதிகம் வாசித்ததில்லை. ஆயினும் இரண்டாயிரத்து ஒன்பது முதலே உங்கள் வலைப்பக்கத்தை தினமும் படிப்பவன் நான். குறிப்பாக காந்தி பற்றிய தங்கள் பதிவுகள் என் முன்முடிவுகளை சுக்குநூறாக நொறுக்கி போட்டு புதியதொரு கோணத்தை எனக்கு அளித்தவை. சரி விஷயத்திற்கு வருகின்றேன். சாது செல்லப்பா என்ற ஒரு மத பற்றாளர் இந்து மத வேதங்கள் பிரஜாபதி என்ற ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28384