Tag Archive: பிரசேனர்

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 21

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 2 அணுகமுடியாது எப்போதும் அருகே நிற்பதைச் சுட்ட அஸ்வபாதத்தை சொல்வது அந்தகர்குலத்தின் வழக்கமாக இருந்தது. ஹரிணபதத்தைச்சூழ்ந்த எழுபத்திரண்டு ஊர்களில் எங்கே நின்றாலும் வானை உதைக்க எழுந்த குதிரைக்குளம்பை காணமுடியும். ஆனால் அதில் ஏறிச்சென்ற யாதவர் எவருமில்லை. அதைச்சூழ்ந்திருந்த காளநீலம் என்னும் பெருங்காடு நீலக்கூந்தல் என்று யாதவ குலப்பாடகர்கள் பாடினர். காளநீலி மலைக்குடிகளின் தெய்வம். பன்னிரு முலைகளும் ஏழுவிழிகளும் கொண்டவள். இரவுகளில் கூந்தல்சுழற்றி ஓலமிடுபவள். விண்மீன்களை அள்ளி வானில் வீசிப்பிடித்து கழற்சியாடுபவள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76145

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 20

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 1 குதிரைக்குளம்புப்பாறைக்குக் கீழே இருந்த குகைமுகப்பில் வைகாசிமாத ஏழாம் வளர்பிறைநாள் இரவில் அந்தகக்குலத்து யாதவர்களின் எழுபத்தெட்டு ஊர்களில் இருந்தும் வந்த குடித்தலைவர்கள் எரிகுளத்தைச் சூழ்ந்து அமர்ந்து அரசியல் தேர்ந்தனர். அந்தகக்குலத்தின் பன்னிரு பெருங்குடிகளில் இருந்தும் மூத்த யாதவர்கள் வந்திருந்தனர். கன்றுநலம்சூழும் மருத்துவர் எழுவரும் வான்குறியும் மண்குறியும் தேரும் நிமித்திகர் மூவரும் மூதன்னையருக்கு பலியும் பூசையும் ஆற்றும் பூசகர் பதின்மரும் அமர்ந்திருந்தனர். பிறை நிலவு பட்டுத்திரையை கிழிக்கும் வாள் என சென்றுகொண்டிருக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76110

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 19

பகுதி நான்கு : எழுமுகம் – 3 மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் சூழ, சிசுபாலனும் அவன் அமைச்சர்கள் நால்வரும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தாலும் பிரசேனராலும் யாதவர்களின் அரசரில்லம் நோக்கி அழைத்துச்செல்லப்பட்டனர். சத்ராஜித் பணிந்த மொழியுடன் “இவ்வழி” என்று கைகாட்டினார். சிசுபாலன் நிமிர்ந்து தொலைவில் மூங்கில்கழிகள் மேல் எழுந்த உயர்ந்த கூரையை நோக்கி புருவம் சுருக்கி “இதுவா அரசரில்லம்?” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்? இங்கு அவள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76098

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 18

பகுதி நான்கு : எழுமுகம் – 2 பிரசேனர் தன் தமையன் அறியாமல் அத்தனை நாடுகளுக்கும் மணத்தூது அனுப்பிக்கொண்டிருந்தார். நேரடியாகவே ஜராசந்தர் வரை செய்தியை கொண்டு சேர்த்தபோதும் மகதம் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. யாதவப்பெண்ணை ஜராசந்தர் மணப்பதில் அமைச்சர்களுக்கு உடன்பாடில்லை என்று ஒற்றர்செய்தி வந்தது. கலிங்கமும் மாளவமும் வங்கமும் பாமா அந்தப்புரத்துப் பெண்ணாக வரலாம் என்றும் யாதவப்பெண்ணுக்கு அரசிநிலை அளிக்க இயலாதென்றும் செய்தி அனுப்பின. கோசலம் அவளை ஆயிரம் பொன் கன்யாசுல்கம் அளித்து மகள்கொள்ள சித்தமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76092

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 17

பகுதி நான்கு : எழுமுகம் – 1 அஸ்வபாதத்தின் பிளவுண்ட முடிப்பாறையை தொலைவிலேயே பாமா பார்த்துவிட்டாள். குகர்களில் ஒருவன் மெல்லிய குரலில் மலைமுடி தெரிவதைப்பற்றி சொன்னான். முதியகுகன் அவ்வழியில் உள்ள சுழல்களைப் பற்றி சொல்லி சிறிய கயிறு ஒன்றில் கட்டப்பட்ட தக்கையை நீரில் வீசி அதன் அசைவை கணித்து வழியை வகுத்தான். பிற படகுகள் அனைத்தும் பின்னால் வந்துகொண்டிருந்தன. இறுதியாகத்தான் சத்ராஜித்தும் பிரசேனரும் இருந்த படகு வந்தது. செல்லும்போதிருந்த முறைநிரை திரும்பும்போது இருக்கவில்லை. துவாரகையில் இருந்து கிளம்பும்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76042

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16

பகுதி மூன்று : வான்தோய் வாயில் – 5 துவாரகையின் குன்று அதிலெரிந்த பல்லாயிரம் அகல்சுடர்களின் ஒளியும் இருளும் கலந்து பொன்னிருக்கும் உமிநீற்றுலை போல தோன்றியது. அதன்மேல் இருந்த இரு கரிய பாறைகளும் அதன் மீது கனன்று உருகுவதுபோல பந்த வெளிச்சத்தில் சிவந்திருந்தன. சூழ்ந்திருந்த முகங்களனைத்தும் எரியொளி ஏற்று தழலென தெரிந்தன. வெண்ணிற ஆடைகள் எரிந்தன. பொலனணிகள் கனன்றன. வெண்மணிகள் பற்றி எரிந்தன. செம்மணிகளோ நிறமிழந்து நீர்த்துளிகளாயின. கால்கோள் நிகழ்வுக்கான வைதிகச்சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்தன. பதினெட்டு வைதிகர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76012

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 15

பகுதி மூன்று : வான்தோய் வாயில் – 4 சாளரம் வழியாக கடல்நீலத்தை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். அவள் பார்த்த முதற்கடல் அதுதான். மஹதியும் ராகினியும் மாலினியும்கூட கடலை பார்த்திருக்கவில்லை. துவாரகைக்குள் நுழைந்து வளைசுருள்பாதையில் மேலேறத் தொடங்குவதுவரைக்கும் அவர்கள் கடலை அறியவில்லை. பலமுறை தென்மேற்குதிசையில் எழுந்திருந்த நீலச்சுவரை அவர்கள் நோக்கியிருந்தும்கூட அது வானத்தின் ஒரு தோற்றம் என்றே சித்தம் காட்டியது. சுருள்பாதையில் மேலேறி மூன்றாவது வட்டத்தை அடைந்தபோது கீழே கட்டி முடியாத துறைமுகப்பு தெரியத்தொடங்கியது. கடலுக்குள் இரண்டு நீண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75950

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 12

பகுதி மூன்று : வான்தோய் வாயில் – 1 யமுனையின் படகுத்துறையில் வண்ணக்கொடிகள் பறக்கும் ஏழு அணிப்படகுகள் அணைந்ததை சத்யபாமையின் தோழி ராகினிதான் முதலில் பார்த்தாள். “யாரது படித்துறையில்?” என்று நீண்ட கழுத்தை நீட்டி நோக்கியபோது அவை வணிகப்படகுகள் அல்ல என்று அறிந்தாள். வியப்புடன் “அவை அணிப்படகுகள் அல்லவா?” என்றாள். மஹதி எட்டிப்பார்த்து “மரங்கொத்திக் கொடிகள். அவை பார்ஸ்வ குலத்தவருக்குரியவை அல்லவா? எங்கு வருகிறார்கள்?” என்று சொன்னதுமே அவளுக்கு புலப்பட்டுவிட்டது. “ஏடி, உள்ளே சென்று அரசியிடம் சொல். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75857