Tag Archive: பிரகாஷ் சங்கரன்

வேஷம் பற்றி…

அன்புள்ள பிரகாஷ் வேஷம் கதை அசோகமித்திரனின் புலிக்கலைஞனை நினைவூட்டினாலும் முற்றிலும் வேறுபட்ட தளத்தில் வேறு ஒரு நுட்பமான பிரச்சினையை எதிர்கொள்கிறது. மனிதர்கள் தங்கள் ஆளுமையாகக் கொள்வதற்கு அப்பால் தாங்கள் வேறு என்பதை எப்போதும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆகவேதான் என்றும் வேடம் என்பது ஒரு பெரும் குறியீடாக உலக இலக்கியத்தில் உள்ளது. வேடம் பற்றி எழுதப்பட்ட கதைகளை ஆயிரக்கணக்கில் தொகுக்கமுடியும். வேடம் என்பது இன்னொன்றாக ஆவது. இன்னொன்றை நோக்கிச் செல்வது. தன்னை அழிப்பதும் வெல்வதும் கூட. வேடமுழுமை என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36428

பிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ -கடிதங்கள்

அன்புள்ள ஜெ., பிரகாஷ் அவர்களின் வேஷம் மாறுதல்களின் காலகட்டத்தை உணர்த்துவதாகத் தோன்றியது.. நிஜத்தை அது தரும் ஆர்வத்தையும் பரபரப்பையும் நேரில் கண்ட பின்பு, போல செய்வதின் மதிப்புதான் என்ன..அது எவ்வளவுதான் உண்மைக்கு நெருக்கமாக,புனிதமாக இருந்தாலும் கூட. சில சமயங்களில் நினைப்பதுண்டு ,கட்டுடைப்புகள் நிகழாமல் இருந்தால் வாழ்க்கை இன்னும் கொஞ்சம் ரசனையாக இருந்து இருக்ககூடும் என்று.. நல்லவேளை பிரகாஷ் அவர்களின் கருணை புலியையும் ஆசானையும் கொன்று விட்டது…யதார்த்தம் புலியை சர்க்கஸ் வித்தைக்கும், ஆசானை வெறுமையிலும் தள்ளி இருக்குமோ?.. பல்வேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38299

புதியவர்களின் கதைகள் 10, வேஷம்- பிரகாஷ் சங்கரன்

ஓலையினால் செய்யப்பட்ட சிறு தடுக்கு மறைவுக்குள் இறுக்கிக்கட்டிய கச்சத்துடன், உடலில் பூசப்பட்ட மஞ்சள் வர்ணம் அழியாதபடி இரண்டு கைகளையும் விரித்து கம்புகளை நிலத்தில் ஊன்றிக் கொண்டு கண்களை மூடி நின்றிருந்தார் ஆசான். தரையில் துலக்கிய பழைய வெண்கலக் கிண்ணங்களில் மஞ்சள், கருப்பு வெள்ளை, சிவப்பு என வண்ணக்குழம்புகள் இருந்தன. ஆசான் உடம்பை விரைப்பாக வைத்து கருங்கல் போல அசையாமல் இருந்தார். சோமனும், கோவிந்தனும் தூரிகையால் வண்ணங்களைத் தொட்டு ஆசானின் உடலில் கோடுகளை எழுதிக்கொண்டிருந்தனர். கருங்கல் மெதுமெதுவாக பாதங்களிலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36426

பிரகாஷ் சங்கரன்

பிரகாஷ் சங்கரன், சொந்த ஊர்- மதுரை மாவட்டம், சோழவந்தான், தென்கரை கிராமம். கடந்த ஐந்து வருடமாக முனைவர் பட்டத்திற்காக செக் குடியரசில், எச்.ஐ.வி -எய்ட்ஸ் நோய்சிகிச்சை குறித்த ஆய்வில் ஈடுபட்டுவருகிறேன். சொல்புதிது குழுமத்தில் இலக்கிய, தத்துவ, அறிவியல் உரையாடல்களில் பங்குகொண்டு எழுத ஆரம்பித்துப் பழகினேன். கடந்த இரண்டு வருடங்களாக இணையத்தில் எழுதுகிறேன். சொல்வனம் இதழில் கட்டுரைகள், கதைகள் பிரசுரமாகியுள்ளது. http://solvanam.com/?author=193 http://jyeshtan.blogspot.com என்பது என் வலைப்பக்கம். இதுவரை ஞானலோலன், அன்னதாதா, உள்ளுறங்கும் அரவம், லீலை, இருப்பு, மயக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36527

செக்,பிரகாஷ்-கடிதங்கள்

ஆசிரியருக்கு, வணக்கம். மேலை வாழ்வு தனி மனித உரிமை பேணுதலில் அக மகிழ்வை இழக்கின்றன என்பது குறித்த உங்கள் வாசகரின் பார்வையைப் பார்த்தேன். இது ஒரு பக்கம் என்றே தோன்றுகின்றது. நீங்கள் முத்துலிங்கம் சிறுகதைகள் தொகுப்புக்கு ஒரு சிறு பத்தி எழுதி இருந்தீர்கள். அதில் உலகமே ஒரு கிராமமாக சுருங்குகின்றது. மானுடம் இணைக்கப் படுகின்றது என்று அந்தப் பத்தியில் வரும். இது நான் எட்டாவது அல்லது ஒன்பதாவது படிக்கையில் ஆங்கிலp பாடத்தில் படித்த “shrinking world” என்ற பாடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31497

செக் குடியரசின் வாழ்க்கை [பிரகாஷ் சங்கரன்]

ஒரு மாதத்திற்கு முன் நண்பர்களுக்கிடையிலான ஒரு கலந்துரையாடலில் கிருஷ்ணன் இந்தியர்கள் champions of mediocrity ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்ற கவலையைத் தெரிவித்தார். அவர் தன் எல்லைக்குள் கவனித்தவரையில், இந்திய தனிநபர்கள் மிகுந்த உழைப்பும், கவனமும், திறமையும் தேவைப்படும் வேலைகளில் ஒதுங்கி மேம்போக்கான ஒரு ‘நடுசெண்டரான’ வாழ்க்கையை வாழ்கிறவர்கள் என்று சொன்னார். மூளைத் திறனிலும் உடல் திறனிலும் நாம் சப்பாணிகளாய் விட்டோம் என்றார். இந்த திறமைக் குறைவை ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளைக் கொண்டு உதாரணம் காட்டினார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31172