Tag Archive: பிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’

பிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’ – இன்னொரு கடிதம்

ஜெ பிரகாஷ் சங்கரனின் வேஷம் நீங்கள் எழுதிய லங்காதகனம் கதையின் இன்னொரு வடிவம். improvisation என்று இன்னும் சரியாகச் சொல்லலாம். அல்லது அதற்கான எதிர்வினை என்று. லங்காதகனம் கதையில் கதகளிஆசான் இழிவுபடுத்தப்பட்டு சுருங்கி உயிர்வாழக்கூடிய ஒரு கலைஞன். எலியின் அசைவுகள் அவரது உடலில் இருந்தன என்று அதில் கதை சொல்லக்கூடியவன் சொல்கிறான்.அவர் உக்கிரமான அனுமாராக ஆவது என்பது ஒரு பரிணாமம். தன்னைத் துறந்து கலையாக ஆகிவிடுவது. வேஷம் மூர்த்தி உடலில் கூடுவது. அதை முழுமைப்படுத்த வேஷக்குறையை அழித்துக்கொள்கிறார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38267

பிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்

ஜெ, பிரகாஷ் சங்கரனின் வேஷம் கதை வாசித்தேன். கதைகள் எப்போதுமே வாழ்க்கையனுபவங்களின் தூண்டுதலில் இருந்துதான் வரும் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையிலே அப்படிக்கிடையாது. கதைகள் வேறுகதைகளில் இருந்து உருவாவதும் அதே அளவுக்கு காணப்படுகிறது. போர்ஹெஸ் அப்படிச் சொல்லியிருக்கிறார். தன்னுடைய எல்லா கதைகளுமே வேறு கதைகளில் இருந்து வந்தவைதான் என்று சொன்னார். சரியாகச்சொன்னால் தனக்கு கதைகள் முக்கியம் இல்லை மெட்ட்ஃபர்கள்தான் முக்கியம் என்று போர்ஹெஸ் சொன்னார். மெட்டஃபர்களை பிற கிளாஸிக் படைப்புகளில் இருந்து எடுத்துக்கொண்டு அதைவைத்துத்தான் தன்னுடையகதைகளை எழுதுவதாகச்சொன்னார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38271

பிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, நேற்று தங்கள் தளத்தில் வெளியான பிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ ஒரு நல்ல சிறுகதை. இச்சிறுகதையின் மையமான புதிர் மிக ஆழமானது அதை ஆசிரியர் நுட்பமாக முன்வைத்திருக்கிறார். உலகை நாம் தர்க்கரீதியாகவும், அனுபவரீதியாகவும் விட அதிகமாக படிமங்களாகத்தான் உள்வாங்கி கொள்கிறோம். நமது செய்கைகளிலும் நாம் எடுக்கும் முடிவுகளிலும் கூட தர்க்கத்தையும் அனுபவத்தையும் விட படிமங்களே அதிகம் பங்கு வகிக்கின்றன. சமீபத்தில் கணவன் உறங்கும்போது தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொன்ற மனைவியை பற்றி படித்தது ஞாபகத்திற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38263