Tag Archive: பின் நவீனத்துவம்

கட்டுடைப்புத் தொழில்

லட்சுமி மணிவண்ணன் எழுதிய ‘அனைத்தையும் கட்டுடைக்காதீர்கள்’ என்னும் குறிப்பை நேற்று பிரியம்வதாவின் கேள்விக்கு பதிலாக எழுதிய கட்டுரையுடன் இணைத்து வாசித்தேன். இன்று நம் அறிவுச்சூழலில் கட்டுடைத்தல் என்னும் சொல் அளவுக்கு பிரபலமாக பிறிதொன்றில்லையென்று தோன்றுகிறது. சென்ற தலைமுறையில் புரட்சி என்ற சொல் எந்த இடத்தில் இருந்ததோ கிட்டத்தட்ட அதே இடத்திற்கு இந்தச் சொல் வந்து சேர்ந்திருக்கிறது. குறிப்பாக சமூக வலைதளங்கள் பிரபலமடைந்து ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்பியதை எழுதுவதற்கான ஒரு களம் அமையும்போது, வம்புகள் அனைத்துமே எழுத்துவடிவம் பெற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96674

நீங்களும் பின் நவீனத்துவக் கட்டுரை வனையலாம்

இப்போதைய சிற்றிதழ்கள் பொதுவாக நீளமான கட்டுரைகளை வெளியிடுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.வெளியிட்டால் அவை பின்நவீனத்துவக் கட்டுரைகளாகவே இருக்கும். பழங்காலத்தில் கப்பல்களில் அடிக்குவட்டில் எடை வேண்டுமென்பதற்காக உப்பு ஏற்றப்பட்டது போல சிற்றிதழ்களை தீவிர இதழ்களாக தோற்றமளிக்கச் செய்வதற்கு பின் நவீனத்துவக் கட்டுரைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நல்ல பின்நவீனத்துவக்கட்டுரையானது பின்நவீனத்துவக் கட்டுரை எழுதும் அல்லது எழுத விரும்பும் பிறரால் மட்டுமே படிக்க முயலப்படும் என்பதை முதலில் உணரவேண்டும். எனவே துணிந்தவனுக்கு துக்கமில்லை என்பதே பின்நவீனத்துவ எழுத்தின் முதல்கொள்கையாகும். பின் நவீனத்துவத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/321

பின்நவீனத்துவம் ஒரு கடிதம்

அன்பு ஜெயமோகன், பின்நவீனத்துச் சிந்தனைகளின் காரணமாகத்தான் விளிம்புநிலை மக்கள் மீதான கவனம் பரவலாக்கப்பட்டது என்னும் உங்கள் கூற்றை இன்னும் சற்று விவரித்து கூற இயலுமா? பொதுவாக பின்நவீனத்துவம் குறித்து தேவையற்ற வெறுப்பு உமிழப்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட இலக்கிய கோட்பாடுகள் நமக்குத் தேவையில்லை என்றொரு கருத்தும் நிலவுகிறது. சிறுகதை, நாவல் போன்ற இலக்கிய வடிவங்களும் இறக்குமதி செய்யப்பட்டவையே. இந்திய மரபில் அவை கிடையாது. எனில் இலக்கியம் ஏதோவொரு நிலையில் தேங்கிக் கிடப்பதற்கு மாறாக இவ்வகையான சலனங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் அது விரும்பத்தக்கதுதானே? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/244

ஜே.ஜே.சிலகுறிப்புகள்,சாரு நிவேதிதா– இருகடிதங்கள்

இணையத்தின் வேகம் பிரமிக்கச்செய்கிறது. நான் எழுதவந்த நாட்களில் ஒரு சிற்றிதழ்களில் பிரச்சினை எழுந்தால் அதற்கு பதில் சொல்லி ஒரு கடிதம் எழுதுவோம். மூன்றிலிருந்து ஆறுமாதத்திற்குள் அது அச்சில் வரும். அதற்கான பதில் மீண்டும் அதே அளவு நாட்கள் கழித்து வெளியாகும். அதற்கு பதில் எழுதுகையில் ஒருவருடம் கழிந்திருக்கும். ஒருவருடகாலம் ஒரு கோபத்தை நீட்டிப்பது கஷ்டம்.நானெல்லாம் உடனே மறந்து என் வேலைக்கு திரும்பியமையால் புனைகதைகளை எழுதினேன். விவாதங்களில் ஆழ்ந்து அழிந்தவர்களே அதிகம். இப்போது ஜே.ஜே.சிலகுறிப்புகள் பற்றிய கடிதத்தை எழுதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/230