Tag Archive: பின் தொடரும் நிழலின் குரல்

அரசியலின் அறம்

அரசியலில் உள்ளவனின் அறம் என்பது என்ன? தனிமனிதனாக அவன் செய்யக்கூடியது என்ன, தனிமனித தர்மம் என்பது அரசியலில் வந்த உடன் மாறக்கூடுமா? தனிமனித அறமும் அரசியல் தர்மமும் முரண்படும் போது ஒருவன் என்ன செய்யக்கூடும்? பல கேள்விகள். ரெங்கசுப்ரமணி பின் தொடரும் நிழலின் குரல் பற்றி பின் தொடரும் நிழலின் குரல் அனைத்து விவாதங்களும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/61862

பின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் எழுதுகிறேன். ஏற்கனவே இரு முறை ‘பின் தொடரும் நிழலின் குரல்’ படித்திருக்கிறேன்.2009 க்கு பிறகு சென்ற வாரம் மீண்டும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.முன்பு படித்த பொழுது கதையின் வெறும் பகுதியாக தாண்டிச் சென்ற பல பக்கங்கள் இம்முறை பல புதிய வாசல்களை திறந்து காட்டின. ஓர் இலக்கியம் மாபெரும் இலக்கியமாக அடையாளப்படுதப்படுவது இந்த அம்சத்தால் தானே? விஷ்ணுபுரமும் காடும் என்றென்றும் என்னுடன் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கின்றன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56396

பின்தொடரும் நிழலின் குரல்களைப்பற்றி…

அன்பின் ஜெ , நலமா? பின் தொடரும் நிழலின் குரல் நாவலை வாசித்துக் கொண்டு இருக்கிறேன். நாவலை முழுமூச்சில் வாசிக்க முடிந்தது வீரபத்திர பிள்ளையின் கடிதத் தொகுப்புகள் பகுதி வரை. அந்தப் பகுதியை வாசிக்கும்போது நான் அடைந்த சோர்வு வார்த்தைகளில் கூறக்கூடியதல்ல. நேற்று நானும் எவ்வளவோ முயன்றும்,நூலை நெருங்க முடியவில்லை. அருணாசலத்தின் கட்சி விசாரணையின்போது விரியும் வீரபத்திர பிள்ளையின் சொற்கள் இந்நாவலின் உச்சம். எனக்கு சித்தாந்த அறிமுகமேதும் இல்லை. மார்க்சியத்தின் மீது முன்முடிவுகளேதும் எனக்கு இல்லை. நாவலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46638

வரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல்

க.மோகனரங்கன் ஓர் இலக்கியப்படைப்பு மகத்தானது என்று கருதப்பட அடிப்படையாக அமைகின்ற கூறுகள் எவை ? வேறு ஒரு தேசத்தில், வேறு ஒரு சூழலில், வேறு ஒரு மொழியில் நிகழும் படைப்பு எவ்விதத்தில் அன்னியோன்னியமான ஒன்றாக நமக்குள் இடம் பெயர்கிறது, உறவுகொள்கிறது? நாம் நேரில் காணும் மனிதர்களைக் காட்டிலும் படைப்பாளியின் கற்பனையில் உருக்கொள்கிற கதாபாத்திரங்கள் ஏன் நம்மை பாதிக்கிறார்கள்? யதார்த்த வாழ்க்கையில் நாம் வெகு சுலபமாக உதாசீனம் செய்துவிட்டுப் போகும் விஷயங்கள், மதிப்பீடுகள் ஒரு படைப்பில் வெளிப்படுகையில் ஏன் மனம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45651

வெண்முரசும் நவீனத்துவமும்

வெண்முரசு நாவலை ஒட்டி உள்ளே வரும் புதியவாசகர்களில் ஒருசாரார் இந்நாவலின் புனைவைப்பற்றிய குழப்பங்களை எழுதியிருக்கிறார்கள். அதாவது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை எழுதும் புனைகதைகளைத்தான் அவர்கள் வாசித்திருக்கிறார்கள். இந்த நாவல் புராணம்போல இருக்கிறது, இப்படி எழுதுவது நவீன இலக்கியமாகுமா என்று சிலர் கேட்டிருந்தனர். வாசிப்பின் ருசி, படைப்புகள் சார்ந்த எதிர்பார்ப்பு, அல்லது படைப்புகள் சார்ந்து இருக்கும் பொது மனஉருவகம் என்பது இயல்பானதோ தன்னிச்சையானதோ அல்ல. அது எப்போதும் கட்டமைக்கப்படும் ஒன்று. அதன்பின்னால் தத்துவம், அரசியல் போன்றவை உள்ளன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45840

கடுங்குளிர் கவிதைகள்- 1

எறும்பு தின்னியின் நிதானம். திடமான கால்களுடன் மந்தமான கண்களுடன் கனமாக அசைந்து செல்கிறது. அதன் குளிர்ந்த நாக்கு எறும்புப் புற்றுகளுக்குள்ளே நெளிந்தேறுகிறது. அதன் குளிர்ந்த மூச்சு அங்குள்ள கூடுகளைச் சிதறடிக்கிறது. உள்ளே ஓலங்கள் உயிரின் குருட்டு வெறி தினம் அதுகாண்பது அக்காட்சி. மரணம் ஒரு பெரும் பதற்றம் என அது அறிந்தது. எனவே வாழ்வு ஒரு நிதானமான நடை எனப் புரிந்து கொண்டது. இரு பறவைகள் வல்லூறு ஆற்றல் மிகுந்த பறவை காற்றின் படிக்கட்டுகள் அதன் கண்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23094

ஒரு முதற்கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நான் அறிவுடை நம்பி. எட்டாம் வகுப்பு படிக்கும் போது சிறுவர்மணியில் வெளியான பனிமனிதன் என்னை வெகுவாகக் கவர்ந்தது. வழக்கமான சிறுவர் கதைகளில் இருக்கும் ‘ குழந்தைத்தனம்’ இல்லாமல், வாசிப்பதற்கு ஒரு சவாலை பனிமனிதன் அளித்தது. கல்லூரி இறுதியாண்டுகளில் திண்ணை இணைய இதழில் தங்களின் கதைகள் மூலம் மீண்டும் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். இளமைக்கே உரிய உணர்வெழுச்சியுடன் தங்களின் கதைகளை வாசித்தது இன்றுவரை நீளும் பெரும் மனக்கொந்தளிப்புகளை உருவாக்கியது. வடக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38995

பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்

ஜெ, விஷ்ணுபுரம் விருதுவிழா முடிந்ததிலிருந்து உங்களுக்கு நான் எந்தக் கடிதமும் எழுதவில்லை. ஆனால்தினமும் உங்கள் தளத்தில் மேய்வது மட்டும் நிற்கவில்லை. பொதுவாகவே இணையப் பயன்பாட்டைக் குறைத்துப் புத்தகங்கள் வாசிப்பதை அதிகரித்து விட்டதால் உங்கள் தளத்தில் கூட நிறைய வாசிக்க முடிவதில்லை. ஆனால் உண்மை சுடரும்கட்டுரைகள் முதற்சில வரிகளிலேயே உள்ளிழுத்துக் கொள்கின்றன. வாழைப்பழ தேசம், மதுவிலக்கு பற்றிய கட்டுரைகள் போன்று. சிறுகதைகளில் காந்தி பற்றிய சிறுகதையை வாசித்தேன். சென்ற மாதங்களில் உங்கள் நாவல்கள் சிலவற்றை வாசித்து முடித்தேன். பின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35717

பின் தொடரும் நிழலின் குரலில் ஆசிரியன்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு உங்களின் “பின் தொடரும் நிழலின் குரல்” நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் நீங்களும் ஒரு கதாபாத்திரமாக வருகிறீர்கள். திரைப்படங்களில் “cameo” என்று வருவது போல, நகைச்சுவை கௌரவ பாத்திரமாக நீங்களே வந்திருக்கிறீர்கள். அதற்கான காரணம் கதையிலேயே இருக்கக்கூடும். இப்போது நான் இருநூறாம் பக்கத்தில் இருக்கிறேன். தத்துவங்களின் தருக்கங்களாகத் தீவிரமாக நகரும் பக்கங்களில், உங்களின் பாத்திரம் புன்முறுவலை வரவழைத்து, வாசிப்பைக் கொஞ்சம் லேசாக்குகிறது. இந்த உத்தி எந்த ரகத்தைச்சார்ந்தது? நன்றி கணேஷ் நியூ டெல்லி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35634

காடு, விஷ்ணுபுரம், வெறும்முள்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். ‘காடு’ நாவல் சமீபத்தில் வாசித்து முடித்தேன். ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை எனக்கு அளித்தது. மிக்க நன்றி. உங்கள் வரிகளில் காடும் காடு சார்ந்த இடங்களும் என்னுள் புது பரிணாமம் பெற்றது. இனி நான் காட்டை நேரில் காண நேர்ந்தால் அங்குள்ள சிறு பூச்சிகளின் ஓசையைக் கூட என் மனம் தவறவிடாது. அணு அணுவாய் ரசிக்கத்தோன்றும். கிரியும் அய்யரும் ரசித்தது போல. நாவலில் காட்டு வாழ்கையையும் நகர வாழ்கையையும் ஆங்காங்கே ஒப்பிடப்பட்டுள்ளது. அவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35603

Older posts «

» Newer posts