Tag Archive: பின்நவீனத்துவம்

பின்நவீனத்துவம் பற்றி வாசிக்க

வணக்கம் சார். இணையத்தில் உங்களது கடிதப் பதிவைப் பார்த்தேன். அதற்கு தோதாக, எனக்கு ஏற்பட்டிற்கும் சில ஐயங்களை தங்களுடன் இக்கடிதம் மூலம் பகிர எண்ணுகிறேன். முதலில் என்னைப் பற்றி பேசிவிடுகிறேன். நான் ஒரு ஆய்வு மாணவன்; தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழில், ராஜ் கெளதமன் எழுத்துக்களில் பின் நவீனத்துவக் கோட்பாட்டுத் தாக்கம் என்கிற தலைப்பின் கீழ் கடந்த இரண்டாண்டுகளாக முனைவர் பட்டம் மேற்கொண்டு வருகிறேன். தமிழில் பின் நவீனத்துவம் பேசியவர்கள் – பேசுபவர்கள் – அவர்கள் எழுதிய எழுத்துக்கள் என  கூடிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84534

பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு

பின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74687

பெருங்கதையாடல்

”சண்டாளி , அவ நல்லாருப்பாளா? கண்ணப்பாரு கண்ண. அவ கண்ணில கொள்ளிய வச்சு பொசுக்க” என்று மாமியாரின் குரல் பக்கத்து அறையில் கேட்டது. அதிலிருந்த அதியுக்கிரம் என்னை ஆறுதல்படுத்தியது. ஒன்றுமில்லை, சீரியல்தான். “என்னா பேச்சு பேசுறா? அவங்க புருசனும் பொஞ்சாதியும் ஆயிரம் பேச்சு பேசுவாங்க. இந்த நொள்ளக்கண்ணு மிண்டைக்கு அதில என்ன? வாறா பாரு பாவய நீட்டிட்டு” உள்ளே வந்த மனைவியிடம் நைச்சியமாக “என்ன சீரியல்”என்றேன். “இது சீரியல் இல்ல ஜெயன். கதையல்ல கருத்துங்கிற ரியாலிட்டி ஷோ” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68608

வெண்முரசும் நவீனத்துவமும்

வெண்முரசு நாவலை ஒட்டி உள்ளே வரும் புதியவாசகர்களில் ஒருசாரார் இந்நாவலின் புனைவைப்பற்றிய குழப்பங்களை எழுதியிருக்கிறார்கள். அதாவது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை எழுதும் புனைகதைகளைத்தான் அவர்கள் வாசித்திருக்கிறார்கள். இந்த நாவல் புராணம்போல இருக்கிறது, இப்படி எழுதுவது நவீன இலக்கியமாகுமா என்று சிலர் கேட்டிருந்தனர். வாசிப்பின் ருசி, படைப்புகள் சார்ந்த எதிர்பார்ப்பு, அல்லது படைப்புகள் சார்ந்து இருக்கும் பொது மனஉருவகம் என்பது இயல்பானதோ தன்னிச்சையானதோ அல்ல. அது எப்போதும் கட்டமைக்கப்படும் ஒன்று. அதன்பின்னால் தத்துவம், அரசியல் போன்றவை உள்ளன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45840

பின் நவீனத்துவம், பின்கொசுவம்

அன்புள்ள ஜெ … நலம் . நலமறிய அவா.. பின் நவீனம் பின் நவீனம் என்று எல்லோரும் பீற்றிக் கொள்(ல்)கிறார்களே,அதனால் மக்களுக்கும் சமுதாயத்திற்கும் விளைந்த நன்மைகள் என்ன? முன்னேறத் துடிக்கும் இயற்கை விழைவைத் தடுத்து மனிதர்களின் விழுமியப் பண்புகளை அலட்சியப்படுத்தி விட்டு சமுதாயம் என்ற கட்டுக்கோப்பான ஒரு அமைப்பை உடைக்கும் விதமாகத் தனி மனித உணர்வுகளைப் பிரதானப்படுத்தும் ஒரு பிற்போக்கு வாதமாகவே எனக்குப் படுகிறது தயவு செய்து விளக்கவும்.. அன்புடன் சேது அன்புள்ள சேது, இவ்வகைக் கடிதங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29666

எம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சன அடித்தளம்

எம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சனத்துக்குள் செல்வதற்கு முன்பாக ஒரு குழப்பம் எஞ்சுகிறது. அவரது இன்றைய கருத்துக்களைப் பழைய கருத்துக்களின் வளர்ச்சி அல்லது நீட்சியாக எடுத்துக்கொள்ளலாமா இல்லை புத்தம்புதியதாகப் பிறந்துவிட்டாரா என்பதுதான் அது. எதற்கு வம்பு என்று இப்போதுள்ள எம்.டி.முத்துக்குமாரசாமியையே எடுத்துக்கொண்டு பேசுகிறேன் முதலில் அவர் என்னுடைய விமர்சனத்தை நிராகரிக்கும் பொருட்டு எழுதியவற்றை அவரைப் புரிந்துகொள்ள அளவுகோலாக எடுத்துக்கொள்கிறேன். என்னுடைய ரசனை விமர்சனமும் அதன் தரவரிசைப்படுத்துதல்களும் அபத்தமானவை, வன்முறையானவை, அதிகாரப்பிரயோகமுடையவை என்று சொல்லும் எம்.டி.முத்துக்குமாரசாமி அதற்கு அளிக்கும் காரணங்களைப் பார்த்து தாமிரவருணி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21977

கிறிஸ்து,கிருஷ்ணன்,பகுத்தறிவு…

உபநிடதங்களிலும் கீதையிலும் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டும் இடமறுகுவின் நூல்கள் அவற்றைப்பற்றிய விமர்சன ஆய்வுக்கு பெரிதும் உதவக்கூடியவை. அவற்றில் உள்ள பல்வேறு இடைச்செருகல்கள், சமரசங்கள், போலிகளை சுட்டிக்காட்டுபவை.

Permanent link to this article: https://www.jeyamohan.in/8502