Tag Archive: பிக்கானீர்

அருகர்களின் பாதை 27 – சங்கானீர், ஜெய்ப்பூர்

பிக்கானீரில் இருந்து மதியமே கிளம்பினோம். இன்று முழுக்க முழுநேரமும் காரிலேயே செலவழிந்தது. ஒரு நீண்டபயணம் முடிந்து திரும்பி வரும்போது கடலோதம் இறங்குவது போல ஒரு மனச்சோர்வு உருவாகும். அதைத் தவிர்க்கவே திரும்பும் வழியிலும் நிறைய இடங்களைக் குறித்து வைத்திருந்தோம். ஆனாலும் திரும்புகிறோம் என்ற உணர்ச்சி இருந்தபடியேதான் இருந்தது. ஒரு மாதம் ஊரைவிட்டு விலகி இருந்தாலும் கூட எவருமே பயணத்தின் சலிப்பை உணரவோ, திரும்பிச்செல்லவேண்டும் என்ற உணர்ச்சியை அடையவோ இல்லை. இப்படித் தோன்றுகிறது, வெறுமே ஊர் சுற்றுவதிலும் வேடிக்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24862

அருகர்களின் பாதை 26 – பிக்கானீர்

ஜெய்சால்மரில் இருந்து ஜெய்ப்பூருக்குப் பயணமாக முடிவெடுத்தோம். இந்த முடிவு கொஞ்சம் சிக்கலானது. எங்கள் திட்டத்தில் இருந்த இரு முக்கியமான சமண ஊர்கள் ஒன்று ஓசியான், இன்னொன்று அர்துனா. இரு ஊர்களுமே முக்கியமானவை. அர்துனா ஒரு காலகட்டத்தில் ராஜபுத்ர வம்சமான பாரமாரா மன்னர்களின் தலைநகரமாக இருந்தது . பாரமாராக்கள் மாளவத்தைப் பதினொன்றாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர்கள். பாரமாரா வம்சத்தின் புகழ்பெற்ற மன்னர் என்றால் போஜராஜன்தான். [பிக்கானீர் அரண்மனை] அர்துனாவைச்சுற்றி ஏராளமான இந்து சமணக் கோயில்கள் இடிந்து கிடக்கின்றன என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24838