Tag Archive: பிகார் மதுவிலக்கு

பிகார் மதுவிலக்கு

லல்லு என்னும் நச்சு சக்தி காரணமாகவே பிகார் அரசைப்பற்றி ஆழ்ந்த அவநம்பிக்கை என்னுள் இருக்கிறது. தமிழகத்தின் அரசியலின் மிகமிகத்தாழ்ந்த எல்லைகளிடம்கூட லல்லுவை உவமிக்கமுடியாது. அவர் அரசியல்வாதியே அல்ல. நிழல் உலக தாதாக்களின் மனநிலையும் செயல்பாடும் கொண்டவர். ஆனால் நிதீஷ் குமார் பூரணமதுவிலக்கை அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். வழக்கமான எல்லா ஐயங்களையும் எழுப்புவார்கள். கள்ளச்சாராயம் பெருகும், அது குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பார்கள். அரசுக்கு வரவேண்டிய வருமானம் நிழல் உலகுக்குப்போவதனால் சமாந்தர அரசுகள் உருவாகும் என்பார்கள். கிராமங்களில் ரவுடித்தனம் உருவாகும் என்பார்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81231