Tag Archive: பாஸ்டன்

கனடா -அமெரிக்கா பயணம்

நண்பர்களுக்கு இன்று சென்னையிலிருந்து நீண்டபயணம் கிளம்புகிறோம், நானும் அருண்மொழியும். தோராயமான பயணத்திட்டம் இது. ஜூன் 11 முதல் 22 வரை கனடா ,டொரெண்டோ ஜூன் 23 முதல் 26 வரை பாஸ்டன் ஜூன் 26, 27, 28 (வெள்ளி – ஞாயிறு) – வாஷிங்டன் டிசி ஜூன் 29, 30 & ஜூலை 1 – நியு ஜெர்சி, நியு யார்க் ஜூலை 2 & 3 – ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா ஜூலை 4 – கனெக்டிகட் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75906

வாக்களிக்கும் பூமி 4, அறிவியலரங்கம்

எண்பதுகளில் நான் சென்னையில் அலைந்திருக்கிறேன். ஒரு நகரில் ‘அத்து அலைவ’தென்பது ஒரு முக்கியமான அனுபவம். காந்தப்புலம் கொண்ட பல பொருட்கள் அலையும் ஒரு வெளியில் ஒரு இரும்புத்துகள் போல அப்போது உணர முடியும். நம்மை ஏதேதோ கவர்ந்து எங்கெங்கோ கொண்டுசென்றபடி இருக்கும். அதன்பின் இத்தனை நாட்களில் நான் அலைந்த நகரங்களை எண்ணிக்கொண்டால் பிரமிப்பு ஏற்படுகிறது. பாலைவன நகரங்கள் மலை நகரங்கள் வேளாண்மை நகரங்கள் தொழில்நகரங்கள். இப்ப்போது வேற்றுமண்ணில் புதிய நகரங்கள். ஆனால் பாஸ்டன் நகரில் உலவும்போது மீண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3528

வாக்களிக்கும் பூமி- 3,பாஸ்டன் நகரம்

  பாஸ்டன் அமெரிக்காவின் சிந்தனைப்போக்கில் ஆழமான பாதிப்புகளைச் செலுத்திய நகரம். அதற்கான காரணத்தை அதன் தூய்மைவாத பாரம்பரியத்தில் தேடவேண்டும் என்று தோன்றுகிறது.  தூய்மைவாதிகள் பிரிட்டனில் எதிர்ப்பிய [புரட்டஸ்டண்ட்] கிறித்தவ மரபுக்குள் உருவான ஒரு கருத்தியல் தரப்பு. சொல்லப்போனால் பல்வேறு தரப்புகளின் தொகுப்புப்பெற்ற் அது. கிறித்தவ மதத்தில் சடங்குகளாகவும் ஆசாரங்களாகவும் நம்பிக்கைகளாகவும் புகுந்த புறப்பாதிப்புகளை முற்றாக விலக்கி பைபிள் சொல்லும் தூய கிறித்தவத்தை பின்பற்ற விரும்பியவர்கள். அது ஒரு இலட்சியக் கற்பனை மட்டுமே, ஏனென்றால் பைபிளே  யூத கிரேக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3488

வாக்களிக்கும் பூமி – 2, பாஸ்டன்

நான் அமெரிக்கா வந்திறங்கும்போது தேர்ந்த ஒரு படைத்தலைவனை நம்பி கண்மூடித்தனமாக போர்முனைக்குச்செல்லும் படைவீரனைப்போல எதைப்பற்றியும் எந்தக்கவலையும் இல்லாமல் வந்திறங்கினேன். என் பயணத்திட்டத்தைப் பற்றி எந்த மனச்சித்திரமும் என்னிடம் இருக்கவில்லை. எங்கேயெல்லாம் செல்கிறேன், யாரைச் சந்திக்கிறேன் எதுவும். எல்லாவற்றையும் நண்பர் ராஜன் தீர்மானித்து துல்லியமாக வகுத்திருந்தார். ஆகவே சென்றிறங்கும் எந்த நகரத்தைப்பற்றியும் எந்த தகவலையும் முன்னரே நினைவில் உருவாக்கிக்கொள்ளவில்லை. ஏனென்றால் இது கூகிள் எர்த் உலகை ஒற்றை வரைபடமாகச் சுருக்கிவிட்ட காலம். கூகிளில் நான் வாழும் சாரதாநகர் தெருவையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3451