Tag Archive: பாவலர் விருது

பாவலர் விருது விழா

இருபத்து மூன்றாம் தேதி காலையில் இருந்தே வேலைகள். மே ஒன்றாம் தேதி முதல் நான் நடத்தவிருக்கும் கவிதைப்பட்டறைக்கான மொழிபெயர்ப்புவேலைகள் இன்னும் முடியவில்லை. நடுவே பல வேலைகள். என் பிறந்த நாள் அன்று தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்தபடியே இருந்தன. பேசியபடியே பகல் எல்லாம் இருந்து கவிதைகளை மொழியாக்கம்செய்தேன். மொத்தம் 120 கவிதைகள். தமிழில் இருந்து மலையாளத்துக்கும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கும். அவற்றை அச்சு போட்டு நகல் எடுத்து பங்கேற்பாளர்களுக்கு முன்னரே அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பி வரும்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/396

பாவலர் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்

பிரம்மகான சபா வழங்கும் எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆவணப்படம் திரையிடும் விழாவும் இசைஞானி இளையராஜா இலக்கியப்பெருமன்றத்தின் இலக்கியப்பரிசளிப்பு விழாவும் நாள் 24-4-08 இடம் பாரதீய வித்யா பவன் மயிலாப்பூர் சென்னை 60004 காலை நிகழ்ச்சிகள் சரியாக பத்துமணிக்கு தொடங்கும். பங்கேற்போர் திரு பாரதிராஜா அவர்கள் கவிஞர் வாலி அவர்கள் திரு சிற்பி அவர்கள் பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் திரு ரவி சுப்ரமணியன் அவர்கள் ‘எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் ‘ என்கிற ஜெயகாந்தனைப்பற்றிய ஆவணப்படம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/393

பாவலர் விருது

இசைஞானி இளையராஜா இலக்கியப்பேரவை வழங்கும் படைப்பிலக்கியத்திற்கான பாவலர் விருது இவ்வருடம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் இரண்டு லட்சமும் பாராட்டுப் பட்டயமும் அடங்கியது இவ்விருது. இசைஞானி இளையராஜா இலக்கியப்பேரவை சென்ற வருடம் முதல் இலக்கிய விருதுகளை வழங்கிவருகிறது. மொத்தம் ஐந்து இலக்கிய விருதுகள். மூத்த தமிழறிஞருக்கான பாவலர் வரதராஜன் விருது ரூபாய் இரண்டு லட்சமும் பாராட்டுப்பட்டயமும் அடங்கியது. இவ்வருடம் அது மூத்த தமிழறிஞரான ம.ரா.பொ.குருசாமி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. படைப்பிலக்கியத்திற்கான பாவலர் வரதராஜன் விருது எனக்கு, ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்புக்காக, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/390