Tag Archive: பாவண்ணன்

தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் – பாவண்ணன்

சகோதரர்கள் இருவர் அக்கம்பக்கத்தில் வீடெடுத்துத் தத்தம் குடும்பத்துடன் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கிடையே இருந்த அறையில் சிலகாலம் நான் குடியிருந்தேன். இருவருக்கும் நாட்டுப்புறப் பாடல்களில் நல்ல பயிற்சியிருந்தது. ஏகப்பட்ட பாடல்களை மனப்பாடமாகச் சொல்வார்கள். இருவருக்கும் நல்ல குரலுமிருந்தது. அவர்களுடன் நெருங்கிப் பழக இதுவே காரணம். சாப்பாடெல்லாம் ஆனபிறகு மொட்டைமாடியில் எல்லாரும் சேருவோம். அவர்களுடைய பிள்ளைகளும் வருவார்கள். உடலைத் தழுவும் இதமான குளிர்க்காற்றில் நிலா வெளிச்சத்தில் அவர்கள் குரல் இனிமையாக ஒலிக்கும். ஒன்றிரண்டு மணிநேரங்கள் கூடப் பத்துப் பதினைந்து நிமிடங்கள் போலக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41607

சிந்தாமணி கொட்லகெரே

எஸ்.ராமகிருஷ்ணன் அவரது தளத்தில் பாவண்ணன் மொழியாக்கம் செய்த சிந்தாமணி கொட்லகெரேயின் இரு கவிதைகளை எடுத்துக்கொடுத்திருக்கிறார். 2002 ல் நான் ஊட்டியில் ஏற்பாடுசெய்திருந்த கன்னட-மலையாள-தமிழ் கவியரங்குக்காக பாவண்ணன் மொழியாக்கம் செய்த கவிதைகள் அவை. அடுத்தவருடம் குற்றாலத்திலும் இன்னொரு அரங்கை நடத்தினோம். சிந்தாமணி கொட்லகெரே வந்திருந்தார். இனிமையான உற்சாகமான குண்டு மனிதர். அவருடன் இருந்த நாட்கள் இனியநினைவாக உள்ளன. குற்றாலத்தின் அருவியைக்கண்டு ‘டிவைன்..டிவைன்’ என அவர் குதூகலித்துக்கொண்டே இருந்தது கண்ணில் நிற்கிறது. சிந்தாமணியின் கவிதைகளை நான் நடத்திய சொல்புதிதில் வெளியிட்டோம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39991

இந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். பன்னிரண்டு சிறுகதைகளையும் படித்துவிட்டேன். பன்னிரண்டுமே பன்னிரண்டு முத்துகள். எல்லாமே ஏதோ ஒருவகையில் என்னைக் கவர்ந்தன. கதைகள் முன்வைக்கப்பட்டிருக்கும் கோணங்களும் களங்களில் உள்ள புதுமையும் நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கின. படித்து சில நாட்கள் உருண்டோடிவிட்டன என்றாலும் ஏழெட்டு சிறுகதைகள் மனத்துக்குள்ளேயே வளையவந்தபடி உள்ளன. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இவற்றில் சில மறந்துபோனாலும் மூன்று கதைகளாவது நினைவிலேயே தங்கியிருக்கும். வெளிவரும் காலத்திலேயே இவற்றை நான் வாசித்தவன் என்கிற மகிழ்ச்சி எனக்குள் எப்போதும் இருக்கும். ”உறவு” பலவகைகளிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38516

இரு காந்திகள்

நம் சமூகத்தில் எப்போதும் காந்தி மீதான ஒரு விமர்சனமும் கசப்பும் இருந்துகொண்டிருக்கிறது. முதன்மையாக அது அரசியல்காரணங்களுக்காக உருவாக்கப்படுகிறது. காந்தியை அறிந்துகொள்ள முயலாமல் நிராகரிப்பது அவ்வரசியலின் அடிப்படைத்தேவைகளில் ஒன்று. இடதுசாரிகள் வலதுசாரிகள் பிரிவினைவாதிகள் சாதியவாதிகள் என அவர்கள் பலதரப்பினர். காந்தி இந்திய அரசமைப்பின் அடையாளமாக, பாடநூல்களில் சம்பிரதாயமாக அறிமுகமாகிறவராக இருப்பதனால் இளையதலைமுறை அவரை நிராகரிப்பதை ஒருவகை அமைப்புமீறலாக எடுத்துக்கொள்கிறது. ஒரு முதிரா வயதில் காந்தியை எதிர்த்துப்பேசுவது சிகரெட் பிடிப்பது, தண்ணியடிப்பது போல ஒரு இளமையின் மீறலாக எண்ணப்படுகிறது. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31664

ஒரு கர்மயோகி

ஒரு பெரிய மருத்துவமனையையே தனிப்பட்ட வகையில் உருவாக்கும் அளவுக்கு தொழில் அனுபவமும் தொழில்ஞானமும் அவருக்கு இருந்தன. ஆனால் தன் தனிப்பட்ட உயர்வையே பெரிதென்று நினைக்கிற எண்ணம் அவரிடம் ஒருபோதும் இயங்கியதில்லை என்பதால் அந்த உயர்வான வாழ்வை நினைத்த நேரத்தில் சட்டென்று உதறிப் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட முடிகிறது. பொதுவாழ்வில் சலிப்பு தோன்றும் தருணத்தில் பழக்கத்தின் காரணமாக அத்தோடு ஒட்டிக்கொண்டிருக்காமல், அதைவிட்டு விலகி நிற்கவும் அவரால் முடிகிறது. அடிப்படையில் அவர் அன்பும் ஆற்றலும் விவேகமும் பொறுமையும் சத்தியநாட்டமும் நிறைந்த அபூர்வ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29439

சிகரத்தில் நிற்கும் ஆளுமை – பாவண்ணன்

பாவண்ணன் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளராக விளங்கும் ஜெயமோகனுக்கு இன்று பாவலர் வரதராஜன் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாகவும் வேகமாகவும் படைப்பிலக்கிய முயற்சிகளில் இடையறாது இயங்கி, ஆழமும் நுட்பமும் பொருந்திய ஆளுமையாக தன்னை தமிழ்ச்சூழலில் நிறுவிக்கொண்டவர் ஜெயமோகன். சிறுகச்சிறுக வளர்ந்து சிகரமாக நிற்கிற பேராளுமை என்றும் சொல்லலாம். இடைவிடாத உழைப்பு, ஆழ்ந்த அக்கறை, வளர்ந்துகொண்டே போகும் தேடல் முயற்சிகள் ஆகியவற்றின் மறுபெயர் அல்லது அடையாளமாகச் சுட்டிக்காட்டத்தக்க ஓர் ஆளுமை ஜெயமோகன் என்றும் சொல்லலாம்.படைப்பும் பண்பாடும் சார்ந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/455

நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் – நூல் அறிமுகம் -பாவண்ணன்

டி.கே.சி.யின் வட்டத்தொட்க் கூட்டங்களைப்போலவும் சுந்தர ராமசாமியின் காகங்கள் கூட்டங்களைப்போலவும் ஜெயமோகன் முன்னின்று நடத்திவரும் நித்யா கவிதை ஆய்வரங்கங்கள் தமிழ்ச்சூழலில் ஆரோக்கியமான விளைவுகளை உருவாக்கியிருக்கின்றன. முக்கியமாக, கவிதைகளை அணுகும் பார்வைகளை வளர்த்தெடுக்கிற முறையைச் சொல்லவேண்டும். ஒரு கவிதையை முன்வைத்து, ஆய்வரங்கில் பங்கேற்கும் கவிஞர்களும் வாசகர்களும் சுதந்தரமாக பகிர்ந்துகொள்ளும் அனுபவங்களைப் புதுசாக பார்க்கிற அல்லது கேட்கிற பார்வையாளன் கவிதையின் வலிமையையும் ஒரே கவிதையில் விரிவுகொள்ளும் புதுப்புது சாத்தியப்பாடுகளையும் எளிதில் உணரமுடியும். மூன்று நாள்கள் இத்தகு அனுபவங்களிடையேயே திளைத்துவிட்டுத் திரும்பியபிறகு பார்க்கிற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/447

காடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்:சூரியா

பாவண்ணன் ஏழாம் உலகம் பற்றி எழுதியிருந்த குறிப்பு சிறப்பாக இருந்தது . நுணுகியும் உணர்ச்சிபூர்வமாகவும் வாசித்திருக்கிறார். அந்நாவலைப்பற்றி இதுவரை நல்ல குறிப்புகள் எல்லாமே இணையத்தில் தான் வந்திருக்கின்றன. சிற்றிதழ்களில் வெறும் காழ்ப்பு அல்லது மெளனமே காணக்கிடைக்கிறது. மரத்தடி இதழில் ஹரன் பிரசன்னா எழுதியது பதிவுகள் இதழில் பல்லவன் எழுதியது போன்றவை நல்ல குறிப்புகள். ஜெயமோகனின் மற்ற நாவல்களில் இருந்து காடு, ஏழாம் உலகம் இரண்டும் மிக மாறுபட்டவை. இவற்றில் அவர் முக்கியமான மையங்களை சற்றும் விளக்க முயலவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/437

அருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்) :பாவண்ணன்

‘ஏழாம் உலகம் ‘ என்பதை எங்கோ இருக்கிற பாதாள உலகத்தைச் சுட்டுவதாக நம்பிக்கொண்டிருக்கிற மானுட குலத்துக்கு நாம் வாழும் எதார்த்த உலகின் இருட்டுப் பகுதிக்கிடையிலேயே அது பரந்து விரிந்திருப்பதை அடையாளம் காட்டுகிறது இந்த நாவல். இருள் உலகின் குரூரங்கள் நாம் அறியாதவை அல்ல. ஏமாற்று, பித்தலாட்டம், பொய்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாமே சகஜமான விஷயங்களாக இடம்பெறும் உலகம் அது. ஒரு ரூபாய் பணத்துக்கு ஆயிரம் சத்தியங்களை நாக்கு கூசாமல் சொல்பவர்கள் அங்கே உண்டு. அதே ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/436

» Newer posts