Tag Archive: பாவண்ணன்

மொழியை பெயர்த்தல்

கான்ஸ்டென்ஸ் கார்னெட் ‘தமிழில்’ பேயோன் க.ரத்னம் மொழியாக்கம் செய்து தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ’டப்ளின் நகரத்தார்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது, அல்லது வாசிக்க முயன்றுகொண்டிருந்தபோது, அல்லது முயற்சியை கைவிட்டுவிட்டிருந்தபோது, பேயோனின் இந்தக் கட்டுரையை வாசித்தேன். துயரத்துடன் ‘ஆமா! ஆமா!’ என்று சொல்லிக்கொண்டேன். [தமிழில்… பேயோன் ] ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ் என்னும் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுதியின் தமிழாக்கம் இந்நூல். இதை மொழியாக்கம் செய்த க.ரத்னம் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். கல்லும் மண்ணும் என்னும் நாவலையும் கதைகளையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117158

உப்புவேலி பற்றி பாவண்ணன்

உப்புவேலி புத்தகத்தைப் படித்துமுடித்ததும் இந்தச் சம்பவம்தான் நினைவில் மோதியது. வியாபாரிகளாக நுழைந்த ஆங்கிலேய நிறுவனம், சுரண்டிக்கொள்வதற்கான எல்லா வளங்களுடன் இந்தியா திறந்து கிடப்பதைக் கண்டறிந்துகொண்ட பிறகு, படிப்படியாக தன் சுரண்டலை நிகழ்த்தியது. சுரண்டுவது என முடிவெடுத்துவிட்ட பிறகு, அதற்கு எல்லை வகுத்துவிட முடியுமா என்ன? சட்ட விதிகளுக்கு உட்பட்ட சுரண்டலை நிறுவனத்துக்ககாகவும் சட்ட விதிகளுக்குப் புறம்பான சுரண்டலை தன் சொந்த லாபத்துக்காகவும் செய்தார்கள். நில வரி முதல் உப்பு வரி வரைக்கும் அந்த நோக்கத்திலேயே விதித்து கறாராக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76139

நாடகங்கள்

நண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த பெரும்பாலான நாடகங்கள் என்னை ஈர்க்கவில்லை. அவற்றிலிருந்த பயிற்சியின்மை என்னைப்படுத்தியது. சோ, எஸ்வி.சேகர், ஞாநி, ந.முத்துசாமி, பிரளயன் நாடகங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். என் பிரச்சினையாகவும் இருக்கலாம் ஆனால் வாசிப்பில் பல நாடகங்கள் எனக்கு முக்கியமானவை என்று பட்டன. இந்திராபார்த்தசாரதியின் மழை, போர்வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73750

நினைவுகள்…

பாலக்கோட்டுக்கு மாற்றலாகி வந்து சேர்ந்தார். அங்கிருந்துதான் படுகை, போதி ஆகிய கதைகளை அவர் எழுதினார். அவை நிகழ் என்னும் சிற்றிதழில் வெளிவந்திருந்தன. மூன்று நாள் தங்கி பேசிக்கொண்டிருக்கும் வகையில் விடுப்பெடுத்துக்கொண்டு நானும் நண்பர் மகாலிங்கமும் அவரைச் சந்திக்கச் சென்றோம். மூன்றாண்டுகளுக்கும் மேலான கடிதத்தொடர்புக்குப் பிறகு முதன்முறையாக நாங்கள் அன்று சந்தித்துக்கொண்டோம். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் பேசிக்கொண்டே இருந்தோம். பாவண்ணன் கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/69652

ஞானக்கூத்தன் பற்றி- பாவண்ணன்

ஞானக்கூத்தன் கவிதைகள் – சத்தியத்தைத் தேடும் பயணம் கடந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தோன்றிய முக்கியமான தமிழ்க்கவிஞர் பாரதியார். சொல்ஜாலங்களையும் சிலேடை விளையாட்டுகளையும் உவமைச்சேர்க்கைகளையும் முன்வைப்பர்களை கவிஞர் என்று கொண்டாடிக்கொண்டிருந்த கவிராயர்களுக்கு நடுவில் ஒரு காட்டுயானையைப்போல வந்து நின்றவர் பாரதியார். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, கண்ணி, சிந்து என அவர் கையாளாத பாவகைகளே இல்லை. ஒவ்வொரு வடிவத்துக்கும் தன் சொற்களால் புது ரத்தத்தைச் செலுத்தினார் அவர். அவர் எழுதிய கவிதைகளில் ஒவ்வொரு சொல்லும் ஓர் அம்புபோலப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68861

விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்

மலையாளக் கவிஞர், நாவலாசிரியர் டி.பி.ராஜீவன். முதன்மையான மலையாளப்படைப்பாளியாகிய ராஜீவன் கறாரான உணர்ச்சி வெளிப்பாடு, அங்கத நோக்கு கொண்ட எழுத்துக்களுக்காக அறியப்பட்டவர். நெடுங்காலமாக எனக்கும் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். குருநித்யா ஆய்வரங்கு நிகழ்த்திய தமிழ்-மலையாள கவிதை உரையாடல் அரங்குகளில் அனேகமாக அனைத்திலும் கலந்துகொண்டிருக்கிறார். ராஜீவனின் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் தமிழில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன டி பி ராஜீவன் கவிதைகள் வாசிக்க ஞானக்கூத்தனின் நண்பரும், மாயவரத்தைச் சேர்ந்தவருமான சா.கந்தசாமி தமிழின் நவீனத்துவ எழுத்துமுறையின் முன்னோடி. ‘கதையில் இருந்து கதையை வெளியேற்றுவதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68633

விழா-பாவண்ணன் வாழ்த்து

அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். நலம்தானே? வெண்முரசு நூல்வரிசை வெளியீட்டு நிகழ்ச்சி பற்றிய செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதுவரை வெளிவந்துள்ள நான்கு தொகுதிகளுமே, ஏற்கனவே நீங்கள் சொல்லியிருந்தபடி தனித்தனியாகப் படிக்கத்தக்க விதத்தில் ஒரு சின்ன மையத்தைச் சுற்றி அமைந்திருப்பதும், பெருந்தொடரின் இணைப்புக்கண்ணிகளாகவும் கச்சிதமாக விளங்குகின்றன. வற்றாத உங்கள் ஊக்கம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழுக்கு இது நிச்சயம் பெருங்கொடையாக விளங்கப்போகிறது. உலக அளவில் தமிழுக்கு இது ஓர் அரிய இடத்தைத் தேடித் தரும் என்பது உறுதி. கூர்மையும் அழுத்தமும் கூடிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64950

கைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை

தமிழ்மண்ணில் நிகழ்ந்த இந்த வரலாற்றுத் தருணத்தை, பல்வேறு வரலாற்றுத் தருணங்களின் தொடர்ச்சியாக கட்டமைத்திருக்கும் ஜெயமோகனின் கலைநுட்பம் பாராட்டுக்குரியது. இச்சமூகம் காலம் காலமாக மூடிவைத்திருந்த இரட்டைவேடத்தை இந்த நாவல் கலைத்து, அம்பலப்படுத்திவிடுகிறது. பாவண்ணன் கட்டுரை திண்ணை இணையதளத்தில் வெள்ளையானை அனைத்து விவாதங்களும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/58250

அணிவாயில்

மகாபாரதத்தை நான் முதன்முதலாகக் கேட்டது என் தாயிடமிருந்து. பெரும்பாலான இந்தியக் குழந்தைகளின் அனுபவம் அதுவாகவே இருக்கும். ஆனால் எளிய குடும்பத்தலைவியாக இருந்தாலும் என் அன்னை ஒரு அறிஞர். தமிழ் மலையாளம் ஆங்கிலம் அறிந்தவர். மலையாளம் வழியாக சம்ஸ்கிருதத்தையும் குறிப்பிடும்படி அறிந்தவர். உலகஇலக்கியத்திலும் தமிழ்-மலையாள நவீன இலக்கியத்திலும் ஆழ்ந்த வாசிப்புள்ளவர். எழுத்தச்சனின் மகாபாரதத்தை அவர் மூன்றுமுறை முழுமையாகவே வீட்டில் முறைப்படி பாராயணம் செய்திருக்கிறார். அன்று அதைக்கேட்க ஒவ்வொருமுறையும் ஏழெட்டு பெண்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். அம்மா தன் இனிய மெல்லியகுரலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47119

புதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்

அன்புள்ள ஜெயமோகன், வனக்கம். ’மீண்டும் புதியவர்கள் கதைகள்’ வரிசையில் வெளிவந்த பதினோரு இளம் எழுத்தாளர்களின் படைப்புகளையும் படித்துவிட்டேன். வேலைச்சுமைகளின் காரணமாகவும் இடைவிடாத பயணங்களின் காரணமாகவும் விட்டுவிட்டுத்தான் படித்தேன். முதல் வரிசையைப்பற்றி எழுதியதைப்போலவே இவ்வரிசையைப்பற்றியும் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நினைத்தேனே தவிர, செயல்படுத்த ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தேன். நேற்று கிடைத்த சில மணி நேர ஓய்வில்தான் எழுதி முடித்தேன். எழுதும் முன்பு மீண்டுமொருமுறை எல்லாக் கதைகளையும் புத்தம்புதிதாகப் படிப்பதுபோல மறுபடியும் படித்துமுடித்தேன். படிக்கப்படிக்க பல புதிய அழகுகள் புலப்பட்டபடியே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42021

Older posts «