Tag Archive: பார்க்கவர்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 7

பகுதி இரண்டு : திசைசூழ் செலவு [ 1 ] உஜ்ஜயினி நகரின் தெற்குபுறக் கோட்டைக்கு வெளியே முதல் அன்னசாலை அமைந்திருந்தது. தாழ்வான பழைய கோட்டையில் இருந்து கிளம்பி தெற்கே விரிந்திருக்கும் தண்டகாரண்யம் நோக்கிச் செல்லும் பெருஞ்சாலை இரவுக்காற்றால் தடங்கள் அழிக்கப்பட்டு அன்று புதிதெனப் பிறந்திருந்தது. இருமருங்கும் அரண் அமைத்திருந்த பெருமரங்கள் காலைக்காற்றில் இருளுக்குள் சலசலத்தன. அன்னசாலைக்குள் எரிந்த விளக்கொளி அதன் அழிச்சாளரங்கள் வழியாக செந்நிறப்பட்டு விரிப்பு போல முற்றத்தில் நீள்சதுர வடிவில் விழுந்து கிடந்தது. அன்னசாலையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91615

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 37

பகுதி ஏழு : தழல்நீலம் [ 3 ] செஞ்சதுப்பில் உழுதுவாழும் காட்டுப்பன்றி மதமெழுந்து நகர்நுழைந்ததுபோல சிகண்டி காட்டிலிருந்து வெளியே வந்தான். மூன்று மாதகாலம் காட்டில் பெரும்பசியுடன் உண்டதனால் திரண்டுருவான கரிய உடலும் எரியும் சிறுவிழிகளும் தோளில் மூங்கில்வில்லும் அம்புமாக இளங்காலை வேளையில் அவன் நுழைந்த முதல் சிற்றூரின் பூசகன் திகைத்து எழுந்து நின்றான். மெல்லியதாடியும் மீசையும் கொண்ட முகமும் சிற்றிளம் முலைகளும் கொண்டிருந்த சிகண்டி அவனை நோக்கி ‘உணவு’ என ஆணையிட்டான். பன்றி உறுமல் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45029