Tag Archive: பாரதி

ஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…

இப்போது எனக்கு வரக்கூடிய கடிதங்களில் பத்துக்கு ஒன்பதும் எழுத்தாளர்கள் எப்படியெப்படியெல்லாம் அடக்கமாக இருக்கவேண்டும் என்றும், பணிவே எழுத்தாளனுக்கு உயர்வுதரும் என்றும் அறிவுரை சொல்லக்கூடியவை. எவருக்கும் இலக்கியம், எழுத்து என எந்த அறிமுகமும் இருப்பதாகத் தெரியவில்லை. என்னையே இப்போதுதான் கேள்விப்படுகிறார்கள் என்று தோன்றியது. இருந்தும் ஏன் அறிவுரை சொல்கிறார்கள்? ஒரு அரசியல்வாதிக்கோ தொழிலதிபருக்கோ ஆலோசனை சொல்வார்களா? மாட்டார்கள்.ஏனென்றால் அவர்களை இவர்கள் அண்ணாந்து பார்க்கிறார்கள். எழுத்தாளர்களை குனிந்து பார்க்கிறார்கள். ‘எழுத்தாளர்கள் தன்னைப்பற்றி உயர்வாகச் சொல்லக்கூடாது’ என்றார் ஒருவர். ‘தன்னைப்பற்றி உயர்வாகச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41758

புறப்பாடு II – 16, ஜோதி

வடலூர் எந்தப்பக்கம் என்று எனக்குத்தெரியாது. நெய்வேலியில் என் பக்கத்து வீட்டுக்காரரின் சொந்தக்காரர் ஒருவர் இருந்தார். அவர் பேச்சிலிருந்து அது நெய்வேலி அருகே என்று தெரியும். ஆனால் நெய்வேலி எந்தப்பக்கம் என்று தெரியாது. என்ன விசேஷமென்றால் அருளப்ப சாமிக்கும் அதெல்லாம் தெரியாது என்பதுதான். நானும் அவரும் நடக்க ஆரம்பித்தபோது அவர் ரயில்நிலையத்துக்குத்தான் போகிறார் என்று நினைத்தேன். அதன்பின்பு அவர் ஒருவேளை பேருந்தில்போக திட்டமிடுகிறாரோ என்ற சந்தேகம் வந்தது. அப்படியென்றால் அவரிடம் பணமிருக்கவேண்டும். என்னிடம் ஒரு பைசாகூட இல்லை. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40305

தமிழ்ஹிந்து

தமிழ் ஹிந்து நான் விரும்பி வாசிக்கும் இணையதளங்களில் ஒன்று. அதில் ம.வெங்கடேசன் எழுதிவந்த ‘புரட்சியாளர் அம்பேத்கார் மதம் மாறியது ஏன்?’ என்ற கட்டுரை சமீபத்தில் நான் வாசித்த முக்கியமான கட்டுரைகளில் ஒன்று. இந்த அளவுக்கு விரிவான தரவுகளுடன் அரசியல்தளத்தில் எவரும் எழுதுவதில்லை என்பதே உண்மை. இங்கே ஒரு தார்மீகக்கோபத்தை பாவனைசெய்துகொண்டாலே போதும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. நம் அரசியல் அக்கப்போர்க்காரர்களால் அக்கட்டுரையை ஆதாரபூர்வமாக எதிர்கொள்ள முடியாதென்பதையே அதற்கு எதிராக வந்த மௌனம் காட்டியது. அதேபோல இப்போது வெங்கடேசன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26272

காலத்துயர் – கடலூர் சீனு

இனிய ஜெ.எம்., இன்று மகிழ்ச்சியான மாலை. என் மருமகனுக்கு மதன்குமார் என்று பெயர் சூட்டி இருக்கிறார்களாம். ஒருகிலோ இனிப்பு வாங்கி காலபைரவர் சன்னதியில் நின்று எல்லோருக்கும் விநியோகித்தேன். என்முன் பல ஏந்திய கைகள். ஆனந்தத்திலும், பதட்டத்திலும் கை உடுக்கை அடித்தது. கொடுப்பதில் ஏதோ ஒரு இன்பம் – மரபணுவில் பதிந்துபோன இன்பம் ஒன்று உள்ளதாகத் தோன்றுகிறது. இல்லையேல் கர்ணனால் பிறவிக் கொடையாளியாக ஆகி இருக்க முடியாது. 9 மணிக்கு டிஸ்கவரியில் ஸ்டீபன் ஹாக்கின்ஸின் “காலம்” பற்றி நிகழ்ச்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23194

எண்ணியிருப்பேனோ

இன்று பாரதி பிறந்தநாள். வழக்கம்போல கொஞ்சம் பாரதி கவிதைகள் வாசித்தேன், பாடல்கள் கேட்டேன். இந்தப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்டேன். நெடுநாள்களாயிற்று இதைக்கேட்டு. சந்தானம் எனக்கு என்றுமே பிரியத்துக்குரிய குரல். ஆனால் இசையைவிட வழக்கம்போல வரிகள்தான் எனக்குள் சென்றன. ஏக்கமும் தனிமையுமாக இந்தப்பாடலில் இருக்கிறேன். சென்ற சிலவருடங்களாகவே இந்தப்பாடல் முன்வைக்கும் உணர்வுக்கு நேரெதிரான உணர்வுநிலை கொண்டிருக்கிறேன். உலகியல்சார்ந்த எல்லாவற்றிலும் சலிப்பும் விலகலும் உருவாகிறது. அப்பால் ஒன்றை நோக்கிய கனவாகவே ஒவ்வொருநாளும் செல்கிறது. ஆனால் நீரில் பந்தை அழுத்துவதுபோல என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23067

பாரதி விவாதம்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ.மோ, இக்கடிதம் ”பாரதி விவாதம்” பற்றியதே அன்றி ”பாரதி பற்றியது” அல்ல என்பதை முதலிலேயே தெளிவு படுத்திவிடுகிறேன். பாரதி பற்றிய விவாதத்தை மூன்று பேர் மட்டுமே முன் எடுத்து சென்றதாகவும் அது எதிர் பார்த்ததே என்றும் தெரிவித்திருந்தீர்கள். அது தொடர்பாக கீழ்க்கண்டவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். 1. எதிராளியின் பலத்தில் பாதியை வாலியைப் போல் நீங்கள் வாங்கி கொண்டு விடுகிறீர்கள்? எதிராளிக்கு மூச்சு முட்டுகிறது. அசுர பலம் சார் உங்களுக்கு. எதிராளி எங்கே வாதத்தை எடுத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22242

பாரதி மகாகவியே

என்னிடம் பல நண்பர்கள் கடிதம் மூலம் ஒரு வினாவைக் கேட்டார்கள். பாரதி மகாகவியா என வாதித்த தரப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என. ஜடாயு, மரபின்மைந்தன், எம்.டி.முத்துக்குமாரசாமி மூவருமே தங்கள் தரப்பைத் தீவிரமாக எடுத்துச்சொன்னார்கள் என்றும், இந்த விவாதம் தீவிரமாக முன்னகர அவர்கள் காரணம் என்றும் சொன்னேன். இதை நான் விவாதமாகவே பார்க்கிறேன், முடிவுகட்டலாக அல்ல. ஆகவே விவாதத்தின் வலுவான எல்லாத் தரப்புக்குமே இணையான மதிப்புதான். சரி, அந்த எதிர்விவாதங்களில் உங்களுக்குத் திருப்தியா என்று கேட்டார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22092

மகாகவி விவாதம்

இந்த விவாதத்தை மிகக்குறைவானவர்களே புரிந்துகொண்டு பின் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதையே எதிர்வினைகள், பின்னூட்டங்கள் வழியாக அறிகிறேன். அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனாலும் சில குறிப்பிடத்தக்க எதிர்வினைகள், நேரிலும் கடிதத்திலும் வந்தன. பொ.வேல்சாமியிடம் தொலைபேசியிலும் எம்.வேதசகாயகுமாரிடம் நேரிலும் நிகழ்த்திய விவாதங்களே என்னளவில் முக்கியமானவை. இந்த மொத்த விவாதத்திலும் நான் பேசவேண்டியதைப் பேசிவிட்டேன், கேட்க வேண்டிய எதிர்வினைகளைக் கேட்டும்விட்டேன் என்பதனால் இதை இங்கே முடித்துக்கொள்ளவிருக்கிறேன். ஆகவே எல்லா வாசகர்களுக்குமாக என் தரப்பைத் தொகுத்துச்சொல்ல விரும்புகிறேன். உலக இலக்கியம், தேசிய இலக்கியம், மகாகவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22089

நன்றி, முத்துக்குமாரசாமி

அன்புள்ள எம்.டி.எம், மன்னிக்கவும், நிறைய தவித்துப்போய்விட்டீர்கள். இரண்டுநாட்களாக இங்கே ஒருநாளுக்கு இரண்டுமணிநேரம் கூட மின்சாரம் இல்லை. மின்சாரம் அலைபாய்ந்து என்னுடைய கணினி மடிக்கணினி இரண்டுக்குமே மின்னேற்றி பழுதாகிவிட்டது. பணம்செலவுசெய்து வாங்கி எழுதுகிறேன். நீங்கள் நாகர்கோயில்காரர் என்று இப்போதுதான் தெரிகிறது. முன்னரே ஊகித்திருக்கவேண்டும். நீங்கள் சொன்னது சரிதான். உங்கள் பதிலில் நான் சொன்னவற்றுக்கான பதில் ஏதும் இல்லை. பாரதியின் மெய்யியல் சாரம் என்ன என்று விவாதிப்பதாக இருந்தால் நான் அதைத் தனியாகச் செய்திருப்பேன். பாரதி ஒரு நல்ல கவிஞரா, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22086

பாரதி-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், பாரதி பற்றிய விவாதங்கள், எனக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக எதிர் வினைகள். எனக்குள் உள்ள ஒரு சில கோட்பாடுகளை நிறுவிக்கொள்ள மேலும் ஒரு வாய்ப்பாகவே இது அமைந்தது என்றால் மிகையாகாது. எந்த ஒரு கலைஞனோ, சமூக சேவகனோ, அரசியல் வாதியோ… இவர்களைப் பற்றிய வழிபாட்டு முறை ஒருபோதும் நம்மை அடுத்த களத்திற்குக் கொண்டு செல்ல உதவப்போவதில்லை. அவர்களின் குறைகளும் நமக்குப் புரியவேண்டும்/உணரவேண்டும். இது மென்மேலும் நம்முடைய சமூகம் முன்னேற வழி வகுக்கும். நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21943

Older posts «

» Newer posts