Tag Archive: பாபநாசம்

பாபநாசம் 55 நாள்

ஜெ பாபநாசம் மிகவும் பிந்தி பார்த்தேன். வசனங்கள் இயல்பாக அழகாக இருந்தன. மூலத்தையும் பார்த்தேன், அதில் இல்லாத வசனங்கள். ‘இந்த உலகத்திலே தனக்கு முக்கியமில்லாததை யாருமே ஞாபகம் வச்சுக்கிடறதில்லை’ என்ற வசனம் படத்தின் சாராம்சத்தையே சொல்கிறது. ‘எனக்குத்தெரிஞ்ச உண்மை என் குடும்பம்தான்’ இன்னொரு எளிமையான அபாரமான வசனம். படத்தின் வெற்றிக்கு நீங்கள் உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். பாபநாசம் ஐம்பதாவது நாளைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. செல்வராஜ் அன்புள்ள செல்வராஜ், ஒரு சினிமாவில் வசனத்தின் பங்கு மிகச்சிறியது. அதுவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78277

பாபநாசம் வெற்றி

பாபநாசம் படத்தைப்பற்றி முந்நூறுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்தன. பெரும்பாலும் அனைவருக்கும் சுருக்கமான பதில் அளித்திருப்பேன். அனைவருக்கும் நன்றி. விமர்சனங்கள் பற்றி கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. நான் சினிமா விவாதங்களை நல்ல பணம் பெற்றுக்கொண்டு மட்டுமே செய்வதாக இருக்கிறேன் ;)) பாபநாசம் ஐம்பதாவது நாளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இரண்டு வாரங்களுக்காகத்தான் இப்போது பெரிய சினிமாக்களே எடுக்கப்படுகின்றன. ஐம்பது நாட்கள் இத்தனை அரங்குகளில் பெரும்பாலும் நிறைந்த காட்சிகளாக ஒரு தமிழ் சினிமா ஓடி நெடுநாட்களாகின்றன. இது ஒரு வெற்றிப்படம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77742

பாபநாசம் சிலகுறிப்புகள்

பாபநாசம் பற்றிய கேள்விகள், கடிதங்கள் அனைத்துக்கும் நன்றி. ஒட்டுமொத்தமாக அனைத்துக்கும் இந்தக்குறிப்பை எழுதிவிடுகிறேன். விரிவாக இந்தக்கடிதங்களைக் கொண்டுசெல்ல நான் விரும்பவில்லை. திருஸ்யம் -பாபநாசம் ஒப்பீடு நினைத்ததுபோல மேலோட்டமாக நடக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி. சில நல்ல குறிப்புகளைக் கண்டேன்.லால் அப்டி நடிச்சிருக்கார், கமல் இப்டி பண்ணியிருக்கார் என்பது போன்ற பேச்சுகளே வரவில்லை. ஜார்ஜ்குட்டி வேறு, சுயம்புலிங்கம் வேறு. சுயம்பு நான் அறிந்த ஒரு மனிதர். மளிகைக்கடை வைத்திருக்கிறார். மிகச்சிறிய குறிப்புகளைக்கொண்டே அந்த கதாபாத்திரத்தை ஊகித்து முழுமைசெய்திருக்கிறார் கமல். கழுத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76712

பாபநாசம்

பாபநாசம் நேற்றே இங்கு அமெரிக்காவில் வெளியாகிவிடும். அதைப்பற்றி ஒரு பதைப்பு எனக்கு இருந்தபடியே இருந்தது. ஆகவே அதைப்பற்றிய செய்திகளைத் தொடர்ந்து நோக்கவில்லை. நேற்று மாலை நியூஜெர்சி தமிழ்ச்சங்க நிகழ்ச்சி முடித்து விருந்தும் உரையாடல்களும் கடந்து நள்ளிரவில் நண்பர் அரவிந்தன் கன்னையன் அவர்களின்வீடு திரும்பியபின்புதான் இணையத்தில் எதிர்வினைகளைப் பார்த்தேன். கமலுக்கும் சுகாவுக்கும் ஜித்துவுக்கும் மின்னஞ்சல் அனுப்பிவிட்டு நிறைவுடன் தூங்கப்போனேன். காலையில் பெட்டிநிறைய மின்னஞ்சல்கள். இந்தத்தளத்தில் நான் எழுதும் திரைப்படங்களைச் சார்ந்து அதிகமாகப் பேசவேண்டாம் என எண்ணம் கொண்டிருப்பதனால் விமர்சனங்களையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76598

‘வசவு’ம் பாபநாசமும்

தமிழில் சிறந்த நகைச்சுவைப் புனைவெழுத்துக்கள் குறைவு என்ற பேச்சு அடிக்கடி விவாதங்களில் வரும்போதெல்லாம் நான் சுட்டிக்காட்டுவது வசவு தளத்தைத்தான். அரசியல்கட்டுரை, கவிதை, கதை, இலக்கியவிசாரம் என்ற பெயர்களில் அவர்கள் வெளியிடும் கட்டுரைகள் தமிழின் சிறந்த நகைச்சுவைப்புனைவுகள் என்பதில் நல்ல வாசகர்களுக்கு ஐயமிருக்கமுடியாது. கேலிச்சித்திரங்கள் மட்டும் நகைச்சுவை இல்லாமல் சோகத்துடன் போடுவார்கள். பாபனாசம் பற்றிய இக்கட்டுரையை வாசகர்கள் தவறவிடக்கூடாதென்பதற்காகவே இங்கே சுட்டி அளிக்கிறேன். எழுதியவர் பெயர் முதற்கொண்டு தகவல்பயனாளி வரை எல்லா தளங்களிலும் கற்பனை சொட்டும் இந்தக்கட்டுரைக்கு நிகரான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64643

பாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்

பாபனாசம் படப்பிடிப்பு நேற்று [26-10-2014] முடிந்தது. தொடுபுழாவிலிருந்து நானும் சுகாவும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் திரும்பினோம். காலையில் வீடுவந்து சேர்ந்து தூங்கி எழுந்து உடனே அடுத்த வேலைக்குச் செல்லமுடியவில்லை. ஒரு சினிமாப்படப்பிடிப்பு முடிவது நிறைவும் துயரமும் கலந்த அனுபவம். சினிமாப்படப்பிடிப்பில் உள்ள கொண்டாட்டத்தை சினிமாவுக்கு வெளியே உள்ளவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. ஓர் அரசு அலுவலகத்துடனோ வணிகநிறுவனத்துடனோ அதை ஒப்பிட்டால் அந்த வேறுபாடு திகைக்கவைக்கும். சினிமாவில் டீ பரிமாறுபவர் முதல் அனைவருமே சினிமா மேல் பெருங்காதலுடன் இருப்பவர்கள். சினிமாவை கவனித்துக்கொண்டே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64127