Tag Archive: பாணர்

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22

மூன்று : முகில்திரை – 15 பிரத்யும்னன் தன் படையை முதலைச் சூழ்கையென அமைத்திருந்தான். முதலையின் கூரிய வாயென புரவி நிரையொன்று ஆசுர நிலத்தை குறுகத்தறித்து ஊடுருவியது. அதன் இரு கால்களென வில்லவர் படை இருபுறமும் காத்துச் சென்றது. முதலையின் நீண்ட எலும்புவால் என யாதவக் காலாள்படை பின்னால் நெடுந்தூரம் நெளிந்து வந்துகொண்டிருந்தது. குளம்படியோசைகளும் போர்கூச்சல்களும் கொம்புகளின் பிளிறல்களும் கலந்த முழக்கம் காட்டுக்குள் கார்வையை நிறைத்தது. ஆசுர நிலத்தின் அனைத்துக் காவல்மாடங்களிலும் எச்சரிக்கை முரசுகள் முழங்கத்தொடங்கின ஒன்றுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102648/

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 20

மூன்று : முகில்திரை – 13 சுபூதருடன் அபிமன்யூவும் பிரலம்பனும் அரண்மனை இடைநாழியினூடாகச் சென்றபோது காவல்நின்ற அசுர வீரர்கள் வேல்தாழ்த்தி தலைவணங்கினர். அத்தனை வாயில்களிலும் சாளரங்களிலும் அசுரர்களின் முகங்கள் செறிந்திருந்தன. “இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் அரச உடையில் அணிமுடியும் கவசமுமாக வந்திருக்கலாம்” என்றான் அபிமன்யூ. “இப்போதே நன்றாகத்தான் இருக்கிறீர்கள்” என்றான் பிரலம்பன். அபிமன்யூ “நான் அரசநடையை பழகவேண்டுமென விழைந்திருக்கிறேன். மூத்த தந்தை துரியோதனர் அவைபுகுவதே பெரிய நாடகக் காட்சிபோலிருக்கும்” என்றான். பிரலம்பன் “கற்கவேண்டியதுதானே?” என்றான். “கற்றேன். மூத்த தந்தை யுதிஷ்டிரர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102548/

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 18

மூன்று : முகில்திரை – 11 சித்ரலேகை செல்லும்போது அவளிடம் தோட்டத்துக் கொன்றையில் முதல் பொன் மலர் எழுகையில் திரும்பி வந்துவிடுவேன் என்று சொல்லியிருந்தாள். ஒவ்வொரு நாளும் முதற்புலரியிலே அதை எண்ணியபடி அவள் விழித்தெழுந்தாள். கைவளைகளும் சிலம்புகளும் குலுங்க மஞ்சத்தறையிலிருந்து இடைநாழியினூடாக ஓடி மலர்க் காட்டுக்குள் இறங்கி அக்கொன்றை மரத்தை ஏறிட்டுப் பார்த்து விழிகளால் ஒவ்வொரு இலைநுனியையும் தொட்டுத் தொட்டு தேடி சலித்து ஏங்கி நீள்மூச்செறிந்து அங்கேயே கால்தளர்ந்து அமர்ந்து மிளிர்வானை, எழுஒளியை, தளிர்சூடிய மரங்களை, நிழல்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102485/

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 15

மூன்று : முகில்திரை – 8 ஒவ்வொரு நாளும் உஷையிடம் அவள் உள்ளத்தில் உள்ளதென்ன என்று செவிலியரும் சேடியரும் வெவ்வேறு சொற்களில் கேட்டனர். ஒவ்வொரு கேள்வியும் அவளை சினம்கொள்ள வைத்தது. சிலதருணங்களில் சீறி அவர்களை அகற்றினாள். பிற தருணங்களில் துயருற்று கண்ணீர் மல்கி தலைகுனிந்தாள். பின்னர் எவர் எதை கேட்டாலும் அச்சொற்கள் செவிகொள்ளப்படாதாயின. வாயில்களை ஒவ்வொன்றாக மூடி மேலும் மேலும் தனக்குள் சென்று முற்றாகவே அகன்று போனாள். கைக்குழவி நாளிலிருந்து அவர்கள் அறிந்த உஷை அவ்வுடலுக்குள் இல்லையென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102431/

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 14

மூன்று : முகில்திரை – 7 நிலவு எழுந்த முன்னிரவில் உள்ளிருந்து எழுந்த அழைப்பால் விழித்துக்கொண்ட உஷை தன்னருகே ஆடிக்குள் அசைவைக்கண்டு புரண்டு கையூன்றி எழுந்து அதன் ஒளிர்பரப்பை பார்த்தாள். அங்கு நிலவில் ஒளிகொண்ட இளங்காற்றுவெளியில் சந்தியை தனக்குள் மெல்லப் பாடியபடி, சிறகெனக் கைவீசி, சிற்றாடை சுழல துள்ளி ஓடுவதை கண்டாள். முகம் மலர்ந்து ஆடியை எடுத்து தன் மடியில் வைத்தபடி அதை நோக்கி அமர்ந்திருந்தாள். எவரையோ கண்டு சந்தியை நாணி நிற்பதைக் கண்டு மேலும் உற்றுநோக்கினாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102426/

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13

மூன்று : முகில்திரை – 6 நகர்ச்சூதர்களைப்போல அவை முறைமைகளைத் தெரிந்தவனாகவோ தன்னைவிடப் பெரியவர்களுடன் நிமிர்வுடன் பழகத்தெரிந்தவனாகவோ ஆசுரநாட்டுப் பாடகன் இருக்கவில்லை. உடலெங்கும் அணிந்திருந்த கல்மணி மாலைகள் நடையில் குலுங்கி ஒலிக்க, காலில் அணிந்த குறடு தரையில் தாளமெழுப்ப, வலத்தோளில் முழவும் இடத்தோளில் சிறுபறையும் இடையைச் சுற்றிக்கட்டிய தோள்பட்டையில் வெவ்வேறு அளவுகளில் தாளக்கழிகளுமாக அவன் சிற்றடி எடுத்து வைத்து தோளசைத்து மெல்ல நடனமிட்டபடி சென்றான். தான் செல்வது ஓர் அரசவைக்கு என்று அவன் அறிந்திருக்கவில்லை என்றும் வழக்கம்போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102311/

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 10

மூன்று : முகில்திரை – 3 அபிமன்யூ சாத்யகியின் அறைக்குள் நுழைந்து முகமன்கள் ஏதுமில்லாமலேயே “நாம் நம்மை கோழைகள் என அறிவித்துக்கொள்ளவேண்டியதில்லை, மூத்தவரே. எனக்கு இங்கிருக்கும் படை எதுவாக இருந்தாலும் அது போதும். இவர்கள் வேட்டுவர்கள். விற்திறன்கொண்டவர்கள். இவர்களைக்கொண்டே நான் பாணரை வென்று மீள்கிறேன்” என்றான். சாத்யகியின் அருகே சென்று “என் வில்திறனை நீங்கள் அறியமாட்டீர்கள். எந்தை எக்களத்திலும் தோற்றதில்லை. நான் அவர் மைந்தன். என்னை கிருஷ்ணார்ஜுனன் என்றே அழைப்பார்கள் என் ஆசிரியர்கள். ஒரு வாய்ப்பு கொடுங்கள்…” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102235/