Tag Archive: பஷீர்

பஷீர் – கடிதம்

  ஜெ, நலம்தானே? மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் உங்களுக்கு எழுதும் கடிதம்.  கவி பஷீர் பற்றிய கட்டுரை படித்தேன் சமீபத்தில் என்னுடைய மலையாள நண்பனிடம் என்னுடைய கவி பயணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபொழுது நான் பஷீரைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டிருந்தேன். 2001 நவம்பரில் நான் என்னுடய ஒன்று விட்ட அண்ணனுடன் கவி சென்றிருந்தேன். சபரி மலை சீஸன். நாங்கள் இருவர் மட்டும்தான் அப்பொழுது விருந்தினர்கள். மூன்று நாட்கள் பஷீர் எங்களுடன் காட்டில் நடந்தார். அற்புதமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86611/

கடவுளின் காடு

சென்ற ஜனவரி 21, 2015 ஒரு செய்தியை வாசித்தேன், கேரளத்தில் கவி சூழுலாமையம் மூடப்பட்டது. காரணம் அங்கே வந்த பயணிகள் இருவரை காட்டுயானை தாக்கிக் கொன்றது. அவர்கள் குஜராத்தைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள். அவர்களின் இறப்பு குறித்து ஆய்வுசெய்துவருகிறார்கள் என்றது செய்தி. நான் பஷீர் அங்கே இல்லை என நினைத்துக்கொண்டேன் நான் நண்பர்களுடன் பலமுறை சென்ற இடம் கவி. எங்கள் நீண்டபயணங்களின் நடுவே ஓரிருநாட்கள் நீடிக்கும் குறுகிய பயணங்களையும் மேற்கொள்வோம். அவற்றில் முக்கியமானது மழைப்பயணம் என நாங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86276/

அம்மாவன்

[எம்.டி] அன்புள்ள ஜெ சார், திரு எம். டி. அவர்களின் புனைவுலகு குறித்த நீள் கட்டுரைக்கு மிக்க நன்றி. என் தாய்மொழி மலையாளமானாலும், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையானதால், எனக்கு பதின்பருவம் வரை மலையாளம் எழுதவும் படிக்கவும் தெரியாது. பின்னர் மவுண்ட் ரோடு தேவநேய பாவணர் நூலகத்தில் ஒரு நாள் எம்.டி யின் வானபிரஸ்தம் குறுநாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்து மிகவும் மன எழுச்சியுற்றேன். மூல மொழியிலேயே வாசிக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தால், கேரளத்தில் உள்ள உறவினர்களிடமிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63348/

பஷீர் : மொழியின் புன்னகை

எம்.ஏ.ரஹ்மான் தயாரித்த ‘பஷீர் த மான்’ ஆவணப்படம் பார்த்துவிட்டு இறங்கிய ரசிகர்களில் ஒருவரிடம் ‘படம் எப்படி?”என்று கேட்கப்பட்டபோது ”நல்ல படம். ஆனால் ஹீரோ சரியில்லை. மோகன்லால் நடித்திருக்கலாம்.” [ஒன்று]நூற்றாண்டு காணும் எந்த ஓர் எழுத்தாளனும் வேறுவழியில்லாமல் தொன்மமாக ஆகிவிட்டிருப்பான். பஷீரைப்பொறுத்தவரை அவர் வாழும்போதே அப்படி ஆகிவிட்டவர். அதற்கு அகக் காரணம் என்பது பஷீரின் ஆக்கங்களே. அவை முழுக்க முழுக்க அவரது குரலில் ஒலிப்பவை. பஷீரின் எப்போதைக்கும் உரிய பேசுபொருள் அவரேதான். ‘வினீதனாய சரித்ரகாரன்’ [பணிவுள்ள வரலாற்றாசிரியன்] எல்லாக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/285/

பஷீர் ஆவணப்படம்

அன்புள்ள ஜெ   பஷீர் பற்றிய மேலும்  ஒரு ஆவணப்  படம். httpv://www.youtube.com/watch?v=gkVreH6GW1w   அன்புடன் சிவா கோவை

Permanent link to this article: https://www.jeyamohan.in/20577/

பஷீர் காணொளி

அன்புள்ள ஜெ வைக்கம் முகமதுபஷீர், தகழி சிவசங்கரப்பிள்ளையின் பேட்டி, காணொளி எஸ்.ராம லக்‌ஷ்மணன் பஷீரும் தகழியும் நன்றாகவே முதிர்ந்து கனிந்திருக்கிறார்கள். கடைசிக்காலத்து பதிவுகள். அவர்கள் இருவரின் வேறுபட்ட உடல்மொழிகளைப் பார்ப்பது இனிய அனுபவமாக இருக்கிறது. தகழி அந்த கடைசிநாவலை எழுதவேயில்லை ஜெ [பஷீர் : சின்னவயசிலே பயில்வான் ஆகவேண்டுமென ஆசைப்பட்டேன். பின்னர் எழுத்தாளனாகவேண்டுமென்று. அதற்குக் காரணமுண்டு. வைக்கத்தில் என் வீட்டுக்கு முன்னால்தான் வைக்கத்து அஷ்டமி விழா நடக்கும். பெரும்கூட்டம் வரும். என் வீட்டு வாசல்படியில் புத்தகங்களை போட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19706/

பஷீர்-இரா.முருகன்– கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், சுகுமாரன் பஷீர் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரின் கட்டுரை ஒன்றை அண்மையில் படித்திருக்கக் கூடும். ‘.ன்றெப்பூப்பர்க்கோரானயுண்டாய்ர்ர்னு.’ கதையில் வரும் குழியானைக்கு ஆங்கிலம் தேடியதைக் குறிப்பிட்டிருப்பார் அவர். பஷீர்  தன் கதை மொழிபெயர்த்து வந்த எழுத்துப் பிரதியின் மார்ஜினில் சில  திருத்தங்களை ஒருமுறை செய்தார் என்றும் அவை மலையாள மூலத்தில் இல்லாமல்  புதிதாக இடம் பெற்றவை என்றும் மொழிபெயர்ப்பாளர் சொல்கிறார். இது இயல்பானது என்றே தோன்றுகிறது. ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கும் அவசரத்தில், நல்ல மொழிபெயர்ப்புகளில் கூட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/250/