Tag Archive: பவா செல்லத்துரை

வருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை

    பவா செல்லத்துரை எனக்கு சகஎழுத்தாளர் என்பதைவிட முப்பதாண்டுக்கால நண்பர் என்று சொல்வதே பொருத்தம். நான் 1987ல் அவரை அறிமுகம் செய்துகொண்டேன். இன்றுவரை நீடிக்கும் அணுக்கம் அவருடையது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இணக்கமான முகமாக ஒரு காலகட்டத்தில் பவா அறியப்பட்டார். கட்சியின் துணையமைப்பாக, வெறும்பிரச்சாரக்குழுமமாக இருந்த அதை அனைத்து இலக்கியவாதிகளுடனும் தொடர்புள்ளதாகவும் அனைத்து இலக்கியவிவாதங்களிலும் பங்கெடுப்பதாகவும் மாற்ற அவரால் முடிந்தது. அவர் திருவண்ணாமலையில் நிகழ்த்திய கலையிலக்கிய இரவு என்னும் நிகழ்ச்சி பின்னர் தமிழகம் முழுக்கவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93483

மனக்குளத்தின் கொலைவெறிகள்

பெரும்புகழ்பெற்ற வசவு இணையதளம் நான் தவறாமல் வாசிக்கக்கூடிய ஒன்று. தமிழில் அசலான நகைச்சுவையை அளிக்கும் இணையதளங்களில் இதுவே முதன்மையானது. அவர்களின் ஆழ்மன ஊடுருவல் கலை மிக நுட்பமானது. அனேகமாக நான் எழுதிய உற்றுநோக்கும் பறவை கதையில் வருவதற்கு நிகரானது. சமீபத்தில் அவர்கள் பவா செல்லத்துரை பற்றி எழுதியிருக்கும் இக்கட்டுரையில் என்னுடைய ஆழத்துக்குள் அவர்கள் ஊடுருவிச்செல்வதைக் கண்டபோது எங்கே மறுபக்கமாக வெளிவந்துவிடுவார்களோ என்றே அஞ்சினேன். ‘பாலுமகேந்திராவை உள்ளுக்குள் கொலைவெறியோடு ஜெயமோகன் பார்த்துக் கொண்டிருந்தார்’ என்று எழுதியிருக்கிறார்கள். எனக்கே கொஞ்சம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41912

இரு நிகழ்ச்சிகள்….

7-11-2013 அன்று கமல்ஹாஸனுக்குப் பிறந்தநாள். அவர் புதியதாகக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் குடியேறியிருக்கும் இல்லத்தில் சிறப்பு அழைப்பாளர்களான நண்பர்களுக்காக ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.நான் சென்னையில் இருந்தேன் என்றாலும் ஒரு தயக்கம். எனக்கு பார்ட்டிகளில் ஈடுபாடில்லை. முக்கியமான காரணம் அவற்றில் எப்படி நடந்துகொள்வது என்று நாட்டுப்புறத்தானாகிய நான் இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான். ஆனால் நண்பர் தனா என்னுடன் அவரும் வருவதாகச் சொல்லி உற்சாகமாகக் கிளம்பியதனால் செல்லலாமென முடிவெடுத்தேன். மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகக் காரில் இரவு ஒன்பது மணிக்கு கமல் வீட்டுக்குச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41693

ரீங்கா ஆனந்த் திருமணம்

சமீபத்தில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒரு குடும்பம் போல நின்று நடத்திய நிகழ்ச்சி என்றால் ரீங்கா -ஆனந்த் உன்னத் திருமணத்தைச் சொல்லவேண்டும். இருவருமே வாசகர்குழும உறுப்பினர்கள். ரீங்காவின் அம்மா உஷா மதிவாணன் கனடாவில் இருக்கிறார். சென்றமுறை நான் கனடாவுக்குச்சென்றபோது அவர் இல்லத்தில்தான் தங்கியிருந்தேன். ரீங்காவுடன் அப்போதுதான் பழக்கம். அறிவார்ந்த விஷயங்களில் ஆர்வமும் வாசிப்புமுள்ள வெகுசில பெண்களில் ஒருவர். ஆனந்த் உன்னத் என் நண்பர், வாசகர். எங்கள் அரங்குகளில் பங்கேற்றிருக்கிறார். கணிப்பொறித்துறையில் பெங்களூரில் பணியாற்றுகிறார். அவரிடம் ரீங்கா பற்றி சொன்னேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22392

பவாவும் யோகியும் நானும்

1992ல் நான் நண்பர் பவா செல்லத்துரையுடன் சென்று யோகி ராம் சுரத் குமாரைச் சந்தித்தேன். சின்னஞ்சிறிய ஒரு திண்ணை. கிட்டத்தட்ட பாழடைந்தது. அதில்தான் அவரது வாசம். உள்ளும் வெளியும் பெருங்கூட்டம். கைகளில் பூசைத்தட்டுகள். ‘யோகி ராம் சுரது குமார்!’ என்ற பஜனை. நாங்கள் வெளியே பிதுங்கி நின்றிருந்தோம். அப்போது யோகியே பவாவை அடையாளம் கண்டு ‘பவா…வா வா’ என்று கூவினார். கூட்டம் பிளந்து வழியாகியது. உள்ளே சென்று இயல்பாக அவர் முன் அமர்ந்துகொண்டோம். நான் அன்று ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8889