Tag Archive: பவமானன்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23

[ 12 ] “இன்று நீங்கள் ஆசிரியரை சந்திக்கச் சென்றபோது அங்கு நிகழ்ந்துகொண்டிருந்ததை இயற்கல்வி என்கிறார்கள்” என்று பவமானன் சொன்னான். “ஸ்வாத்யாயம் செய்யும் மாணவர்களை ஆசிரியர் தெரிவு செய்கிறார். அவர்களுக்குரிய நூல் ஒன்றை பரிந்துரைக்கிறார். ஒவ்வொருநாளும் இரவிலோ புலரியிலோ அவர்கள் அவரை தனியாக சந்திக்கிறார்கள். அவர் ஒரு பாடலை அவர்களுக்கு கற்பிக்கிறார். அடுத்த அமர்வு வரை அவர்கள் எவரிடமும் எதுவும் பேசக்கூடாது. எவர் சொல்லையும் கேட்கவும் கூடாது. நூலாயவோ இசைகேட்கவோ ஒப்புதலில்லை. பணிகளென எதையும் ஆற்றலாகாது. காட்டுக்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89672/

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22

[ 10 ]  புலர்காலைக்கு முன்னரே காலனுடன் நகுலன் வந்து தருமனை எழுப்பினான். மரவுரித்தூளியில் துயின்றுகொண்டிருந்த தருமன் எழுந்து இருளுக்குள் கையில் சிறு நெய்யகல்சுடருடன் நின்றிருந்த இருவரையும் நோக்கியதுமே நெஞ்சு பெருமுரசென அறையப்பட்டார். “என்ன ஆயிற்று?” என்றார். “விதுரர் இருக்குமிடம் தெரிந்துவிட்டது” என்று நகுலன் சொன்னதும் உள்ளம் அலை பின்வாங்கி குளிர்ந்து உறைந்தது. ஒரு கணத்திற்குள் தன்னுள் உறைந்துகிடந்த அத்தனை அச்சங்களையும் பேருருக்கொண்டு பார்த்துவிட்டார். “எங்கிருக்கிறார்?” என்றார் சீரான குரலில். எழுந்து உடையை சீரமைத்தபடி “உண்ணாநோன்பிருக்கிறாரா?” என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89660/

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 21

[ 8 ] “அரசே, புழு பறப்பதைப் பார். நெளியும் சிறுவெண்புழுவுக்குள் சிறகு எவ்வடிவில் உள்ளது? அதன் கனவாக. அக்கனவு அதற்குள் பசியென்று ஆகிறது. பசி அதை கணம் ஓயாது நெளியச்செய்கிறது. நெளிந்து நெளிந்து அது இறகுகளை கருக்கொண்டபின் கூட்டுக்குள் சுருண்டு தவமியற்றுகிறது. உடைத்தெழுந்து வண்ணச்சிறகுகளுடன் வெளிவந்து காற்றிலேறிக்கொள்கிறது. மண்ணுடன் மண்ணென்றாகிய புழுவில் விண்ணகம் குடிகொள்ளும் விந்தை இது என்று அறிக!” ஐதரேயக்காட்டின் முதன்மை ஆசிரியர் திவாகரர் சொன்னார். “சிறகென்பது பறக்கத் துடிக்கும் விழைவு ஒரு பருப்பொருளானது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89622/

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 21

பகுதி நான்கு : பீலித்தாலம் [ 4 ] திருதராஷ்டிரனின் தோளில் இருந்து இறக்கிவிடப்பட்ட காந்தாரியை அரண்மனைச்சேடிகள் வந்து பிடித்துக்கொண்டனர். அவர்கள் விரித்துப்பிடித்த திரைக்குள் அவள் நின்று வெளியே எழுந்துகொண்டிருந்த ஆரவாரத்தை திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தாள். மெல்லிய திரை வழியாக வெளியே நிகழ்பவை தெரிந்தன. களமுற்றத்திலிருந்த பன்னிரு சடலங்களை அகற்றினர். இருபத்தேழு பேர் நினைவிழந்து கிடந்தனர். பதினெண்மர் எழமுடியாது கிடந்து முனகி அசைந்தனர். அவர்களை அகற்றி தரையில் கிடந்த அம்புகளையும் மரச்சிதர்களையும் விலக்கினர். களமுற்றத்து ஓரமாக ஒரு பீடத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46278/

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12

பகுதி மூன்று : புயலின் தொட்டில் [ 2 ] சந்திரகுலத்து அரசன் யயாதியின் இரண்டாவது மைந்தனாகிய துர்வசு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததனால் தன் தந்தையால் குலமிழந்து நாடு துறக்கும்படி தீச்சொல்லிடப்பட்டான். அச்சொல்லைக் கேட்டதும் கண்ணீருடன் அரண்மனையைவிட்டு வெளியே வந்து சந்திரபுரியின் கோட்டைவாயிலில் நின்றான். ஒரேசொல்லில் அன்றுவரை அவனிடமிருந்த அனைத்தையும் தந்தை திரும்பப்பெற்றுவிட்டதை உணர்ந்தான். அரசும் குலமும் குடும்பமும் கனவெனக் கலைந்து மறைந்தன. வானேறிச்செல்லவோ பாதாளத்துக்குச் செல்லவோ அவனுக்கு மனமிருக்கவில்லை. ஆகவே நான்குதிசைகளும் அவன் முன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45861/