Tag Archive: பழையபாதைகள்

பழையபாதைகள்

      என் அப்பாவும் அம்மாவும் இறந்தபின் நான் சொந்த ஊரான திருவரம்புக்குச் சென்றதேயில்லை. இருபத்தாறு வருடங்களாகின்றன. நாகர்கோயிலில் நான் குடியிருக்கும் இடத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தூரம்தான், ஒருமணிநேரத்தில் சென்றுவிடலாம். ஆனால் என் கால்கள் அந்த எல்லையைத் தாண்டுமா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அப்பாவை எரியூட்டியபிறகு காலையில் ஒரு தோல்பையை தோளில் தூக்கியபடி தலைகுனிந்து அந்தச் சின்னஞ்சிறு ஆற்றோர கிராமத்தைவிட்டு விலகிச் சென்றேன். அப்போது வடகேரளத்தில் காசர்கோட்டில் வேலைபார்த்தேன். அங்கே திரும்பிச்செல்லவும் மனமில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29140