Tag Archive: பழசிராஜா

பழசிராஜாவுக்கு எட்டு விருதுகள்

கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பழசிராஜா படம் எட்டு விருதுகள் பெற்றிருக்கிறது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7067

பழசிராஜா சில பண்பாட்டு ஐயங்கள்

அன்புள்ள ஜெயமோகன், நானும் பழசி ராஜா பார்த்தேன். ஒரு இடத்தில் “தேவாரம் ஓதுவது” என்று வசனம் வருகிறது. அடுத்து மம்முட்டியின் வீட்டில் “ஆண்டாள் திருப்பாவை” ஒலிக்கிறது..ஏது திருவாசகம் கேரளாவில்?.மலையாள வசனத்தை அப்படியே விட்டிருக்கலாமே?அடுத்து அந்த திருப்பாவை பின்னணி,(இது உங்கள் கையில் இல்லை என்று தெரியும்) எப்படி வந்தது.அப்படியே மலையாள பின்னணியை வைத்திருக்கலாமே. பாடல்கள் மலையாளமே மண் மணத்தோடு இருக்கிற்து. தமிழ் “அபார்ட்”ஆகி விட்டது.காரணம் தமிழ்படுத்தல். நன்றி.   அன்புள்ள ரவிசங்கர், தேவாரம் என்ற சொல் கேரளத்திலும் பிரபலம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5703

பழசிராஜா கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமா? நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதுகிறேன். ஆனால் தினந்தோறும் உங்கள் இணையப் பதிவுகளைப் படிப்பதால் மனதளவில் உரையாடியபடியேதான் இருந்திருக்கிறேன். காந்தி பற்றிய தொடர் கட்டுரைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது பலமுறை உங்களுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்து ஒவ்வொரு முறையும் இரண்டாவது வரியோடு நிறுத்தியிருக்கிறேன். ‘பிடித்திருக்கிறது.. நன்றாக இருக்கிறது.. பயனுள்ளதாக இருக்கிறது’ என்கிற சம்பிரதாய வரிகளுக்குமேல் பெரிதாக நான் ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை என்பதாலேயே எழுதவில்லை. வரலாற்றுக் காந்தியிலிருந்து நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்குமான ஒரு புதிய காந்தியை செதுக்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5298

பழசிராஜா ஒரு மதிப்புரை

இந்தியச் சுதந்திரப் போராட்டம் என்பது சுயராஜ்யம் கேட்கும் மக்கள் இயக்கமாக மாறுவதற்கு முன்பாக சிறு சிறு மன்னர்கள் தத்தம் ராஜ்யங்களின் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளும் சிறு சிறு போர்களாகவே ஆரம்பித்து பின்னால் மாபெரும் வெள்ளமாக, பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்த ஒன்று.   சுதந்திரப் போராட்டம் என்னும் பிருமாண்டமான வரலாற்று நிகழ்வை வெறும் காங்கிரஸ் தலைமையிலான சுதந்திரப் போராட்டமாகச் சுருக்குவது மாபெரும் வரலாற்றுப் பிழை.  வரலாற்றின் பக்கங்களை இன்னும் நெருக்கமாகச் சென்று புரட்டிப் பார்க்கும் பொழுது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5207

பழசிராஜா இணைப்புகள்

வணக்கம் உங்கள் பார்வைக்கு எனது வலைப்பூவை கொண்டுவர நினைத்தேன். ஆனால் நீங்கள் அதை உங்கள் புகழ்பெற்ற வலைப்பூவில் அறிமுகம் தந்து எனது பொறுப்பையும் சுமையையும் அதிகரித்து விட்டீர்கள் :-) கூடவே சில அச்சங்களும் பற்றிக்கொண்டிருக்கிறது. இப்பொழது பழசி ராஜாவைப்பற்றி எழுதியுள்ளேன். இதுவும் உங்கள் பார்வைக்கு தான். சிரமத்திற்கு மன்னிக்கவும். www.agilan.net அகிலன்     அன்புள்ள ஜெ, உங்கள் பரிந்துரையில் அகிலன் அவர்களின் வலைப்பூவைப் படித்தேன். அவருடைய கருத்துகளுடன் பெரும்பாலும், கிட்டத்தட்ட முழுவதும் ஒத்துப்போகிறேன். ஆச்சரியம்தான் :)) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5140

பழசி ராஜா தள்ளிவைப்பு

தமிழகத்தில் புயல்சின்னம் காரணமாக பழசி ராஜா வெளியாவது நவம்பர் இருபதுக்கு தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்புத் தரபில் சொன்னார்கள். தமிழ்கத்தில் மழை பொதுவாகவே வசூலை பாதிக்கிறது, காரணம் மழையில் சாலைகள் சீரழிந்துவிடுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் உருவாவதும் வழக்கம். வேறு வழியில்லை நவம்பர் இருபதுக்கு இன்னமும் பத்து நாட்கள்… ஜெ அன்புள்ள ஜெ   பழசிராஜாவின் ‘குந்நத்தே கொந்நய்க்கும்’ என்ற பாடலின் காட்சித்தொகுப்பை இணைத்திருக்கிறேன். மிகச்சிறப்பாக எடுக்கப்பட்ட பாடல் இது. வீடியோ நன்றாக இல்லை என்றாலும் ·ப்ரேம்களில் இருக்கும் அழகையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4972

பழசிராஜா முன்னோட்டம்

http://movies.sulekha.com/tamil/pazhassi-raja/trailers/default.htm அன்புள்ள ஜெ.எம்,   பழசிராஜாவைப்பற்றிய உங்கள் குறிப்பில்  மலையாளத்தின் எக்காலத்திலும் சிறந்தபாடல்களில் ஒன்றாக நீங்கள்  ஒரு பாடலைச் சொல்லியிருக்கிறீர்கள். அது எது? குன்னந்த்தே கொந்நய்க்கும் என்ற சித்ரா பாடிய பாடலா? அல்லது ஆதியுஷஸ் சந்திய என்ற ஜேசுதாஸ் பாடலா?     இருபாடல்களுமே சிறப்பாக உள்ளன. இளையராஜாவின் மேதமைக்குச் சான்றாக உள்ளன.    சுரேஷ்.எஸ்   அன்புள்ள சுரேஷ்   பாடல்களைப்பற்றிய என் கருத்துக்களை நான் சொல்லவில்லை. நான் அப்படத்தின் பகுதியாகச் செயல்பட்டவன் என்றமுறையில் அப்படிச்சொல்வது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4910

பழசிராஜா வெள்ளிக்கிழமை…

பழசிராஜா மலையாளத்தில் தீபாவளியன்று வெளியாகியது. கடந்த பத்தாண்டுகளில் கேரளத்தில் வெளியான எந்த ஒரு திரைப்படத்தைவிடவும் அதிகமான வசூல் இந்தப்படத்துக்கு இதற்குள்ளாகவே வந்துவிட்டது என்று தயாரிப்பாளர் சொன்னார். நேற்றுடன் ஏறத்தாழ ஒன்பதுகோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.   அதன் விளைவாக கேரளத்தில் வெளியான மற்ற எல்லா படங்களும் முழுமையாகவே தோல்வியடைந்தன. மோகன்லால் நடித்த ஒருபடம் அரைக்கோடியைக்கூட தாண்டவில்லை என்றார்கள். காரணம் மலையாளிகளின் மன அமைப்பு. அவர்கள் ஒருபடம் பார்த்தால் உடனே இன்னொரு படத்தைப் பார்க்க அரங்குக்குச் செல்வதில்லை.   இப்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4904

பழசிராஜா, கடிதங்கள்

அன்புள்ள ஜெ, பழசிராஜாவைப்பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன். இந்திய சுதந்திரவேள்வியிலே தொடக்கப்புள்ளிகளாக அமைந்த பல வீரர்களை நாம் அறிவதேயில்லை. தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், பழசி ராஜா மாதிரி ஆந்திராவிலே அல்லூரி சீதாராம ராஜு முக்கியமான ஆரம்பகால சுதந்திரப் போராட்ட வீரர். அல்லூரி சீதாராம ராஜு 1897ல் பிறந்தவர். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மொகல்லு கிராமத்தில் பிறந்தவர். 1922 முதல் 1023 வரை பிரிட்டிஷாரை எதிர்த்து தன் பழங்குடி இனக்குழுவை திரட்டி ஒரு போரைநடத்தினார். அந்த போராட்டம் பிரிட்டிஷாரால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2737

பழசி ராஜா

கேள்வி: முதல்முறையா ஒரு டப்பிங் படத்துக்கு வசனம் எழுதறீங்கபோல? பதில்: ஆமா. உண்மையிலே எனக்கு டப்பிங் வசனம் எழுதறதைப்பத்தி ஒண்ணுமே தெரியாது. அதனால இந்தபடத்தோட சம்பந்தப்பட்டவங்க கேட்டப்ப நான் ரொம்பவே தயங்கினேன். ஆனா இந்தமாதிரி ஒரு பீரியட் படத்தோட வசனங்களை கொஞ்சம் சரித்திரம் தெரிஞ்ச ஒருத்தர்தான் தமிழில செய்ய முடியும்னு நெனைச்சு எங்கிட்ட எனக்கு நெருக்கமானவங்க சொல்லி கட்டாயப்படுத்தினாங்க. அதனால ஒப்புக்கொண்டேன். செஞ்சு பாக்கிறப்ப சிறப்பா செய்ய வேண்டிய ஒரு வேலைங்கிற எண்ணம் வந்திருக்கு…இந்த மாதிரி ஒருபடத்தோட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2698