Tag Archive: பலா

சக்கை

ரப்பர் குமரிமாவட்டத்தை ஆக்ரமித்து மூழ்கடிப்பதற்கு முன்பு மாமரங்களும் பலாமரங்களும் தோட்டங்களில் தங்கள் பாட்டுக்கு வளர்ந்து தழைத்து ஆனியாடி மாசங்களில் காய்த்தன. ஆனியாடி என்பது பஞ்ச மாசம் வேறு. நடவு முடிந்து மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஆடிச்சாரலின் குளிருக்கு கையதுகொண்டு மெய்யது பொத்தி ஆளாளுக்கு குந்தி அமர்ந்திருக்கும் காலம். கடைசி நெல்லையும் காயவைத்து விதைத்திருபபர்கள். மரச்சீனி பருவமடைந்திருக்காது. காய்ச்சில் உட்பட எல்லா கிழங்கும் மழையில் ஊறி பிஞ்சும் நஞ்சுமாக இருக்கும். ஆகவே அப்போது காய்க்க ஆரம்பிக்கும் பலா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/516