Tag Archive: பர்சூர்

குகைகளின் வழியே படங்கள்

இந்தப்பயணத்தில் படங்கள் இணையத்தில் ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. பதிவை நானே இணையத்தில் ஏற்றுகிறேன். பதிவை ஊரில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்பினேன். அவர்கள் அதைப் பதிவுடன் ஏற்றுவதில் போதிய ஊக்கம் காட்டவில்லை. ஆகவே பல பதிவுகளுக்குப் படங்கள் மிகத் தாமதமாகவே வந்தன. பயணக்கட்டுரைகளை வாசிக்கும் நண்பர்கள் படங்கள் இல்லாததைப் பெரிய குறையாகச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தனர். இனிமேல் படங்களைக் கூடுமானவரை நாங்களே ஏற்றலாமென நினைக்கிறேன் [சிவன்கோயில் பர்சூர்] [சின்ன கணபதி பெரிய கணபதி பர்சூர்] [பர்சூர்- சிற்பங்கள்] [பர்சூர் சிற்பங்க] …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33760

குகைகளின் வழியே – 7

இன்று காலை தண்டேவாடா விடுதியில் எழுந்தோம். காலையில் முதல் செய்தியே நேற்று நாங்கள் டீ குடித்த இடத்தருகே ஒரு போலீஸ்-மாவோயிஸ்டு மோதலில் ஒரு மாவோயிஸ்டு கொல்லப்பட்டார் என்பதுதான்.கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இந்த தண்டகாரண்யக் காடுகள் போல உயிரசைவு இல்லாமல் பிரமித்து நிற்கும் மரங்களின் வரிசையை நான் எங்கும் கண்டதில்லை. மனத்தை பிரமிக்கச்செய்யும் மௌனம் நிறைந்து கனத்து நிற்கும் காடு காலையில் கிளம்பி பர்சூர் என்ற ஊருக்குச் செல்ல ஆரம்பித்தோம். தண்டேவாடாவில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவுதான். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33736